Daily Archive: February 2, 2019

எழுத்தாளனுக்கான அஞ்சலி

அஞ்சலி:பிரபஞ்சன் பிரபஞ்சனும் ஷாஜியும் எழுத்தாளனாகவே வாழ்வது என்பது… பெருமரியாதைக்கு உரிய ஜெயமோகன் அவர்களுக்கு, எழுத்தாளனாகவே வாழ்வது எனும் கடலூர் சீனு அவர்களிடன் கடிதத்தை வாசித்தேன். எனக்கும் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் மேல் பெரும் மரியாதை உண்டு. அவர் துயர் மிகுந்த இறப்பிற்குப் பிறகு எழுதப்பட்ட முகநூல் பதிவுகள், கட்டுரைகள் பலவற்றையும் வாசித்து அவரது தனிப்பட்ட ஆகிருதி என்னவென புரிந்துகொண்டேன். ஆனால் எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. உங்களின் யானை சிறுகதையை நண்பர்கள் அனுப்பிய சுட்டியின் மூலமாக வாசிக்கச் சென்றபோது ம.நவீன் அவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117464

புத்தகக் கண்காட்சி – கடிதங்கள்

பேருருப் பார்த்தல் அன்புள்ள ஜெமோ, முதன்முறையாக புத்தக விழாவிற்கு வந்திருந்தேன். திருவிழாவில் தொலைந்த குழந்தையைப்போல் என் மனைவியுடனும் மகள்களுடனும் புத்தகங்களின் கதகதப்பான அணைப்பில் திரிந்தோம். நீங்கள் குறிப்பிட்டது போல் தமிழ் அறிவுச்சூழலின் மிகத்துல்லியமான உரையாடல்களம் இந்த விழா. பொது இரசனையுடன் நவீன எழுத்தும், பொதுப்பண்பாட்டுடன் தலித்தியம் மற்றும் தமிழ்த்தேசியப்பண்பாடும் பொரும் அழகான சிந்தனைக்களம் மிக இயல்பாகவே அமைந்தது. விமானப்பயணத்தின் எடைக்கணக்குகளை மனதில் கொண்டு அள்ளிய அத்தனை நூல்களையும் வாங்காமல் குறைத்துக்கொள்ள நேர்ந்தது.இருப்பினும் பனி மனிதனும் பொன்னியின் செல்வனும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117486

ரயிலில் – ஒரு கட்டுரை

அண்மையில் வாசித்த ஜெயமோகனின் ‘ரயிலில்’ சிறுகதை நல்கிய வாசிப்பனுபவம் பதிவுசெய்யப்பட வேண்டியது. ஜெயமோகன் பெரும்பாலும் மையமான ஒரு புள்ளியில் இருந்து கதை சொல்பவர் அல்ல என்பது எனது அவதானிப்பு. தான் பேச எடுத்துக்கொண்ட கதையின் எல்லா சாத்தியமான சந்துபொந்துகளுக்கும் நுளைந்து பிரித்து மேய்ந்து விட வேண்டும் என்கிற ஜெயமோகனது வேட்கையை அவரது பலகதைகளிலும் அவதானித்திருக்கிறேன். மேலும், கதை முடிந்துவிட்டது என வாசகன் நினைக்கும் ஒரு புள்ளியில், இல்லை, கதை இன்னும் முடியவில்லை எனச் சொல்லி மிக நுணுக்கமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117474

கிண்டிலில்…

வெண்முரசு கிண்டில் -சலுகை விஷ்ணுபுரம் கிண்டிலில்… அன்புள்ள ஜெயமோகன், நலம் விழைகிறேன். பணிச்சூழலால் டாலஸ் வந்து 2 ஆண்டுகளாகிறது – வெண்முரசு செம்பதிப்புகள்  இந்தியாவில் இருக்க  இங்கே கிண்டிலில்  தான் வாசிக்கிறேன். இப்போது கிராதத்தில் இருக்கிறேன். வந்த புதிதில் வாங்கிய வேறு சில கிண்டில் நூல்களின் எழுத்துப்பிழைகளும் திடீரென நடுநடுவில் தோன்றும் சித்திர எழுத்துக்களும் தந்த அச்சத்துடனும் தயக்கத்துடனும் தான் வெண்முரசு நூல்களை வாங்கினேன். தரமான தயாரிப்பு – ஈடுபட்ட எல்லோரும்  பாராட்டுக்குரியவர்கள். இணையத்தில் வாசிக்கலாமெனினும் கிண்டிலின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117562

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-40

அஸ்தினபுரியின் புஷ்பகோஷ்டத்தில் ஏகாக்ஷரின் கதை கேட்டு அமர்ந்திருந்த காந்தாரி மெல்லிய சீறல் ஒலியுடன் தலை குனிந்து விழிநீர் பெருக்கினாள். அவள் கண்களைக் கட்டியிருந்த நீலப் பட்டுத் துணியை நனைத்து அவ்விழிநீர் ஊறிப்பரவியது. காந்தாரியின் அருகே நின்றிருந்த சத்யசேனை குனிந்து அவள் தோளைப் பற்றி மெல்ல தட்டி “அரசி! அரசி!” என்றாள். காந்தாரி இரு கைகளாலும் கன்னத்தை அழுந்தத் துடைத்து மூச்சை இழுத்து சீராகி “ம்” என்று முனகினாள். போதும் என்பதுபோல் சத்யசேனை கைகாட்டினாள். அதை நோக்காமலேயே உணர்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117571