Daily Archive: January 30, 2019

குளச்சல் மு.யூசுப்புக்கு சாகித்ய அக்காதமி

இந்த ஆண்டுக்கான மொழியாக்கத்திற்குரிய சாகித்ய அக்காதமி விருது குளச்சல் மு யூசுப் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழின் முக்கியமான மொழிபெயர்ப்பாளர் யூசுப். மலையாள வட்டாரவழக்கை மிகச்சிறப்பாக தமிழாக்கம் செய்தவர். தமிழில் அதற்கு நெருக்கமான நாஞ்சில்நாட்டு வட்டாரவழக்கை கையாள்பவர். குறிப்பாக வைக்கம் முகம்மது பஷீர், புனத்தில் குஞ்ஞப்துல்லா போன்றவர்களின் மலபார் இஸ்லாமிய மொழிவழக்கை  அழகிய நாஞ்சில் இஸ்லாமிய  புழக்கமொழியில் அவர் மொழியாக்கம் செய்யும்போது ஏறத்தாழ மூலத்தின் சுவை நிகழ்கிறது. சரளமான உரைநடை அவருடையது, அதே சமயம் அது பெரும்பாலும் மூலத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117713

ஓர் அறிவியல் சிறுகதைப் போட்டி

அறிவியல் புனைகதைகள் பற்றி…ஜெயமோகன் பேட்டி   அரூவின் இரண்டாவது இதழில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் சரவணன் விவேகானந்தன் செய்த நேர்காணல் வெளிவந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஒர் அறிவியல்புனைகதைப் போட்டி அறிவிக்கப்படுகிறது இதன்படி இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படம் சிறந்த மூன்று கதைகளுக்கு தலா ரூ. 10000[பத்தாயிரம்] பரிசு. அரூவின் ஏப்ரல் இதழில் வெற்றிபெறும் கதையும் தேர்ந்தெடுக்கப்படும் சில கதைகளும் வெளியாகும்.   போட்டியின் விதிமுறைகள் 1. அறிவியல் புனைவு சிறுகதைகள் மட்டுமே போட்டிக்கு ஏற்கப்படும் 2. அந்தப்பேட்டியில் ஜெயமோகன் பல அறிவியல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117483

ஆகாயமிட்டாய் – கல்பற்றா நாராயணன்

  நண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானாலும் தீர்ந்ததே   வம்ச முத்திரை இல்லாத ஜாதி அடையாளம் இல்லாத உயிர்கள் அனைத்திற்கும் மேல் சமமான ஊக்கத்துடன் பெய்திறங்கும் மழை முதல்முறையாக ஒரு பெண்ணின் பெயராக மாறியிருக்கிறது   மழை போல ஒரு நல்ல பெயர் எவ்வளவு காலங்களுக்கு ஒருமுறை ஒரு பெண்ணுக்கு கிடைக்கிறது! குழந்தையாக இருக்கையிலேயே அவளுக்குரிய பெயர் அமைந்துவிட்டது   மழைக்கும் இருக்குமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117402

வெள்ளையானை – கடிதங்கள்

வெள்ளையானை வாங்க வெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும்? அன்புள்ள ஜெ  , வணக்கம்   இது என் முதல் கடிதம்  தங்களது நூல்கள்  வாசிக்க  துவங்கியுளேன்   இணைய தளம் ,  புத்தகம் மற்றும் Kindle வாயிலாக.  நான் வேலை    தொடர்பாக புவனேஸ்வர் சென்றேன் .உடன் வாசிப்புக்காக  கன்னிமாரா  நூலகத்தில்  கடன்பெறப்பட்ட வெ ள்ளை யானை  மற்றும்  கரிச்சான்  குஞ்சின்  எது நிற்கும்?  சிறுகதை தொகுப்பு . பயணத்தின் இறுதி நாள் இரவு  வெ ள்ளை யானையில் அயர்லாந்து  இளைஞன்  ஏய்டன் பைர்ன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117309

நித்யாவின் பெயர்

அன்புள்ள ஜெ வணக்கம் கோவையில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வரும் எப்போ வருவாரோ நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன் திரு கிருஷ்னா என்பவர் ரமணரைப் பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார் . ரமணரை சந்தித்து பின் ஞானம் பெற்றவர்கள் பற்றி ஒவ்வொருவராக விவரித்து வந்தார். அந்த வரிசையில் குரு நித்யாவை சொல்லும் முன் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுடைய குரு நித்ய சைதன்ய யதி என்று சொன்னார். ஒருகணம் திகைத்துப் போனேன் ஆயிரம் பேருக்கு அருகில் கலந்து கொண்ட ஒரு பொது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117461

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-37

அஸ்வத்தாமன் அவை நிறைந்துகொண்டிருப்பதை பார்த்தபடி அறிவிப்புமேடை அருகே நின்றான். அவையினர் கலைந்த பேச்சொலிகளுடன், தயக்கமான உடலசைவுகளுடன் இருந்தார்கள். கிருபரும் சுபலரும் பேசியபடி வந்தமர்ந்தனர். சகுனி தனியாக வந்து தன் பீடத்திலமர்ந்து அலுப்புடன் விழிகளை மூடிக்கொண்டார். அவர் அருகே வந்து குனிந்து ஏதோ கேட்ட மைந்தன் உலூகனிடம் சலிப்புடன் ஏதோ சொல்லி கையசைத்தார். அவன் வணங்கி விலகி அப்பால் அமர்ந்தான். ஜயத்ரதனும் பூரிசிரவஸும் வந்தனர். பூரிசிரவஸ் அஸ்வத்தாமனின் அருகே வந்து தலைவணங்கினான். அஸ்வத்தாமன் அவையை ஒருமுறை நோக்கிவிட்டு பூரிசிரவஸிடம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117232