Monthly Archive: February 2019

நெல்லை தொல்.திருமாவளவன் நிகழ்ச்சி

நேற்று முன்நாள் [24-2-1019] அன்று நெல்லையில் நவபோதி அமைப்பின் சார்பில் தொல்.திருமாவளவன் அவர்களின் ‘அமைப்பாய் திரள்வோம்’ என்னும் நூலைப் பற்றிய கருத்துரைக்காக நான் அழைக்கப்பட்டிருந்தேன். நாகர்கோயிலில் இருந்து மாலை மூன்று மணிக்குக் கிளம்பி நெல்லை சென்றேன். லக்ஷ்மி மணிவண்ணனும் உடன் வந்தார். நிகழ்ச்சி நான்கு மணிக்கு என சொல்லப்பட்டிருந்தது. ஆனால் திருமாவளவன் வந்துசேர ஆறுமணியாவது ஆகுமென நான் நினைத்தேன். ஏனென்றால் அவர் காரில்தான் வருவார். வரும் வழிதோறும் அவர் நிற்காமலிருக்க முடியாது. அவருடன் சென்று மக்கள் அளிக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118618

சென்னை கட்டண உரை – நுழைவுச்சீட்டு வெளியீடு

சென்னையில் ஒரு கட்டண உரை அன்பின் ஜெ!   கட்டண உரை நிகழ்வின் முதல் நுழைவுச்சீட்டினை டிஸ்கவரி பேலச் வேடியப்பன் அவர்கள் பெற்றுக்கொண்ட போது. கிடைக்குமிடங்கள் டிஸ்கவரி புக் பலஸ்  பனுவல் புத்தக நிலையம்   தொடர்புக்கு 9962371849 நுழைவுச்சீட்டினை இணையத்தளம் வழியாகவும் நேரிலும் பெற்றுக் கொள்ளலாம். டிஸ்கவரி புத்தக நிலையம் மற்றும் பனுவல் புத்தக நிலையத்திலும் பணம் செலுத்தி பெறலாம். https://www.discoverybookpalace.com/-0

Permanent link to this article: https://www.jeyamohan.in/118385

இருளுக்குள் பாயும் தவளை. சா. துரை கவிதைகள் – கடலூர் சீனு

மத்தி [கவிதைத்தொகுதி ] வாங்க  இலக்கியம் எங்கு, என்ன வகையில்,எதை நோக்கி தொழில்படுகிறது என அவதானித்தால் அதன் அடிப்படையை இவ்வாறு வரையறை செய்யலாம். சித்தம் எனும் அமைப்பின் மீது ஜாக்ரத்,ஸ்வப்னம்,சுஷுப்தி,துரியா எனும் அலகுகளின் தொகை கொண்டு நிகழ்ந்து கொண்டிருக்கும் மனத்துக்கு, மொழி எனும் படிமப் பெருவெளியே சாரமாக இலங்குகிறது. இந்த சாரம், நாம் கொண்டிருக்கும் உடல் எனும்  ஜடம் கொண்டு , புலன்கள் வழியே புறவயமான தூல ஜடப் பிரபஞ்சத்துடன் நிகழ்த்தும்  முரண் இயக்கம் வழியே கிடைத்ததாகஇருக்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118490

குர்ஆன் – ஒரு கடிதம்

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? அன்புள்ள ஜெயமோகன், உங்கள் எழுத்துகளை விரும்பி படிக்கும் நான் ஒரு சூஃபி சிந்தனை பள்ளியைச் சார்ந்தவன். கீதையை எப்படி படிப்பது? ஏன்? என்ற தலைப்பில் நீங்கள் பகிர்ந்திருக்கும் கருத்துகளை  நேற்று படித்தேன். அதில் உள்ள கீழ்கண்ட வரிகளின் தொடர்பில் எனது கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். / நான் பலவருடங்கள் தேடலுடனும், கண்ணீருடனும் நான்கு மதங்களின் மூலநூல்களை கற்றுள்ளேன். இன்றும் அவை என் மேஜைமீது உள்ளன. என் கருத்தில் அவை அனைத்துமே பெருங்கருணை, உலகைத்தழுவ முனையும் நீதியுணர்வு ஆகியவற்றின் மகத்தான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118510

கும்பமேளா கடிதங்கள்-4

நீர்க்கூடல்நகர் – 6 நீர்க்கூடல்நகர் – 5 நீர்க்கூடல்நகர் – 4 நீர்க்கூடல்நகர் – 3 நீர்க்கூடல்நகர் – 2 நீர்க்கூடல்நகர் – 1 அன்புள்ள ஜெ, தங்கள் பயணக்கட்டுரை ஒரு நிஜ அனுபவத்தையே எனக்குள் ஏற்படுத்துகிறது. நீங்களே என்னை கைப்பிடுத்து அழைத்துகிச்சென்று காட்டியது போன்ற உணர்வு. வெறும் சுற்றுப்பயணமாக அன்றி ஒரு தரிசனத்தையே முன் வைக்கிறது. பின்வரும் வரிகள் அனைவருக்குமான அவசியச்செய்தி “ இந்தியா மிகமிக விரைவாக நடுக்குடியினரின் தொகையாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் மரபார்ந்த விழாக்கள், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118444

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-64

சஞ்சயன் சொன்னான்: அரசே, எவருடைய கண்களால் நான் பார்க்கிறேன் என்று தெரியவில்லை. நான் எங்கோ இக்கதையை ஓர் அரக்கர் கூட்டத்திற்கு சொல்லிக்கொண்டிருக்கிறேன். மறு சொற்றொடரை நாகர்களுக்கு சொல்கிறேன். ஆழ்ந்த கனவென அக்காட்சி திரும்புகையில் அரண்மனையில் காந்தாரப் பேரரசியிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இப்போது இதை சொல்லும்போது நான் எங்கோ ஒரு வழிச்சாவடியில் வணிகர் நடுவே விழியிலாத சூதனாக அமர்ந்து இக்கதையை பாடுவதாக உணர்கிறேன். படைகளுக்கு மேல் இரும்புக்கவசம் இருளில் விண்மீன் ஒளியில் மின்னும் சுனைநீர்போல அலைகொள்ள பால்ஹிகர் சென்றுகொண்டிருப்பதை துரியோதனன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118391

குளச்சல் மு.யூசுப் பாராட்டுவிழா

  இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சொற்பொழிவுகளின் வரிசையால் ஆனது என ஆகிவிட்டது. நேற்று முன்னாள் [23-2-2019] மொழிபெயர்ப்பாளரும் நண்பருமான குளச்சல் மு யூசுப் அவர்கள் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அக்காதமி விருதை பெற்றதற்கான பாராட்டுவிழா. லக்ஷ்மி மணிவண்ணனின் நிழல்தாங்கல் அமைப்பும் சிலேட் இதழும் ஒருங்கிணைத்த நிகழ்ச்சி.   காலை பத்துமணிக்கு செட்டிகுளம் ஏபிஎன் பிளாசாவில் நிகழ்ச்சி. 25 பேர் கலந்துகொண்டார்கள். நாகர்கோயிலில் பொதுவான இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு மிகக்குறைவாகவே மக்கள் பங்கேற்பு இருக்கும். எனக்கு மிகமிகக்குறைவான எண்ணிக்கையில் அரங்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118570

கட்டண உரையின் தேவை

சென்னையில் ஒரு கட்டண உரை சென்னையில் ஒரு கட்டண உரை   அன்புள்ள ஜெ,   கட்டண உரை பற்றிய அறிவிப்பு மீண்டும் கொந்தளிப்புகளை உருவாக்கியிருப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். உண்மையில் இப்படிக் கொந்தளிப்பவர்களின் எண்ணம் என்ன என்றுதான் புரியவில்லை. உரைக்குக் கட்டணம் வைக்கக்கூடாது என்கிறார்களா? அல்லது உங்கள் உரைக்குக் கட்டணம் வைக்ககூடாது என்கிறார்களா? அல்லது நீங்கள் உரையே நிகழ்த்தக்கூடாது என்கிறார்களா?   எஸ்.சிவராம்   அன்புள்ள சிவராம்,   இந்த கட்டண உரை என்னும் அறிவிப்பில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118467

பால் – பாலா கடிதம்

நீர்க்கூடல்நகர் – 1 அந்த டீ – ஒரு கடிதம் பால் – கடிதங்கள் பால் – மேலும் கடிதங்கள் அன்பின் ஜெ, எதிர்வினைகளைப் படித்ததும் சிரித்துவிட்டேன். நன்றி! நீங்கள் உத்திரப் பிரதேசம் செல்லும் வழியில் ஒரு கடையில் டீக் குடிக்கிறீர்கள். குமட்டுகிறது. கலப்படம் செய்யப்பட்ட பால் எனத் தோன்றுகிறது. உடனே உங்கள்கட்டுரையில் இருந்து கருத்துக்கள் புறப்படுகின்றன. இத்தனை பேர் குடிக்கும் பாலுக்கான மாடுகள், சாணி வைக்கோல் இவை எல்லாம் எங்கே என வியக்கிறீர்கள். நாம் அருந்தும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118557

தலித் இலக்கியம்,திருமாவளவன்- கடிதங்கள்

தொல்திருமாவளவன் அவர்களுடன் மதுரையில், ஒருபழையபடம் மதுரை, அபி, இறையியல் கல்லூரி, தலித் இலக்கியம் அன்புள்ள ஜெ நேற்று முழுக்க சமூக வலைத்தளங்களில் ‘திடீரென்று’ ஜெயமோகன் எப்படி தலித் ஆதார மையத்திற்குச் சென்று சொற்பொழிவாற்றுகிறார், எப்படி திருமாவளவன் அவர்களின் கூட்டத்தில் பேசுகிறார் என்றெல்லாம் விவாதித்துத் தள்ளிவிட்டார்கள். சென்ற ஐந்தாண்டுகளாக நீங்கள் எப்படியும் முப்பது தலித்தியக்க மேடைகளிலாவது பேசியிருப்பீர்கள் என்றும், அம்பேத்கர் அயோத்திதாசர் பற்றிய மிக ஆழமான பேருரைகளை ஆற்றியிருக்கிறீர்கள் என்றும் நான் சுட்டிக்காட்டியபோது இவர்கள் எவருக்கும் தெரியவில்லை. பெரும்பாலானவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118590

Older posts «

» Newer posts