Daily Archive: February 4, 2019

கல்பற்றா நாராயணனுக்கு விருது

  கேரளத்தில் வழங்கப்படும் முக்கியமான இலக்கிய விருதான  ‘பத்மபிரபா விருது’ மலையாளக் கவிஞரும் விமர்சகரும் பேச்சாளருமான கல்பற்றா நாராயணனுக்கு வழங்கப்படுகிறது. மலையாள நாளிதழான மாத்ருபூமியின் உரிமையாளர்களில் ஒருவரான எம்.பி.வீரேந்திரகுமார் தன் தந்தை பத்மநாப கௌடரின் நினைவாக இவ்விருதை அளிக்கிறார். 1996 முதல் தொடர்ச்சியாக இந்த விருது வழங்கப்பட்டுவருகிறது. வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி கேரளத்தில் கல்பற்றா நகரில் இவ்விருது வழங்கப்படுகிறது. நான் 3 அதிகாலை அலஹாபாதிலிருந்து கோவை வந்திறங்கி கல்பற்றா செல்கிறேன். 4 அங்கிருப்பேன். ஐந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117824

விமானநிலையப் பிச்சை

நான் உலகின் சிறிதும் பெரிதுமான பல விமானநிலையங்களில் இருந்து பயணம் செய்திருக்கிறேன். ஆப்ரிக்காவின் மிகச்சிறிய விமானநிலையங்களில்கூட. இந்தியாவிலேயே ராய்ப்பூர் போன்ற மிகமிகச்சிறிய விமானநிலையங்களில் இருந்தும் விமானம் ஏறியிருக்கிறேன். இதுவரை வேறெங்குமே காணாத ஒரு வழக்கம் தமிழக விமானநிலையங்களில் உண்டு. கழிப்பறைப் பிச்சை. சென்னை, திருச்சி இரு விமானநிலையங்களிலும் கழிப்பறைகளில் துடைப்பத்துடன் சீருடையில் நின்றிருக்கும் பணியாளர்கள் கைநீட்டி பிச்சை எடுப்பார்கள். சென்னையில் காகிதக் கைக்குட்டையை கத்தையாக கையில் வைத்துக்கொண்டு ஒருவர் நிற்பார். நாம் கழிப்பறையிலிருந்து ஈரக்கையுடன் அங்குமிங்கும் தேடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117818

ஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி

எஸ்.பொன்னுத்துரை: யாழ்நிலத்துப் பாணன்-1,  யாழ்நிலத்துப்பாணன் -2,யாழ்நிலத்துப்பாணன் -3 புன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து ரத்தம், காமம், கவிதை:சேரனின் கவியுலகு கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு அகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள் ஒருதுளி இனிமையின் மீட்பு உதிர்ந்த ரத்தத்துளிகளின் கதை எஸ்.பொ மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் 1 மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் 2 மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் 3   மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் 1 மு .தளையசிங்கம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2705

பார்வதிபுரம் பாலம் – கடிதங்கள்

பார்வதிபுரம் பாலம் அன்புள்ள ஜெயமோகன் சார், நாகர்கோவிலில் மேம்பாலம் நாகர்கோவிலில் இருக்கிறது என்பதே ஆச்சரியம். பனிரெண்டு வருடங்களுக்கு முன் வடசேரியிலும் , கோட்டாரிலும் தங்கியிருந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் , சந்தை எல்லாம் நல்ல மழையில் உழவு உழுததுபோல் இருந்தது.  இன்று சென்னையில் நான் இருந்த இடங்களின் அருகில் வடபழனி பாலம் ,போரூர் பாலம் வந்துவிட்டது.  வண்டிகளும் ,ரயில்களும் வண்ண வண்ண கலர்களில் பறப்பதை கண்டு பறக்கும்தலைமுறை என எண்ணிக்கொண்டேன். ஆனால் இந்தியாவிலேயே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117628

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-42

அவையில் ஒவ்வொருவராக வந்து அமர்ந்தனர். அந்த ஓசை ஒரு மந்தணப்பேச்சுபோல ஒலித்துக்கொண்டிருக்க அஸ்வத்தாமன் தன் படைசூழ்கையை தோல்சுருளில் இறுதியாக வரைந்துகொண்டிருந்தான். பூரிசிரவஸ் அவனருகே வந்து குனிந்து “பணிமுடியவில்லையா?” என்றான். “இல்லை, நான் இன்று எட்டு வெவ்வேறு சூழ்கைகளை வகுத்துவிட்டேன். எதுவுமே சரியாக அமையவில்லை. திரும்பத் திரும்ப பிழைகளையே காண்கிறேன்” என்றான் அஸ்வத்தாமன். “வழக்கமாக ஒரே கணத்தில் ஒரு சூழ்கையை முடிவுசெய்வீர்களே?” என்றான் பூரிசிரவஸ். “ஆம், நான் எண்ணிப்பார்ப்பதே இல்லை. படையிலிருந்தே அதை பெறுவேன். இன்று ஒன்றுமே தோன்றவில்லை” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117427