Daily Archive: February 1, 2019

காலைநடையில்…

காலையில் நடைசெல்வதை சிலநாட்களாக எனக்கே கட்டாயமாக்கிக்கொண்டிருக்கிறேன். சில மேலதிகக் கட்டாயங்களும். காலையில் நடைசென்று திரும்பிவருவதுவரை மின்னஞ்சல்கள் பார்ப்பதில்லை. செய்தித்தாள்கள் படிப்பதோ செய்திகளை அறிந்துகொள்வதோ இல்லை. எழுந்ததுமே நேராக டீக்கடைக்கு செல்வேன். அங்கே ஒரு ‘சாயா’. கடி கடி என ஆசைகாட்டும் பருப்புவடைகள் பழம்பொரிகளை திரும்பிப்பார்ப்பதில்லை – ஓரக்கண்ணால் பார்ப்பதுடன் சரி. ஆனால் பொன்னிறமான பழம்பொரிகளின் துடிக்கும் இளமை. ஆன்மாவின் கட்டுகள் அறுந்து சிலசமயம் கையில் எடுத்துவிடுவதும் உண்டு. ஏசுராஜ் வாத்தியார் சொன்னார். “அப்டித்தான் தோணும் சார். நாம …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117549

இந்தியப்பயணம் பற்றி…

இந்தியப்பயணம் வாங்க அன்புள்ள ஆசானுக்கு , நலம் என்று நம்புகிறேன்.  வழக்கமாக  தேர்வுக்கு படிக்கும்  நேரங்களில்  தங்களின் பயணக்கட்டுரைகளை படிப்பேன். (புனைவுகளை இந்த நாட்களில் தவிர்ப்பேன்). அது செயலற்று ஒரே இடத்தில் இருந்து பாடங்களை படித்துக்கொண்டு இருப்பதற்கு  ஒரு விடுபடலாக எனக்கு இருக்கும் , அப்படிதான் சென்ற ஆண்டு தங்களின் குகைகளின் வழியே  மற்றும் நூறு நிலங்களின் மலை பயணங்களை வாசித்து  தேர்வுக்கும் படித்துக்கொண்டு இருந்தேன். அது இருக்கும் இடத்தை விட்டு உங்களுடன் பயணம் செய்த ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117568

ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்

அன்புள்ள ஜெ.. அரசியல் தலைவர்களுக்கு நீங்கள் அஞ்சலிக்குறிப்புகள் எழுதுவது இல்லை . கலைஞர் , ஜெ போன்றோர்களுக்கே எழுதவில்லை என்றாலும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் குறித்து எழுத வேண்டும் என்பது எங்கள் விருப்பம் எமர்ஜென்சி கொடுமைகளை மறந்து காங்கிரசுடம் உறவாடி பதவி சுகங்களை அனுபவிக்கும் கட்சிகள் மத்தியில் அவர் போன்ற லட்சியவாத தலைவர்கள் கோமாளிகளாக கருதப்பட்டு மறக்கப்படும் அபாயம் அதிகம் இந்திய ஜன நாயகத்தை மீட்டெடுத்தவர்களில் ஒருவரான அவரை நினைவில் கொள்வது அவசியம் http://www.pichaikaaran.com/2019/01/blog-post_29.html அன்புடன் பிச்சைக்காரன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/117748

குகைக்குள்…

குகை [சிறுகதை]-1 குகை [சிறுகதை] -2 ‘குகை’ [சிறுகதை]-3 ‘குகை’ -சிறுகதை -4 அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, குகைக்குள் பிரவேசித்து ஸ்தம்பித்து விட்டேன். காந்தி திரைப்படத்தில் ஒரு காட்சி. இந்தியாவை அதன்மண்ணை, மரபை, மக்களை புரிந்து கொள்ள காந்தி ரயிலில் பயணிப்பார். அவருடன் கஸ்தூரிபாய் மற்றும்ஆங்கிலேய நண்பர் சார்லஸ். ஜன்னல் வழியே காண்பவற்றை உள்வாங்கி காந்தி காகிதத்தில் எழுதுவார்.ரயில் தென்னிந்தியா முழுக்க செல்லும். டிக்கெட் வாங்க வசதியற்ற எளிமையான இந்திய மண்ணின்பூர்வகுடிகள் ரயில் மேல் அமர்ந்தபடி பயணிப்பர். அவர்கள் சார்லியை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117479

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39

நாகக் களமுற்றத்தில் அமர்ந்து அரவான் சொன்னான். நான் இப்போது நூற்றெட்டு இதழ்களுடன் விரிந்த பெருந்தாமரையின் இதழ்கள் ஒன்றன்மீது ஒன்றென மெல்ல படிந்து ஒற்றை வளையமென்றாகி குவிந்து மொட்டாகி இறுகி செண்டாகி மணியாகி மூடிக்கொள்வதை பார்க்கிறேன். உறுதியான ஓர் எண்ணம் மலரை உலோகமென்றாக்கும் என்பதை அறிந்தேன். மலர்ச்சூழ்கைக்குள் பாண்டவ இளையோனாகிய அபிமன்யு முழுமையாகவே சிக்கிக்கொண்டான். அவனைச் சூழ்ந்து கௌரவர்களின் பெருவீரர்கள் அனைவரும் குலைத்த வில்லுடன் நிறைந்த ஆவநாழியுடன் வந்து வளையமென்றானார்கள். நெடுநேரம் என்ன நிகழ்கிறதென்று அபிமன்யுவுக்கு புரியவில்லை. வெறிகொண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117538