கும்பமேளாவைப்பற்றிய புராணக்கதைகள் பல. பெரும்பாலான கதைகள் தேவர்களும் அசுரர்களும் கடைந்து எடுத்த விண்ணின் அமுதம் நீரில் விழுந்தது, அத்தருணத்தில் நதிநீர் அமுதமாக மாறுகிறது, அதில் நீராடினால் பாவங்கள் அகலும் என்னும் நம்பிக்கையின் வெவ்வேறு வடிவங்கள். ஆனால் இந்தக்கதைகள் மிகமிக பிற்காலத்தையவை. சொல்லப்போனால் இந்தியாவில் பத்தாம்நூற்றாண்டுக்குப் பின்னர் பக்தி இயக்கம் பெரும் மக்களியக்கமாக ஆனபின்னர், எளியமக்கள் பல்லாயிரக்கணக்கில் இவ்விழாவில் பங்குகொள்ள வரத்தொடங்கியபின்னர், அவர்களின் புரிதலுக்காக உருவாக்கப்பட்டவை. ஆகவே பொதுவாக மிகமிக எளிமையானவை. வரலாற்றுரீதியாக கும்பமேளாவை இரண்டு கோணத்தில்தான் புரிந்துகொள்ள …
Daily Archive: February 12, 2019
Permanent link to this article: https://www.jeyamohan.in/118074
தஸ்தயேவ்ஸ்கி, விஷால்ராஜா – கடிதம்
மனிதனாக இருப்பது என்றால் என்ன? அல்லது கொலை செய்யாமல் இருப்பது எப்படி? -விஷால் ராஜா அன்புள்ள ஜெயமோகன், தமிழிலும் சரி, பொதுவாக இந்திய இலக்கியச்சூழலிலும் சரி , எழுதவரும் எழுத்தாளர்கள் டால்ஸ்டாய், டோஸ்டோயெவ்ஸ்கி படைப்புக்கள் வழியாகவே ‘வயசுக்கு’ வருகிறார்கள். அவர்களை வாசிக்காதவர்கள் கடைசிவரை அமெச்சூர்களாகவே நீடிக்கிறார்கள். இது வாசகர்களுக்கும் பொருந்துவது. அவர்களை வாசிக்காதவரை உண்மையில் எழுத்தின் இயல்பென்ன என்றும் கடைசி இலக்கு என்ன என்றும் பெரும்பாலானவர்களுக்குப் புரிவதில்லை. இவர்களுக்குச் சமானமான கிளாஸிக்கல் எழுத்தாளர்கள் மேற்கே மேலும்பலர் உண்டுதான். …
Permanent link to this article: https://www.jeyamohan.in/118070
பத்மபிரபா நினைவு விருது
என்றாவது வெகுதூரப் பயணத்துக்குப் பிறகு வீடு திரும்பும் நேரம் ஏதோவொரு நாளின் குளிரடங்காத அதிகாலையாகவே இருக்கிறது. கதவைத் திறந்த அம்மா கைப்பையை வாங்கியதும் இளைத்துப் போனாயே என்று கைகளைப் பிடித்துக் கொள்கிறாள். காய்சலோ வேறு தொந்தரவோ என்று நெற்றியையும் கன்னத்தையும் தொட்டுப் பார்க்கிறாள். குளிரில் நடுங்கும் உடலில் மேலும் அவள் தொடுகை சில்லிடுகிறது. அப்படித்தான் கவிஞர் கல்பற்றா நாராயணனின் சொற்கள். அவர் தன் கவிதைகளைச் சொல்வதோ தன் நிலத்துக்கே உரிய குளிராக. இரவில் மலையேற்றமும் காணத்தோன்றாத உறக்கத்தில் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/118065
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-50
ஏகாக்ஷர் சொன்னார்: கடலை அணுகும்தோறும் அகலும் ஆறுபோல் குருக்ஷேத்ரப் பெருங்களத்தில் போர் விரிந்து கிளைபிரிந்து பரவிக்கொண்டிருக்கிறது. இன்று அது ஒரு போரல்ல, நூறு முனைகளில் நூறு நூறு விசைகளுடன் நிகழும் ஒரு கொந்தளிப்பு. அரசி கேள், இன்று ஜயத்ரதன் கொல்லப்பட்டான். அவனை கொல்லும்பொருட்டும் காக்கும்பொருட்டும் நிகழ்ந்தது இன்றைய பொழுதின் சூழ்கைகளும் மோதல்களும். ஆனால் பிறிதோரிடத்தில் பீமன் மதவேழத்தின்மேல் காட்டெரி பட்டது என வெறியும் விசையும் கொண்டிருந்தான். அங்கு நிகழ்ந்த போரை எவரும் காணவில்லை. சூதர் சொல்லில் அது …
Permanent link to this article: https://www.jeyamohan.in/118024