Daily Archive: March 6, 2019

விவாதப் பட்டறை, ஈரோடு

பொதுவாக நண்பர்கள் சந்திப்பு, விவாதங்களின்போது விவாதத்தின்  பொதுவான நெறிகள், வழிமுறைகளைப்பற்றி பேச்சு எழுவதுண்டு. இவை உலகமெங்கும் கல்வித்துறையில் பரிந்துரைக்கப்படுவனவே. ஆனால் நம் கல்விமுறையில் இவற்றுக்கு இடமில்லை. கல்லூரிகளில்தான் தாங்கிக்கொள்ளவே முடியாத விவாதம் நிகழும். ஓரளவு உயர்நிர்வாகத்துறையில், மக்கள்தொடர்புத்துறையில் இந்த நெறிகள் இன்று பயிற்றுவிக்கப்படுகின்றன. ஊட்டி நித்யா குருகுலத்திற்குச் சென்று நான் கற்றுக்கொண்ட முதல் வழிமுறையே எப்படி விவாதிக்கவேண்டும் என்பதுதான். குறிப்பாக நேர் விவாதங்களில். விவாதங்களின் நெறிகளைப் பேணாதவர்களிடம் விவாதிக்கவே கூடாது என்பது அதில் முதல் நெறி. அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118939

சமணத்தில் பெண்கள்

சமணம்,சாதிகள்-கடிதம் அன்புள்ள ஐயா சமீபத்தில் ஈரோடு அருகே விஜயமங்கலத்தில் உள்ள “சந்திரப்பிரபா தீர்த்தங்கர்” ஆலயத்திற்கு சென்றிருந்தேன். அங்கே ஒரு தூணிலிருந்த சிற்பத்தைப் பற்றி விளக்கம் கேட்ட போது,அது “புல்லப்பை” என்ற பெண் துறவியின் சிற்பம் என்றார் கோயிலைப் பராமரிக்கும் முதியவர். மேலும் அதைப் பற்றி தேடிய போது, ஈரோடு புலவர் ராசுவின் ஒலிக்குறிப்பு ஒன்றைக் கேட்கமுடிந்தது. “பெண்களுக்கு சமண மதத்தில் வீடுபேறு என்பதில்லை. அதனால் பெண்கள் உண்ணாநோன்புற்று மறுபிறப்பில் ஆணாகப் பிறந்து துறவு பூண்டு வீடுபேறடைய வேண்டி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118686

பால் – இறுதியாக…

பால்- பாலா கடிதம் அன்பின் ஜெ…. நலம் விழைகிறேன். நீர்க்கூடல்நகர் – 1 “இந்தியா முழுக்க இன்று அருந்தப்படும் பால் பற்பல லட்சம் லிட்டர். அத்தனைபால் கறக்கும் மாடுகள் எங்கிருக்கின்றன … இத்தனை பால் வருகிறது?பால்கறக்கும் மாடுகள், அவற்றுக்கான வைக்கோல், அவை போடும் சாணி எங்கே? “ என் பள்ளி நாட்களில் (1992 வரை) எங்கள் வீட்டில் பதினைந்துக்கும் குறையாத எண்ணிக்கையில் மாடுகள் இருக்கும். இப்போது அது மூன்று அல்லது நான்கு. ஆனால்பால் உற்பத்தி அதே அளவுதான். ஒரு நாட்டுப்பசு அதிகபட்சம் 3 லி பால் கறக்கும். ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118704

டு லெட்டும் விமர்சகர்களும் – கடலூர் சீனு

இனிய ஜெயம், பொதுவாக பிரமாதமாக டெம்ப்ட் கொடுக்கப்பட்டு, வெளியாகி அதை விட பிரமாதமாக அப்படம் தோல்வி கண்ட பிறகு, படப்பிடிப்பு துவங்கும் முன் டெம்ப்ட் கொடுப்பதற்காக, வெகுஜனப் பத்திரிகைகளுக்கு அளிக்கப்படும் பேட்டிகளை, பின்னால் தேடி சென்று வாசிப்பது எனது பொழுது போக்குகளில் ஒன்று . உதாரணமாக, சுறா எனத் திமிறத் தயாராகி விட்டார் விஜய். சுறா சொல்லிப் பாருங்களேன். வேகம், மூர்க்கம், ஓய்வே அற்ற சுறுசுறுப்பு, தான் இருக்கும் கடலை ஆளும் ராஜா இன்னும் என்னென்னவோ மனசுல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118696

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-72

சுதசோமன் பீமனை நோக்கி விரைந்துசெல்ல அவனுடன் சர்வதனும் சுருதசேனனும் இருபுறங்களிலுமாக வந்தனர். பீமனை அறைந்து பின்னடையச் செய்துகொண்டிருந்தன கர்ணனின் அம்புகள். அவன் தேர் முழுக்க அம்புகள் தைத்து நாணல்கள் என செறிந்து நின்றிருந்தன. அவன் உடலெங்கும் அம்புகள் தைத்து அவன் போரிட்ட அசைவுகளுக்கேற்ப உதிர்ந்தன. சுதசோமன் சென்ற விரைவிலேயே தந்தையுடன் சேர்ந்துகொண்டு அம்புகளால் கர்ணனை அறைந்தான். மறுபக்கம் சர்வதனும் சேர்ந்துகொண்டான். சுருதசேனன் பீமனின் பின்புறத்தையும் வானையும் காத்து நின்றான். அவர்கள் வந்ததும் பீமன் சற்று ஆற்றல்கொண்டு அம்புகளால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118666