Daily Archive: February 3, 2019

குழந்தைகளுக்கு புராணங்களை கற்றுக்கொடுக்கலாமா?

குழந்தைகளுக்கு மதம் ஜெ வணக்கம், இந்த வருடம் தொடக்கத்தில் இருந்து குழந்தைகளுக்கு (10 மற்றும் 5 வயது) மகாபாரத கதையை ஒலி புத்தக வடிவில் கேட்கவைக்கலாம் என்று அமேசானில் உள்ள இஸ்கான் அமைப்பின் ஆங்கில மதிப்பின் மாதிரியை கேட்டேன் அந்த மாதிரியில்; விச்சித்திரவீரீயன் இறந்து விடுகிறான். நியோக நியதி படி அம்பிக்கையையும் அம்பாலிகையையும் கருவுற செய்ய முடிவெடுக்க படுகிறது. விச்சித்திரவீரீயனின் அண்ணனின் துணையுடன்.அம்பிகை பீஷ்மரை எண்ணியபடி சிறு உவகையுடன் மஞ்சத்தில் அமரந்திருக்க, ஓரு கரிய அழுக்கு படிந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117588

ஏன் வரலாற்றை சொல்லவேண்டும்? – கடிதம்

வெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும்? அன்புள்ள ஆசிரியருக்கு , இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வெள்ளை யானையை பற்றிய எண்ணம் இன்று கூட வந்து போனது. புத்தாண்டு வாழ்த்து சொன்ன என் மைத்துனரிடம் பரியேறும் பெருமாள் படம் பற்றி பேசும் போது, அவர் நான் ரஞ்சித் படம்னு தெரியாம பாத்துட்டேன் மச்சான் ..அவன் ரொம்ப பேசறான் என்னும் போது எனக்கு மின்னலென வெள்ளை யானை சித்திரம் வந்து மறைந்தது..வெள்ளை யானை மற்றும் நூறு நாற்காலிகள் போன்ற ஆக்கங்களின் தேவைகள் என்றைக்கும் விட இன்றைக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117543

தெய்வங்கள் தேவர்கள் பேய்கள் – கடிதம்

அமேசானில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’ மின்னூல் வாங்க நற்றிணையில் தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் – அச்சுநூல் வாங்க குலதெய்வங்கள் பேசும் மொழி – முன்னுரை இது அக வெளி -லட்சுமி மணிவண்ணன் பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு தங்களின் தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் படித்தேன். பின்வருமாறு தொகுத்து கொண்டுள்ளேன். தங்களின் பார்வைக்கு வேதங்களில் உள்ள ஒரு அரிய படிமம் மூன்று தலைகள் கொண்ட முனிவர் “திரிசிரஸ்”. ஒரு தலை கல்லும் ஊனும் உண்டு களித்திருக்கும்,இரண்டாம் தலை வேதமோதியபடி மகிழ்திருக்கும் , மூன்றாம் தலை இவை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117455

எஸ்.ராமகிருஷ்ணன், சஞ்சாரம் – கடிதங்கள்

எஸ்.ராமகிருஷ்ணனின் இரவும் பகலும்   எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி -கடிதங்கள் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அக்காதமி -கடிதங்கள் எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி விருது இசைக் கலைஞர்களைப் பற்றி எழுதப்பட்ட நாவல்களில் நான் இதற்குமுன் வாசித்தது தி.ஜானகிராமனின் “மோகமுள்”மற்றும் யுவனின் “கானல் நதி”.அவையிரண்டும்     பாடகர்களின் அக அலைக்கழிப்புகளைப் பற்றியே பிரதானமாகப் பேசுகிறது.ஆனால் எஸ்.ராமகிருஷ்ணனின் “சஞ்சாரம்” நாவல்  பெரும்பாலும்  நாதஸ்வரக் கலைஞர்களின் புற வாழ்வைப் பற்றிய படைப்பாகவுள்ளது. பாடகர்களைப் பொருத்தவரை அவர்கள்  அநேகமாக சமூகத்தின் உயர்நிலையில் இருப்பார்கள்.மாறாக நாதஸ்வரக் கலைஞர்கள் சமூகத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117564

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-41

யுதிஷ்டிரர் அர்ஜுனனின் குடிலுக்குள் நுழைந்தபோது அங்கே இருந்த நகுலனும் சகதேவனும் எழுந்து வணங்கினர். “எப்படி இருக்கிறான்?” என்று அவர் கேட்டார். சகதேவன் ஒன்றும் சொல்லவில்லை. யுதிஷ்டிரர் அவன் மஞ்சத்தின் அருகே அமர்ந்தார். காட்டுக்கொடிகளை இழுத்துக்கட்டி பின்னப்பட்டிருந்த அந்த மஞ்சம் அவருடைய உடல்பட்டு சற்று அசைந்தது. யுதிஷ்டிரர் “இளையோனே” என அழைத்தார். அர்ஜுனன் எதிர்வினை ஆற்றவில்லை. யுதிஷ்டிரர் “இளையோனே” என மீண்டும் அழைத்தார். பின்னர் சகதேவனிடம் “அகிபீனா கொடுக்கப்பட்டுள்ளதா?” என்றார். சகதேவன் “அவர் விழித்துத்தான் இருக்கிறார்” என்றான். யுதிஷ்டிரர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117361