Daily Archive: February 24, 2019

மதுரை, அபி, இறையியல் கல்லூரி, தலித் இலக்கியம்

  நேற்று முன்னாள் [22-2-2019] என்று மதுரை சென்றிருந்தேன். மதுரை இறையியல் கல்லூரியில்  ‘இன்றைய இலக்கியப்பரப்பில் தலித் இலக்கியத்தின் தாக்கம்’ என்னும் தலைப்பில் பேசினேன். இறையியல் கல்லூரி நண்பர் அலெக்ஸ் பணியாற்றிய நிறுவனம். இப்போது அலெக்ஸின் மனைவியும் அங்கேதான் பணியாற்றுகிறார். அதனாலேயே எனக்கு அணுக்கமானது. அலெக்ஸ் பல நிகழ்ச்சிகளை அங்கே ஒருங்கிணைத்திருக்கிறார். அயோத்திதாசர் ஆய்வுமையம் சார்பிலான கூட்டங்கள் அங்கேதான் நடந்தன. அங்குள்ள விருந்தினர் விடுதியில் பலமுறை தங்கியிருக்கிறேன். மதுரை நகரின் மையத்திற்குள் மரங்கள் அடர்ந்த ஒரு சிற்றூர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118546

உரையாடும் காந்தி – ஓர் உரையாடல் – வேலூர்

அன்புள்ள ஜெ, வணக்கம் நான் க. விக்னேஷ்வரன் வாசகசாலை அடிப்படை உறுப்பினர்களில் ஒருவன். கடந்த ஒரு வருடங்களாக ஒவ்வொரு மாதமும் வாசகசாலை மற்றும் வேலூர் மாவட்ட தந்தை பெரியார் நூலகம் இணைந்து இலக்கிய கூட்டங்களை வேலூரில் நடந்துகிறோம். இந்த முறை உங்களின் “உரையாடும் காந்தி” என்ற கட்டுரைத் தொகுப்பை கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்கிறோம். (அழைப்பிதழை கிழே இணைந்துள்ளேன்.) என்னளவில் “உரையாடும் காந்தி” தொகுப்பு இன்றைய சமூக சூழ்நிலையில் அதுவும் காந்தி போன்ற ஆளுமையை தவறாக புரிந்துகொண்டு விமர்சனம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118406

மிசிறு கடிதங்கள்

மிசிறு அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு மிசிறு பதிவை வாசித்தேன். தாவரங்களுக்கும் எறும்புகள் உள்ளிட்ட  பிற உயிரினங்களுக்குமான சார்பு வாழ்வைக்குறித்து எத்தனைபேருக்கு அறிதலிருக்கின்றதென்று நினைக்கையில் ஆதங்கமாகவே இருக்கும் எனக்கு எப்போதும்.   பிற  உயிர்களுடனிருக்கும் தொடர்பை விடுங்கள் தாவரங்களையே அறிந்திருக்கிறார்களா என்றால் இல்லை.  என் வீட்டிலிருந்து பின் வாசல் மதில் மேல் அடர்ந்து படர்ந்திருக்கும் கோளாம்பி மலரென்னும் அலமண்டாவை பின்வீட்டுப்பெண் செம்பருத்தியென பறித்து தலைக்கு தேய்க்கும் எண்ணையே காய்ச்சிவிட்டாள் ஒருமுறை. செம்பருத்தி தெரியாத ஆட்களெல்லாம் கூட இருக்கிறார்கள். குப்பை மேனி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118430

பால் – ஒரு கடிதம்

நீர்க்கூடல்நகர் – 1 அந்த டீ – ஒரு கடிதம் பால் – கடிதங்கள் பால் – மேலும் கடிதங்கள் அன்புள்ள ஜெமோ, பல விவாதங்களில் ஒரு குறிப்பிடட “இரு தரப்புகள்” எல்லா விவாதங்களிலும் இருக்கிறது. விவாத அடிப்படையில் இரண்டுமே ஒருவகையில் ஏற்புடையதாகவும் இருக்கிறது. “உள்ளிருந்து விபரங்கள் அடிப்படையில் பேசுபவர்கள்” “வெளியில் இருந்து அனுபவ அடிப்படையில் பேசுபவர்கள்” எந்த ஒரு விவாதத்திலும் வித்தியாசம் “உள்ளிருந்து பேசுபவர்கள்” மற்றும் “வெளியில் இருப்பவர்கள்” என்பது மட்டும்தானா என்றே பல சமயங்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118555

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-62

அரவான் சொன்னான்: தோழர்களே, அரவுகளுக்குரியது விழியும் செவியும் ஒன்றாகும் ஸ்ரவ்யாக்ஷம் எனும் யோகம். காட்சிகளை ஒலியென்று அறியவும் ஒலிகளை காட்சிகளாக விரிக்கவும் அவர்களால் இயலும். நாகர்குலத்து அன்னை உலூபியிலிருந்து இளைய பாண்டவர் அர்ஜுனர் கட்செவி யோகத்தை கற்றுக்கொண்டார். நாகர்களால் அந்த நுண்ணறிதல் அங்கநாட்டு அரசர் கர்ணனுக்கு வழங்கப்பட்டது. கௌரவர்களும் பாண்டவர்களும் போர்புரிந்த அவ்விரவில் விழிகொண்டவர்களாக அங்கு திகழ்ந்தவர்கள் அவர்கள் இருவருமே. துரோணர் ஒலிகளைக்கொண்டு போரிடும் சப்தஸ்புடம் என்னும் கலையை அறிந்தவர். அதை அவரிடமிருந்து அஸ்வத்தாமர் அறிந்திருந்தார். அன்றைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118361