Daily Archive: February 23, 2019

குளச்சல் மு.யூசுப் அவர்களுக்குப் பாராட்டு – இன்று

  2018 ஆம் ஆண்டுக்குரிய சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது பெற்றுள்ள குளச்சல் மு யூசுப்  அவர்களுக்கு ஒரு பாராட்டு விழா நாகர்கோயிலில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.நான் யூசுப் அவர்களின் மொழியாக்கத் திறன் குறித்துப் பேசுகிறேன் நாள் பிப்ரவரி 23 அன்று காலை 930 இடம் நாகர்கோயில் ஏ.பி.என் பிளாஸா, செட்டிகுளம். அனைவரும் வருக

Permanent link to this article: https://www.jeyamohan.in/117992

வெகுஜனக் கலை என்பதைப் பற்றி…

  அன்புள்ள ஜெயமோகன், தங்கள் வலைத்தளத்தில் வெகுஜனவியம் (பரப்பியம் என்றும் குறிப்பிடப்படுவது) தொடர்பாக நான் எழுதியவற்றையும் உங்கள் மறுமொழிகளையும் பதிப்பித்து விவாதத்தை பலர் கவனத்திற்கும் கொண்டு சென்றதற்கு நன்றி. அதன்பிறகு, பேராசிரியர் அ.ராமசாமி அவர் வலைப்பூவில் அதைப்பற்றி எழுதியதை நீங்கள் வெளியிட்டிருந்ததை இன்றுதான் கண்ணுற்றேன். உங்களுக்கு அவகாசம் இல்லாத காரணத்தாலோ என்னவோ நீங்கள் அவரது குறிப்பைப் பற்றி கருத்து எதுவும் சொல்லவில்லை. பேராசிரியர் அ.ராமசாமிக்கும் போதிய அவகாசம் இல்லாததால்தான் அவரால் என்னுடைய கருத்துக்களை விவாதிக்க முடியாமல் போயிருக்கிறது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8668

கூடியிருந்து குளிர்தல்…

அன்புள்ள ஜெ, உங்களோடு வருவதாக இருந்த கும்பமேளா திட்டம் என் வகுப்புக்கள் காரணமாக ஒரு வாரம் தள்ளிப் போய்,  வசந்தபஞ்சமியை அடுத்த வசந்த பெளர்ணமி, நீராடல் மிக முக்கிய நிகழ்வு என்பதால்,  இந்த வாரம் திட்டமிட்டோம். நண்பர்கள் சிவாத்மா, சண்முகம் , அவர் மாமா முருகதாஸ், என நால்வரும் சென்று வந்தோம். சென்னையில் ரயில் ஏறும் போதே மனதில் உற்சாகம் நிறைந்து விட்டது. எதிர் இருக்கை பயணிகள் ஊர் ஊராக சென்று, “ஸ்ரீமத் பாகவத சப்தாஹம்”  செய்யும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118493

இளம்வாசகர் சந்திப்பு – கடிதங்கள்

புதியவாசகர் சந்திப்பு, ஈரோடு அன்புள்ள ஜெ, ‘ஒன்றை கற்றுக்கொள்ளும் போது நீ சந்தோசமாய் இருக்க வேண்டும். அப்படி நீ சந்தோசமாக இல்லையெனில் நீ ஒன்றையும் கற்றுக்கொள்ளவில்லை என்று பொருள்.’ நீங்கள் சொன்னது தான் ஜெ. (@Ted talks) இரண்டு நாள் சந்தோஷத்தின் உச்சியில் இருந்தேன். எழுதுவது பிடிக்கும். ஆனால், ஒவ்வொரு முறையும் ஒரு கதை எழுதி முடித்த உடனேயே அந்தக் கதை பிடிக்காமல் போய் விடுகிறது. ஏதோ ஒன்று குறைவது போல இருக்கிறது, ஆனால், என்னவென்று இத்தனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118431

கும்பமேளா கடிதங்கள் 4

நீர்க்கூடல்நகர் – 6 நீர்க்கூடல்நகர் – 5 நீர்க்கூடல்நகர் – 4 நீர்க்கூடல்நகர் – 3 நீர்க்கூடல்நகர் – 2 நீர்க்கூடல்நகர் – 1 ஜெ தங்களின் நீர்கூடல் கட்டுரை படித்தேன். அருமை .காற்றின் மொழி திரைப்படத்தில் நாயகி ஹரித்வார் பயண அனுபவங்களை பகிர்ந்து கொள்வர், ஆனால் பிறகு அவர் பயணம்செல்லவில்லை என்றும் அம்மாவிடமிருந்து கேட்ட அனுபவத்தை சொன்னதாகவும் சொல்வார்  தங்களின் பயண கட்டுரைகள் எனக்கு அவ்வாறு சென்ற அனுபவங்களை அளிக்கிறது. ஸ்வச் பாரத் சில இடங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118333

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-61

பார்பாரிகன் சொன்னான்: விந்தியமலைக்கு அப்பால், ஜனஸ்தானத்தை தலைநகராகக் கொண்டு அமைந்திருந்த நாடு அரக்கர்களின் தொல்நிலமாகிய தண்டகம். முன்பு அது தண்டகப்பெருங்காடு என அழைக்கப்பட்டிருந்தது. அங்கே அரக்கர் குலத்தின் பதினெட்டு குடிகள் வாழ்ந்தார்கள். அவர்களை ஒருங்கிணைத்து ஆற்றல்மிக்க அரசு என்றாக்கியவர் தொல்லரக்க மன்னர் கரனும் அவருடைய இளையோராகிய தூஷணரும் திரிசிரஸும். இலங்கையை ஆண்ட அரக்கர்குலப் பேரரசர் ராவணனுக்கு உடன்குருதியர் அவர்கள். அலைகள் என எழுந்தும் பின் அமைந்தும் மீண்டும் எழுந்தும் கொண்டிருக்கும் அரக்கர்களின் வரலாற்றில் எழுந்த பேரலை அவர்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118279