Daily Archive: February 17, 2019

பெரு விஷ்ணுகுமார்

இனிய ஜெயம் அடிக்கடி ரயில் கடக்கும் தண்டவாளங்களருகே ஆடு மேய்ப்பவன் கண்களை ஜன்னல்கள் தோறும் பதித்து வைத்து விடுகிறான் தடியின் உதவியாலும் மந்தையுடனும் இரவில் வீடு திரும்புகிறான் மறுநாள் ஆடுகள் அவனைப் பத்திரமாகத் தண்டவாளங்க அருகே அழைத்துப் போய் விடுகின்றன முதல் ரயில் கடந்து போகையில் கண்களைத் திருப்பித் தருகின்றன கடைசி ரயில் வாங்கிக் கொள்கிறது மனைவியிடம் இதை சொல்ல வேண்டாமென ஆடுகளிடம் சொல்லி வைத்திருக்கிறான் ( பெரு. விஷ்ணுகுமாருக்கு) விகடன் விருது பெறுவதை ஒட்டி ,கவிஞர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118206

கேசவமணி

அன்புள்ள ஜெயமோகன், உலக இலக்கியங்கள் குறித்த இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். https://kesavamanitp.blogspot.com/2019/02/blog-post_12.html https://kesavamanitp.blogspot.com/2019/02/blog-post_10.html குருதி நிறம் என புதிதாகத் தொடர் ஒன்று எழுதத் தொடங்கியுள்ளேன் https://kesavamanitp.blogspot.com/2019/02/1.html அன்புடன், கேசவமணி

Permanent link to this article: https://www.jeyamohan.in/118239

ஆயிரங்கால்கள் – கடிதங்கள்

ஆயிரங்கால்களில் ஊர்வது அன்புள்ள ஜெயமோகன் சார் “ஆயிரங்க்கால்களில் ஊர்வது” படித்தேன். இப்போது நான் எனது வாழ்வில் அடுத்த அடி எடுத்து வைப்பதற்கான ஒரு கட்டத்தில் இருக்கிறேன். மனதில் எந்த குழப்பங்களும் இல்லை. எந்த பயமும் இல்லை . ஆனாலும் நீங்கள் ஜி.குமாரபிள்ளை கூறியதாக கூறிய  ‘ஒட்டுமொத்தமாக கனவுஜீவியாகவும் அன்றாட நடைமுறையில் யதார்த்தவாதியாகவும் இருப்பதே காந்திய வழிமுறை’ வரி இப்போதுதான் நான் கறாராக கடைபிடிக்க ஆரம்பித்திருக்கும் வழி. உங்களின் எழுத்துவழியாய் வந்திருப்பதினால் ஒரு அசரிசி போல என்னிகொள்கிறேன். எண்ணி எண்ணி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118241

பனை – கடிதங்கள்-2

பனைகளின் இந்தியா – அருண்மொழி நங்கை அன்புநிறை ஜெ, பனைகளின் இந்தியா வாசித்தேன். இந்தத் தலைப்பே மனதுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. எந்த ஆரவாரமுமின்றி எளிமையான கிராமத்து மனிதரைப் போல நம் பயணங்களில் கவனம் பெறாது கடந்து பின்நகரும் பனை, ஓலைகளாகத் தாங்கி நின்ற மானுட அறிதல்கள் எத்தனை!! அதற்காக ஒருவர் மேற்கொண்ட பயணம், அதைப் பற்றிய எழுத்து மீண்டும் பனைகளை அடையாளப்படுத்தியிருக்கிறது. ஆறுமுகநேரியிலிருந்து அடைக்கலாபுரம் வழியாகத் திருச்செந்தூர் செல்லும் சாலையில் நடந்த இளவயது நினைவுகள் கிளர்ந்தெழ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118102

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-55

பார்பாரிகன் சொன்னான்: துரோணருக்கும் துருபதருக்கும் இடையேயான போர் மிக இயல்பாகவும் மிகமிக தற்செயலாகவும் நிகழ்ந்தது. அது நிகழாதொழிய இயலாதென்பதுபோல அது தொடங்கிய தருணத்திலேயே தோன்றியது. குருக்ஷேத்ரப் போர் தொடங்கிய நாள் முதலே அவர்கள் இருவரும் களத்தில் மோதிக்கொண்டேதான் இருந்தனர். பாறை மேலிருந்து காட்டுயானைமேல் கல் வீசி சீண்டுவதுபோல துருபதர் எப்போதும் பாதுகாப்பான இடத்தில் இருந்துகொண்டே துரோணரிடம் மோதினார். எந்நிலையிலும் பின்வாங்க இடம் வைத்திருந்தார். ஒவ்வொருமுறையும் தன்னைக் காக்கும் துணைப்படைகளை எச்சரிக்கையுடன் இருபக்கமும் நிறுத்திக்கொண்டார். ஒவ்வொரு போருக்குப் பின்னும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118112