Daily Archive: February 27, 2019

புதியவாசகர் சந்திப்பு நாமக்கல்

  நண்பர்களே, இந்த வருடம் தொடர்ச்சியான  நான்காம் ஆண்டாக  விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்   சார்பாக ஒரு புதிய வாசகர் சந்திப்பு  ஈரோட்டில் நடைபெற்றது.  அதில் சிலருக்கு இடமளிக்க இயலவில்லை, ஆகவே இந்த இரண்டாவது சந்திப்பு.   இந்த இரண்டு நாட்களிலும் எழுத்தாளர் ஜெயமோகனை சந்தித்து பேசலாம். அவர் சனி காலை வந்து ஞாயிறு இரவு தான் ஊர் புறப்படுகிறார். சனி இரவு நிகழ்விடத்திலேயே புதிய வாசகர்களுடன் தங்குகிறார்.  இலக்கியத்தையும் அறிவுத்துறையையும் தீவிரமாக எடுத்துக்கொள்பவர்களை இந்த சந்திப்பிற்கு வரவேற்கிறோம். சந்திப்பில் இலக்கியம், வரலாறு, தத்துவம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118461

வெண்முரசு உரையாடல் – புதுவை

அன்புள்ள நண்பர்களே , வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் தொடர்ச்சி 23 வது கூடுகையாக “பிப்ரவரி மாதம்” 28.02.2019 வியாழக்கிழமை அன்று மாலை 6:00மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன்அழைக்கிறோம். கூடுகையின் பேசு பகுதி வெண்முரசு நூல் வரிசை 3 “வண்ணக்கடல்” பகுதி மூன்று “கலைதிகழ் காஞ்சி ” ,11 முதல் 15 வரையிலான பதிவுகள் குறித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118504

செழியனின் டு லெட் – கடலூர் சீனு

கடந்த வருடம் புதுச்சேரி திரைப்பட விழாவை துவக்கி வைத்து பேசியவர் செழியன். அந்த விழாவில் டு லெட் முதல் திரைப்படமாக திரையிடப்பட்டது.  அதில் அந்தப் படம் திரை விழாக்களை நோக்கி எடுக்கப்பட்டது என்றும், கேளிக்கை சினிமா அம்சங்கள் இதில் கிடையாது ஆகவே, பொது திரையரங்கம் நோக்கி இது எடுக்கப்பட வில்லை,இருப்பினும் இதில் உள்ள வாழ்கையை அனைவரும் ரசிக்கும் வண்ணம், டிசம்பர் இறுதிக்குள், மக்கள் பார்வைக்கான திரை அரங்குகளில் பார்க்கக் கிடைக்கும் என கூறி இருந்தார்.  இந்த பெப்ரவரி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118692

முச்சந்திக் கூச்சல்

அன்புள்ள ஜெ, சென்ற சிலநாட்களாகவே முகநூலில் இருந்து தனிப்பட்ட நண்பர்கள் வரை ஒரே சச்சரவு. இவரை எப்படி அவர் அழைக்கலாம், இவரை வைத்து எப்படிக் கூட்டம் நடத்தலாம், இவரை எப்படி பக்கத்தில் உக்கார வைக்கலாம் என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். என்ன இது ஒரே சலம்பலாக இருக்கிறதே என்று பார்த்தால் மொத்தமாகவே ஒரு மூன்றுநான்குபேர் முகநூலில் கிடந்து இந்தச் சத்தத்தை உருவாக்குகிறார்கள். இத்தனைக்கும் எதையும் படிப்பவர்களோ, இதுவரை சொல்லும்படி எதையும் எழுதியவர்களோ இல்லை. ஒருவகையான மூர்க்கமான வேகம் கொண்டவர்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118606

புதியவாசகர் சந்திப்பு கடிதங்கள்-3

புதியவாசகர் சந்திப்பு, ஈரோடு இளம்வாசகர் சந்திப்பு -கடிதங்கள் அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் இவ்வருட புதிய வாசகர் சந்திப்பிற்கான இடம் கிடைத்ததிலிருந்து  மனதில் ஒரே பரபரப்பும் பதட்டமும் தான். கடந்த இரு வாரமும் கதைகளையும் புதிய வாசகர்களின் படைப்புகளையும் வாசிப்பதிலேயே சென்றது. “தேர்விற்கு இவ்வாறு ஒழுங்காக படித்திருந்தால் வாழ்க்கையில் உருப்பட்டிருக்கலாம்”என்று அம்மாவின் குரல் அசரிரீ போல் இடையியே ஒலிக்கும். ஒரு வழியாக வெள்ளி இரவு பேருந்து ஏறினோம் நானும் விஜியும். வழமை போல சென்னையின் வாரஇறுதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118552

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-65

சஞ்சயன் சொன்னான்: அரசே, இது முன்னரே எழுதப்பட்டுவிட்ட கதை. இது ஒரு பெருங்காவியத்தின் வரிகள். அந்த ஆசிரியனாக அமர்ந்து அதை சொல்லிக்கொண்டிருக்கிறேன். அதன் வரிகளில் விழியோட்டிக்கொண்டிருக்கிறேன். அதை தனிப்பயணி என மலையடுக்குகள் சூழ்ந்த பாதையில் பாடிக்கொண்டு செல்கிறேன். அந்தத் தொல்கதைக்குள் அமர்ந்து இக்கதையை உங்களுக்கு சொல்லிக்கொண்டுமிருக்கிறேன். இருளில் அர்ஜுனன் மேலும் கைகளும் வில்லும் பெருகியவன் போலிருந்தான். அவன் அம்புகள் அனைத்து திசைகளிலிருந்தும் எழுந்து சீறல் ஓசையுடன் வந்து அறைந்தன. கர்ணன் அர்ஜுனனை எதிர்கொண்ட முதற்சில கணங்கள் அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118416