Monthly Archive: March 2019

திரைப்படம் – ஏற்பின் இயங்கியல்

கட்டணக் கழிப்பறை, பேப்பர்மேன், கர்சீப் விற்பவர்.. ரங்கநாதன் தெருவின் குட்டிக் கதைகள்..! அங்காடித் தெரு சுவாரஸ்யம் – #9YearsOfAngadiTheru 24 ஆம் தேதி வீட்டிலிருந்து கிளம்பி வெவ்வேறு ஊர்களிலாக அலைந்துகொண்டிருந்தேன். தனிமை. எவரிடமும் பேசாமல் வாயின் தசைகள் கிட்டத்தட்ட உறைந்துவிட்டிருந்தன. செல்பேசியை பெரும்பாலும் அணைத்தே வைத்திருந்தேன். நேரம் பார்க்க செல்பேசியை இயக்கியபோது வசந்தபாலனின் குறுஞ்செய்தி வந்தது.  #9YearsOfAngadiTheru. விகடன் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அது ஓர் விந்தையான சரடால் என்னை மீண்டும் இவ்வுலகுடன் இணைத்தது. சிலநாட்களுக்கு முன்னர் நான்கடவுள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119728

சிவவடிவங்கள்

இனிய ஜெயம் பயணமொன்றில், நண்பர் அனுப்பி வைத்திருந்த ஈஷா மகா  சிவராத்திரி கொண்டாட்டம் கண்டேன். ‘இன்றைய காலத்துக்கான’ மதக் கொண்டாட்டம் இது என நினைக்கிறேன்.  நடிகையர்கள் ஆட்டம் பாட்டம் பங்களிப்புடன்,  அந்த சூழலுக்கு சம்பந்தம் அற்ற சினிமா பாடல்கள் [நான் கடவுள் படத்தின் சிவோகம் பாடல் சூழலுக்கு சம்பந்தம் உள்ள  பாடல் அந்த வகையில்]  உச்ச கதியில் முழங்கிக் கொண்டிருந்தன.   அவ்வப்போது பிரபல பாடகர்கள் அல்லாவின் அருள்,கர்த்தரின் கருணை எல்லாம் வேண்டிப் பாடி, சாதகர்கள் பக்தர்கள் இவர்களுடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119618

சீ.முத்துசாமியின் மலைக்காடு – காளி பிரசாத்

எழுச்சியின்மையின் கலை – சீ.முத்துசாமியின் புனைவுலகு சீ.முத்துசாமியின் மலைக்காடு- ஹரன் பிரசன்னா அன்புள்ள ஜெ, ஒரு வருடம் கழித்து மீண்டும் எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்கள்.  அவரின்  ஒரு புதிய நாவலான மலைக்காடு நாவலை வாசித்தேன். சீ.முத்துசாமியின் சிறுகதைகள் 1977ல் எழுதப்பட்டு காலத்தால் பல்லாண்டுகள் முந்தியிருந்தாலும், நான் படித்தது என்னவோ நாற்பதாண்டுகள் கழித்து 2017ல் விஷ்ணுபுரம் விருது சமயத்தில்தான். அவரின் நாவல்களும் சிறுகதைகளும் ஒரு குறிப்பிட்ட மனநிலைகளில் சொல்லப்படுபவையாகவே முதலில் எனக்குத் தோன்றின. சில சமயங்களில்  அவை ஒரு புகார் போல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119602

குரு நித்யா சந்திப்பு – கடிதங்கள்

ஊட்டி குரு நித்யா இலக்கிய முகாம் பற்றி அன்புள்ள ஜெயமோகன், 2013ம் ஆண்டு என நினைக்கிறேன். அந்தாண்டு மட்டும் காவிய அரங்கு ஏற்காட்டில் நடந்தது. அதில்தான் உங்களுடன் 2 நாட்கள் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்று திரும்பிப் பார்க்கையில் அதன் மதிப்பு மேலும் மேலும் கூடிக்கொண்டே வருகிறது. அந்தந்த கணங்களில் வாழ்ந்த உங்கள் ஆளுமையை நேரில் உணர்ந்த தருணங்களை எண்ணும் போதெல்லாம் மனம் பெரும் கிளர்ச்சி அடைகிறது. வாசகர்களாகிய எங்களுக்கு அதெல்லாம் பெரும் பேறு. குறிப்பாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119529

கி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு

திராவிட இயக்கம் மேலிருந்த தீண்டாமைக்குத் தமிழிலக்கியவாதிகளுடைய பிராமணியப் பார்வைதான் காரணம்- கி.ராஜநாராயணன் பேட்டி கி.ராஜநாராயணனிடம் சமஸ் திறமையாக வார்த்தை பிடுங்கியிருக்கிறார். எப்போதுமே பெரியவர் சாமர்த்தியமாக பேசக் கற்றவர். இப்போதும் கேட்டவருக்கு என்ன தேவை என புரிந்துகொண்டிருக்கிறார். அதை பேட்டி என்பதை விட மனுவை வாசித்துக்காண்பித்து கையெழுத்து வாங்குவது என்று சொல்லலாம்.  கிரா கொஞ்சம் மழுப்பி, ஊடே கொஞ்சம் தன் கருத்தையும் சொல்லி, கடந்து சென்றிருக்கிறார். கி.ரா கூடுமானவரை சி.என்.அண்ணாத்துரை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. கடைசியாக சமஸே ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119621

ஈழத்திலிருந்து ஒரு குரல்

தமிழகத்தில் ஒவ்வொரு தரப்புகளுக்குமிடையில் முரண்பாடுகளும் கோட்பாட்டு ரீதியான வேறுபாடுகளும் வெவ்வேறான அரசியல் நிலைப்பாடுகளும் உண்டு. அது அவர்களுடைய உள் வீட்டுப் பிரச்சினை. ஆனால் கருத்துலகம் என்ற வகையிலும் கோட்பாடு என்ற வகையிலும் அங்கே நிலவுகின்ற பிரச்சினைகள் ஈழச்சூழலிலும் பிரதிபலிக்கும் என்று ஒரு நியாயத்தை எவரும் சொல்லக்கூடும். அதில் உண்மையும் உண்டு. உதாரணமாக பெரியாரியம், தலித்தியம் மற்றும் இன அடையாளம் குறித்த பிற அம்சங்களில். ஆனால், அந்தக் கருத்து நிலையைக் கொள்வது வேறு. அங்குள்ள அணிகளுடன் தம்மை அடையாளப்படுத்தி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119658

சந்திப்பு, உரையாடல் – கடிதங்கள்

கொல்லிமலைச் சாரலும் முதல் மாங்காயும் எழுதுக! அன்புள்ள ஜெ, வணக்கம். நான் தங்களது புதிய வாசகர் சந்திப்பில் கலந்து கொண்டேன். பள்ளி பருவதிலேஆர்வமாக புத்தங்களை படித்த எனக்கு,நான் படித்த சுசீந்திரம் பள்ளியில் சிறந்த புத்தங்களையாரும் அறிமுகம் செய்து வைக்கவில்லை.எனக்கு கிடைத்த சில நாவல்கள் பொழுதுபோக்குஅம்சம் நிறைந்தவைகளாக மட்டுமே இருந்தன. பள்ளி பருவத்தில் அதன் மீது மிகப் பெரியஈர்ப்பு ஏற்ப்பட்டது. நன்றி,பள்ளியில் நான் பல பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளிலும் கலந்து கொண்டு பலபரிசுகளைப் பெற்று உள்ளேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119519

அனோஜனின் யானை – கடிதங்கள் – 6

யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை ஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்- அனோஜன் பாலகிருஷ்ணன் ஒருதுளி இனிமையின் மீட்பு அலைதலும் எழுத்தும்- அனோஜன் பாலகிருஷ்ணன் அன்புள்ள ஜெ பொதுவாக ஈழ இலக்கியம் மலேசிய இலக்கியம் ஆகியவற்றை இங்கே பேசும்போது ‘இதோடு அவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்’ என்ற பாணியிலேயே சொல்வார்கள். ஆகா ஓகோ என புகழ்வார்கள். ஆனால் விமர்சனப்பார்வை இருக்காது. ஒரு சலுகை காட்டும் பாவனைதான் இருக்கும். ஆனால் உங்கள் தளத்தில் கடுமையான விமர்சனப்பார்வை உள்ளது. அதோடு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119606

மறைக்கப்பட்ட பக்கங்கள்

மறைக்கப்பட்ட பக்கங்கள் இனிய ஜெயம் படைப்பு முகமும் பாலியல் முகமும் பதிவில் வாசகர் எஸ் அவர்களின் தத்தளிப்புக்கு உங்களது பதில் மிகுந்த உத்வேகம் ஊட்டுவதாக அமைந்திருந்தது. கோடி கோடி சுண்டெலிகள் கூடி நின்று முணங்கலாம், ஆனால் எத்தனை சுண்டெலிகள் கூடிக் கூவினாலும் ஒரு சிம்ம கர்ஜனைக்கு அவை ஏதும் ஈடு நில்லாது.  படைப்பாளி எனும் தன்னுணர்வு என்நிலையிலும் ஒரு சிம்மகர்ஜனையே. எந்த சிம்மமும் சுண்டெலிகள் மீதம் விட்டுச் சென்ற  மிச்சிலைக் கொண்டு தனது ராஜாங்கத்தை அமைப்பதில்லை. அதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119406

இருளறிவு

  அன்புள்ள ஜெ உங்கள் நேரத்தையும் மனதையும் வீணடிப்பதற்கு வருந்துகிறேன். நான் இந்து மெய்ஞான சிந்தனைகளில் ஆர்வம் கொண்டவன். அவ்வப்போது இவற்றை தேடி வாசிப்பவன். சமீபத்தில் ஜடாயு என்பவரது முகநூல்பக்கத்தில் இந்த விவாதத்தைப் பார்த்தேன். சட்டென்று மலக்குழியில் விழுந்து எழுந்த உணர்வு என்ன இது என்றே புரியவில்லை. கொஞ்சநேரம் தலையே சுற்றிவிட்டது. இதை உங்களுக்கு அனுப்புவது ஒன்றை மட்டுமே தெரிந்துகொள்ளத்தான். இந்தவகையான ஞானத்தால் என்ன பயன்? இந்த கீழ்மையைச் சென்று அடைவதற்காகத்தான் படிக்கவேண்டுமா? இது இன்றைக்கு ஆரம்பித்ததா என்றுமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119525

Older posts «