Daily Archive: February 19, 2019

இலக்கியமும் புறவுலகும்

அன்புள்ள ஜெ, ஒரு புனைவு எழுத்தாளன் சித்தரிக்கும் உலகம் என்பது அவனது தேடல் அலைக்கழிப்புச் சார்ந்தது; தன் பார்வையினூடாகக் கற்பனையைப் பெருக்கி விரித்து எழுதுகிறான். நிச்சயம் அவனது கோணல்கள் தடுமாற்றங்கள் அப்படைப்பில் வெளிப்படும். அதனால் பொது மனநிலையில் இருக்கும் சித்திரத்தை விட்டு விலகியே அவனது நோக்கு அமைந்திருக்கும். “இங்கே ஒரு படைப்பை நிராகரிக்க முன்வைக்கப்படும் விவாதங்களின் போது “அசலாக அந்தப் பிரதேசத்தின் மண்ணையோ மக்களின் பேச்சு வழக்கையோ சரியாக உள்வாங்கவில்லை. மேலோட்டமாக உள்ளது” அல்லது “இது யதார்த்தம் இல்லை, இப்படியான ஆண்களையோ பெண்களையோ எங்கள் நிலத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118283

பால் – கடிதங்கள்

நீர்க்கூடல்நகர் – 1 அந்த டீ – ஒரு கடிதம் அன்புக்குரிய ஜெ அவர்களுக்கு, தங்கள் நலமறிய விழைகிறேன். நீர்க்கூடல்நகர் கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள விஷயங்களுக்கு பாலா அவர்கள் எழுதிய எதிர்வினையோடு நான் சில விஷயங்களில் மாறுபடுகிறேன். பெரிய தனியார் நிறுவனங்களோ அல்லது அரசு நிறுவனங்களோ பாலில் கலப்படம் செய்வது சாத்தியமில்லை என்று சொல்லியிருக்கிறார். ஆனால் என்னுடைய தனிப்பட்ட அனுபவம் வேறு வகையாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் எனது நெருங்கிய நண்பரும் உறவினருமான ஒருவர் தன்னுடைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118318

சூரிய வம்சம்

குறுஞ்செய்திகளில் கடலூர் சீனு சமகாலக் கவிதைகளை பகிர்ந்துகொண்டே இருப்பார். நேற்று அவர் அனுப்பிய செய்தி.மனுஷ்யபுத்திரனின் கவிதை   வரும்போது சூரியனின் முதல் கிரணங்களில் ஒன்றாக இந்த பூமிக்கு வந்தேன் இப்போது என்னை  சிகரெட் லைட்டரில் எரியும் சிறு நெருப்பாக பயன்படுத்துகிறீர்கள்   இதைச் சொல்லும்போது கண்ணீர் சிந்தவேண்டாம் என்றுதான் நினைக்கிறேன் ஆனாலும் கண்ணீர் சிந்துகிறேன்    மனுஷ்ய புத்திரன்   Dear j, இவ்ளோ பூடகமான கவிதை எல்லாம் தி மு க தலைவருக்கு புரியுமா என்ன? – …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118323

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-57

பார்பாரிகன் சொன்னான்: கூட்டரே, அங்கே நிகழ்ந்துகொண்டிருப்பது வெற்று உணர்ச்சிகளின் கொந்தளிப்பு. போர்க்களத்தின் பின்புறத்தில் உடைந்த தேர்த்தட்டின் அடியில் படுத்திருந்த சோமதத்தரிடம் சென்று நிகழ்ந்தவற்றை சொன்னபோது அவர் அகிபீனாவின் மயக்கிலிருந்தார். சலனின் இறப்பு அவரை முற்றாக நிலையழியச் செய்து பித்தனென்றே ஆக்கிவிட்டிருந்தது. அச்செய்தி கேட்டு அலறி தேர்த்தட்டில் விழுந்த அவரை பால்ஹிகநாட்டுப் படைவீரர்கள் அள்ளி கொண்டுசென்று படுக்கச் செய்தனர். “என் மைந்தனின் உடலை காட்டுக! என் மைந்தனின் உடலை காட்டுக!” என்று அவர் கூவினார். “ஆம், அரசே. உடல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118157