Daily Archive: March 3, 2019

சொற்களை தழுவிச்செல்லும் நதி

கவிதைகளில் சொற்களின் நடுவே ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கவேண்டும் என்று ஒரு கூற்று உண்டு. இளம் வயதில் அந்த வரியை வாசிக்கையில் நான் நேரடியாகவே அந்தக் காட்சியை கற்பனைசெய்துகொண்டேன். ஒவ்வொரு சொல்லும் ஒரு பாறை. இன்னொரு பாறை தாவிக்கடக்கலாம் என்று ஆர்வத்தையும் விழுந்துவிடுவோமோ என்னும் அச்சத்தையும் ஒருங்கே உருவாக்கும் தொலைவில். நடுவே பெருநதி. நுரையுடன் ஆவேசமாக கொந்தளித்துச் செல்வது. அந்த வரி நெடுங்காலம் நினைவில் நின்றதனால்போலும் கவிதை நாம் அர்த்தப்படுத்திக் கொள்வது என்னும் கூற்று எப்போதுமே எனக்கு அபத்தமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118594

பால் அரசியல்

பால் அரசியல் -நக்கீரன் வெளியீடு-  வாங்க அன்புநிறை ஜெ, தங்கள் தளத்தில் பால் தொடர்பாக நடைபெற்று வரும் தொடர் எதிர்வினைகளின் வரிசையில் என் கடிதமும் அமைகிறது. பால் தொடர்பாக  நக்கீரனின் பால் அரசியல் எனும் புத்தகத்தை மையமாக கொண்டு இக்கடிதம், பாலின் நிறம் வேண்டுமானால் வெண்மையாக இருக்கலாம் ஆனால் அதன் பின்னணி கறை படிந்தது என்பதை விளக்கும் முயற்சியே இந்நூல் என நூலின் பொருளை விளக்குகிறார் ஆசிரியர். இந்நூல் தாய்ப்பால், புட்டிப்பால் மற்றும் மாட்டுப்பால் என பிரிக்கப்பட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118689

வெள்ளியங்கிரியில்…

அன்புள்ள ஜெ மேற்குத் தொடர்ச்சி மலைஅருகில் வாழ்பவர்கள் பேறு பெற்றவர்கள். நாள் தோறும் வேளிமலையோ அல்லது குருடிமலையோ ஒளி சூடி நிற்பதைக் காணமுடியும். சென்ற வாரம் நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலை உச்சிக்கு சென்று  திரும்பினேன். ஏழு மலைகள் . ஆறாம் மலையின் முடிவில் சிறிய சுனை. ஆண்டிசுனை. பெயர் தெரியாத ஆண்டிகளே இம்மலைகளின் ,நிலத்தின் வற்றாத பண்பாட்டு ஊற்று போலும். கூட்டம் ஆரம்பிக்கவில்லை. நள்ளிரவில் வெகு சிலர் மட்டும் அங்கே நின்றிருந்தோம்.  . தலைக்கு மேலே தண்ணிலவு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118675

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-69

ஏகாக்ஷர் சொன்னார்: சர்வதன் கடோத்கஜனின் வலப்புறம் நின்று போரிட்டுக்கொண்டிருந்தான். அன்று மாலை போர் தொடங்கும்போதே அவனிடம் பீமன் எந்நிலையிலும் கடோத்கஜனின் வலப்புற நிலையை ஒழியலாகாது, அவன் அம்புகள் உடனிருக்க வேண்டும் என்று ஆணையிட்டிருந்தான். சொல்சூழ் அவையிலிருந்து வெளிவந்து அவனை ஒருமுறை நோக்கியபின் சில அடிகள் முன்னால் சென்று வேறெங்கோ பார்த்தபடி பீமன் நின்றான். அது அவர் தன்னிடம் பேசுவதற்கான அழைப்பென்பதை உணர்ந்து அருகே சென்று குரல் கேட்கும் தொலைவில் கைகட்டி நின்றான் சர்வதன். அவனை நோக்காமல் “இப்போர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118559