Daily Archive: February 28, 2019

அ.கா.பெருமாளின் ‘தமிழறிஞர்கள்’

தமிழறிஞர்கள்- அ.கா.பெருமாள்  நூல் வாங்க இலக்கியப் படைப்பாளிகளுக்கும் அறிஞர்களுக்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு, இலக்கியப்படைப்பாளி வாழ்நாள் முழுக்க தனக்கான நினைவுச்சின்னங்களைத்தான் உருவாக்குகிறான் என்று சுந்தர ராமசாமி ஒரு கட்டுரையில் சொல்கிறார். அந்நினைவுச்சின்னமும் அழிந்துபோகுமென்றால் அவன் நல்ல படைப்பாளி அல்ல என்றே பொருள். அது ஆழமான ஆக்கம் என்றால் அதற்கு எப்படியும் வாசகர்கள் தேடிவருவார்கள். ஆனால் அறிஞர்களின் நிலை அது அல்ல. ஓர் அறிவியக்கத்தில் திருப்புமுனைகளை உருவாக்கியவர்கள், முன்னோடியான பார்வைகளை உருவாக்கியவர்கள் அடிக்கடி நினைவுகூரப்படுகிறார்கள். எஞ்சியோர் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118668

மனிதர்களுடனும் அப்பாலும்

அன்புள்ள ஜெ, உங்களை தமிழ்ச் சமூகம் ஒட்டுமொத்தமாக பகிஷ்கரிக்கவேண்டும் என்று கூவிக்கொண்டிருப்பவர்களில் ஒருவர் யமுனா ராஜேந்திரன் என்பவர். மார்க்ஸியராக தன்னை காட்டிக்கொண்டிருப்பவர். நான் வாசித்தவரை ஒரு வெத்துவேட்டு. ஆனால் சத்தம் அதிகம். நீங்கள் அவரை பொருட்படுத்துவதே இல்லை என்பதே அவருடைய பிரச்சினை என நினைக்கிறேன். ஆர்.இளங்கோ அன்புள்ள இளங்கோ, நான் அலட்சியத்தால் எவரையும் தவிர்ப்பதில்லை. ஒரு மனிதனை பொருட்படுத்தாமலிருக்க காரணம் ஏதுமில்லை. அவருக்கு ஓர் அறிவுத்தளத்தில் பேசுவதற்கான நேர்மை, நாகரீகம், அடிப்படைப் புரிதல் என்னும் மூன்று தகுதிகளும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118612

ஊமைச்செந்நாய் மலையாளத்தில்…

  ஒவ்வொரு ஆண்டும் மலையாள இலக்கிய இதழான பாஷாபோஷிணியில் மட்டும்தான் நான் மலையாளத்தில் எழுதுகிறேன். முந்தைய ஆண்டுகளில் அறம், வணங்கான், நூறுநாற்காலிகள், யானை டாக்டர் ஆகியவை மலையாளத்தில் வெளிவந்தன. நூறுநாற்காலிகள் , யானை டாக்டர் ஆகியவை சிறிய நாவல்கள் என்று தனிநூல்களாக அங்கே வெளியாயின. அவற்றுக்கு பதிப்புரிமை இல்லை என்பதனால் ஒரேசமயம் பத்துக்கும் மேற்பட்ட பதிப்பகங்களால் வெளியிடப்பட்டன. ஒவ்வொன்றும் மூன்று லட்சம் பிரதிகளுக்குமேல் விற்றுள்ளன. சென்ற ஆண்டு ஊமைச்செந்நாய் சிறுகதையை பாஷாபோஷிணியில் எழுதினேன். இப்போது அது ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118522

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-66

கர்ணனின் தேர் போர்முனையிலிருந்து பின்னடைந்து சுழித்துக்கொண்டிருந்த இரண்டாம்நிரையை அடைந்து நின்றது. புரவியில் இருந்தபடியே அத்தேரின் புரவிக்கடிவாளங்களைப் பற்றி அதை செலுத்திவந்த அங்கநாட்டுத் தேர்வலனாகிய சக்ரன் அதை நிறுத்திவிட்டு சங்கு எடுத்து முழக்க மருத்துவஏவலர் வந்து தலை அறுந்து ஒருக்களித்து விழுந்துகிடந்த துருமனின் உடலை எடுத்து நிலத்திலிட்டனர். அவன் தலைக்காக தேரின் அடியில் நோக்கியபின் உடலை மட்டும் தூக்கி அப்பால் கொண்டுசென்றனர். தேர்த்தட்டில் தளர்ந்து அமர்ந்தவனாக கர்ணன் அதை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தான். சக்ரன் “புரவிகளை மாற்றவேண்டும், மூத்தவரே. இரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118442