Daily Archive: February 18, 2019

சென்னையில் ஒரு கட்டண உரை

நெல்லை கட்டண உரை தந்த நம்பிக்கையில் சென்னையிலும் ஒர் உரைக்கு ஒழுங்குசெய்யலாம் என்று நண்பர் அகரமுதல்வன் சொன்னார். ஆகவே வரும் மார்ச் 2 அன்று ஏற்பாடாகியிருக்கிறது.   இடம் டி.என்.ராஜரத்தினம்பிள்ளை அரங்கம், ராஜா அண்ணாமலைபுரம் [எம்ஜிஆர்- ஜானகி மகளிர் கல்லூரி எதிரில்]   ‘மரபை விரும்புவதும் வெறுப்பதும் எப்படி?” என்று தலைப்பு. சென்ற ஒருநூற்றாண்டில் நமக்கு மரபுடனான உறவு எவ்வண்ணம் கட்டமைக்கப்பட்டது என்பதை விவாதிக்க விரும்புகிறேன். வழக்கம்போல இலக்கியப் படைப்பாளி என்னும் என் எல்லைக்குட்பட்டு, இலக்கியதினூடாக.   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118366

மிசிறு

சிலகாலம் முன்னர் பத்மநாபபுரத்தில் என் அந்தக்கால தோட்டம்சூழ்ந்த வீட்டுக்கு என்னை பார்க்க வந்திருந்த தமிழ்நிலத்து நண்பர் ஒருவர் பலாமரத்தை சுட்டிக்காட்டி “ஜே, அது என்ன காய்? கொஞ்சம் வித்தியாசமா இருக்கே?” என்றார். நான் பார்த்ததுமே சிரித்துவிட்டேன். “பாத்ததே இல்லியா?” என்றேன். “இல்ல” என்றார். “கொஞ்சம் சீமைப்பலா மாதிரி இருக்கு” நான் “கூர்ந்து பாருங்க” என்றேன். அப்போதும் அவருக்கு சந்தேகம். “கொஞ்சம் புளிக்கும், பரவாயில்லையா?” என்றேன்.  “பாப்பம்” என்றார். அதை ஒரு குச்சியைக்கொண்டு பறித்துக் காட்டினேன். ”ஆ!” என்றார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118248

கும்பமேளா கடிதங்கள் – 2

நீர்க்கூடல்நகர் – 6 நீர்க்கூடல்நகர் – 5 நீர்க்கூடல்நகர் – 4 நீர்க்கூடல்நகர் – 3 நீர்க்கூடல்நகர் – 2 நீர்க்கூடல்நகர் – 1 அன்புள்ள ஜெ உங்கள் கும்பமேளா பதிவுகள் மிக வியப்பூட்டுபவை. பலமுறை வாசித்தேன். அவற்றிலுள்ள வர்ணனைகளுக்காகவே வாசிக்கவேண்டியிருந்தது. இருளில் ஓடும் கங்கையின் வர்ணனை எங்கே ஆழமானதாக ஆகிறதென்றால் கரையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த கும்பமேளாவை அது அறியாது என்று சொல்லுமிடத்தில்தான். போகிறபோக்கில் அப்படி ஏராளமான சித்திரங்கள் வந்தபடியே இருந்தன. அதிலும் பாபா தன் கூடாரத்துக்குக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118258

கடிதங்கள்

மங்காப் புகழ் புத்தர் டெசுக்காவின் புத்தர் வணக்கம். இன்று மதுரை ரயிலடியில் உங்களைப் போன்றே ஒருவர் பாண்டியன் ரயிலுக்கு அவசரமாக போய் கொண்டிருந்தார். ஒருவேளை நீங்கள்தானோ. ஒரு புன்னகையை விடுப்பதற்குள் கடந்துவிட்டதை நினைத்து எழுதுகிறேன். உங்களை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். நன்றி கண்ணன் கே அன்புள்ள கண்ணன் சுந்தரராமசாமியின் யாரோ ஒருவனுக்காக என்னும் கவிதை ‘அச்சு அசலாக என் நண்பனைக் கண்டேன்” என்று தொடங்கும். “அவ்வாறு எண்ணாமலிருந்தால் அவனே வந்திருப்பான்” என முடியும். நீங்கள் ஒரு புன்னகை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118243

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-56

பூரிசிரவஸ் அர்ஜுனனை அம்புகளால் எதிர்க்கத் தொடங்கியபோதே திருஷ்டத்யும்னன் ஒன்றை உணர்ந்தான், ஒவ்வொருவரும் தங்கள் ஆழுளத்து எதிரியை நேரிலும் கற்பனையிலும் சந்தித்து போரிட்டுப் போரிட்டு தங்கள் திறன்களை தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் முதன்மை எதிரி அளவுக்கே ஒவ்வொருவரும் எழுந்துவிட்டிருக்கிறார்கள். போர் ஒரு பயிற்சிக்களம் என மாறி அனைவரையுமே அவர்கள் கொண்டுள்ள தடைகளிலிருந்து எழச் செய்திருக்கிறது. பூரிசிரவஸ் அர்ஜுனனை நிகர்நின்று எதிர்த்தான். முன்பு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அம்புக்கும் அவனை பின்னடையச் செய்த ஒரு தடையை அவன் கடந்துவிட்டிருந்தான். ஒவ்வொரு வீரனும் தன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118220