Daily Archive: February 25, 2019

குளச்சல் மு.யூசுப் பாராட்டுவிழா

  இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சொற்பொழிவுகளின் வரிசையால் ஆனது என ஆகிவிட்டது. நேற்று முன்னாள் [23-2-2019] மொழிபெயர்ப்பாளரும் நண்பருமான குளச்சல் மு யூசுப் அவர்கள் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அக்காதமி விருதை பெற்றதற்கான பாராட்டுவிழா. லக்ஷ்மி மணிவண்ணனின் நிழல்தாங்கல் அமைப்பும் சிலேட் இதழும் ஒருங்கிணைத்த நிகழ்ச்சி.   காலை பத்துமணிக்கு செட்டிகுளம் ஏபிஎன் பிளாசாவில் நிகழ்ச்சி. 25 பேர் கலந்துகொண்டார்கள். நாகர்கோயிலில் பொதுவான இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு மிகக்குறைவாகவே மக்கள் பங்கேற்பு இருக்கும். எனக்கு மிகமிகக்குறைவான எண்ணிக்கையில் அரங்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118570

கட்டண உரையின் தேவை

சென்னையில் ஒரு கட்டண உரை சென்னையில் ஒரு கட்டண உரை   அன்புள்ள ஜெ,   கட்டண உரை பற்றிய அறிவிப்பு மீண்டும் கொந்தளிப்புகளை உருவாக்கியிருப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். உண்மையில் இப்படிக் கொந்தளிப்பவர்களின் எண்ணம் என்ன என்றுதான் புரியவில்லை. உரைக்குக் கட்டணம் வைக்கக்கூடாது என்கிறார்களா? அல்லது உங்கள் உரைக்குக் கட்டணம் வைக்ககூடாது என்கிறார்களா? அல்லது நீங்கள் உரையே நிகழ்த்தக்கூடாது என்கிறார்களா?   எஸ்.சிவராம்   அன்புள்ள சிவராம்,   இந்த கட்டண உரை என்னும் அறிவிப்பில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118467

பால் – பாலா கடிதம்

நீர்க்கூடல்நகர் – 1 அந்த டீ – ஒரு கடிதம் பால் – கடிதங்கள் பால் – மேலும் கடிதங்கள் அன்பின் ஜெ, எதிர்வினைகளைப் படித்ததும் சிரித்துவிட்டேன். நன்றி! நீங்கள் உத்திரப் பிரதேசம் செல்லும் வழியில் ஒரு கடையில் டீக் குடிக்கிறீர்கள். குமட்டுகிறது. கலப்படம் செய்யப்பட்ட பால் எனத் தோன்றுகிறது. உடனே உங்கள்கட்டுரையில் இருந்து கருத்துக்கள் புறப்படுகின்றன. இத்தனை பேர் குடிக்கும் பாலுக்கான மாடுகள், சாணி வைக்கோல் இவை எல்லாம் எங்கே என வியக்கிறீர்கள். நாம் அருந்தும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118557

தலித் இலக்கியம்,திருமாவளவன்- கடிதங்கள்

தொல்திருமாவளவன் அவர்களுடன் மதுரையில், ஒருபழையபடம் மதுரை, அபி, இறையியல் கல்லூரி, தலித் இலக்கியம் அன்புள்ள ஜெ நேற்று முழுக்க சமூக வலைத்தளங்களில் ‘திடீரென்று’ ஜெயமோகன் எப்படி தலித் ஆதார மையத்திற்குச் சென்று சொற்பொழிவாற்றுகிறார், எப்படி திருமாவளவன் அவர்களின் கூட்டத்தில் பேசுகிறார் என்றெல்லாம் விவாதித்துத் தள்ளிவிட்டார்கள். சென்ற ஐந்தாண்டுகளாக நீங்கள் எப்படியும் முப்பது தலித்தியக்க மேடைகளிலாவது பேசியிருப்பீர்கள் என்றும், அம்பேத்கர் அயோத்திதாசர் பற்றிய மிக ஆழமான பேருரைகளை ஆற்றியிருக்கிறீர்கள் என்றும் நான் சுட்டிக்காட்டியபோது இவர்கள் எவருக்கும் தெரியவில்லை. பெரும்பாலானவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118590

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-63

பார்பாரிகன் சொன்னான்: அலாயுதன் இடும்பர்கள் விண்ணிலிருந்து விழுந்தெழுந்து தாக்குவதை கண்டான். அவனுடைய படைவீரர்கள் ஆணையிடாமலேயே தங்கள் நீண்ட வேல்களை மேல்நோக்கி கூர் நின்றிருக்க பிடித்து கீழே விழும் இடும்பர்களுக்கு நேராகக் காட்டி அவர்களை குத்திப் புரட்டி குருதிக்கலத்திற்குள் உள்தசைகள் உடைந்து சிக்க சுழற்றி பிழுதெடுத்து வெங்குருதியுடன் தூக்கி ஆட்டினர். குருதி தங்கள் உடலில் சிந்த நடனமாடினர். களத்திற்கு வந்த அப்பதினான்கு நாட்களில் அவர்கள் முதல்முறையாக போரில் ஈடுபட்டனர். போரிடுபவனின் தனிப்பட்ட வஞ்சத்தை, அச்சத்தை, களிப்பை மீறி எழும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118364