Daily Archive: January 31, 2019

இரு அளவுகோல்கள்

இலக்கியமுன்னோடிகள் அன்புள்ள ஜெயமோகன் சார், நீங்கள் இலக்கிய முன்னோடிகள் என்ற புத்தகத்திற்கான கேள்வி- பதிலில் நீங்கள் கூறிய அனைத்து கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். கட்டுரைகள் குறிபிட்ட எழுத்தாளர்களின் எழுத்துகளையும் கொஞ்சம் வாசித்திருக்கிறேன். பூமணியின் ” அஞ்ஞாடி, வெக்கை”, ராஜ்கவுதமனின் “சிலுவைராஜ் சரித்திரம், ஜோ.டி.குரூசின் “ஆழிசூழ் உலகு” , வேணுகோபாலின் “அஞ்சலை ” , ஹெப்சிபா ஜேசுதாசனின் ” புத்தம்புதிய வீடு” ,வெங்கடேசனின் ” காவல் கோட்டம்” ராமகிருஷ்ணனின் சில நாவல்கள் எல்லாம் நீங்கள் விமர்சனமும் விளக்கமும் கொடுத்த பிறகுதான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117445

பிரதமன் – கடிதங்கள் 9

பிரதமன்[சிறுகதை] அன்புள்ள ஜெ பல கடிதங்களை வாசித்தபின்னர்தான் பிரதமன் கதையை வாசித்தேன். மீண்டும் மீண்டும் புதிய அனுபவங்களை அளிப்பதாக இருந்தது அந்தக்கதை. அதில் இருக்கும் உறவுகளின் சிக்கலான வலையை பலபேர் பார்க்கவில்லை. ஆசானுக்கு அவர் மாணவன் மீதிருக்கும் பிரியம். அந்த மாணவனுக்கும் மற்ற சமையற்காரர்களுக்கும் இருக்கும் உறவு. சமையற்காரர்களுக்கு ஆசானிடம் இருக்கும் ஆழமான மதிப்பு. இப்படி இத்தனை மனிதர்கள் ஒரு சின்னக்கதைக்குள் நிறைந்து உலவிக்கொண்டிருப்பது மிக அபூர்வம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்தப்பாயசம் எழும் கணம் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117457

புத்தகக் கண்காட்சியில் – கடிதம்

பேருருப் பார்த்தல் அன்புநிறை ஜெ, இன்றைய தமிழ் இந்துவில் புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர்கள் எஸ்.ரா, சாருநிவேதிதா, மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் பெரும்பாலும் தினமும் வந்து வாசகர்களை சந்தித்து கலந்துரையாடி, புத்தகங்களில் கையெழுத்திட்டு தந்தார்கள், நான்கு மூர்த்திகளில் ஜெயமோகன் மட்டும் மிஸ்ஸிங் என்று குறிப்பிட்டிருந்தார்கள். கூடவே தாங்களும் ஒரு பதிப்பகம் தொடங்க இருப்பதாக செய்தி என்று குறிப்பிட்டுள்ளார்கள். (மேலதிக விவரங்கள் தெரியவில்லை போலும்). தாங்கள் புத்தகக் காட்சியை கடந்த சில ஆண்டுகளாக தவிர்ப்பதற்கான காரணம் முன்பே சொல்லியிருந்தீர்கள். இதைப் படித்தவுடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117512

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-38

காந்தாரியின் அரண்மனையில் தன் ஒற்றை விழி இமைக்காது வெறித்திருக்க இரு கைகளும் வெறுங்காற்றிலிருந்து எதையோ துழாவி எடுப்பதுபோல் அலைபாய ஏற்ற இறக்கங்களோ உணர்ச்சிகளோ அற்ற சீர் குரலில் ஏகாக்ஷர் சொன்னார். அரசி, குருக்ஷேத்ரத்தில் இந்த இளங்காலையில் நான் காண்பது பத்மவியூகம் பொறியென உயிர்கொள்வதை. தாமரையில் அடித்தண்டென சகுனி தன் பதினெட்டு செய்தி முரசுகளுடனும் நூற்றெட்டு கொம்புகளுடனும் கூடிய செய்திமாடத்தை நிறுவி அதை சுற்றியும் காந்தாரப் படைகளை வட்டமாக அமைத்து நிலைகொண்டிருக்கிறார். ஆயிரம் கூண்டுகளில் செய்திபுறாக்கள் சிறகொடுக்கி கழுத்துக்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117529