Daily Archive: January 28, 2019

புதியவாசகர் சந்திப்பு – ஈரோடு

நண்பர் கிருஷ்ணன் [ஈரோடு] இந்த அறிவிப்பை அனுப்பியிருக்கிறார். புதிய வாசகர்களுக்கான சந்திப்பு இது. இதுவரை வராதவர்களுக்கு முன்னுரிமை. அந்த அளவுக்கு ஆர்வம் கொண்ட புதியவாசகர்கள் இருக்கிறார்களா என்று கொஞ்சம் குழப்பம்தான். இருந்தாலும் பார்க்கலாம். வழக்கம்போல இலக்கியம் குறித்த உரையாடல்கள். எழுதத் தொடங்குபவர்கள் தங்கள் மாதிரிப் படைப்புகளுடன் வந்தால் அவற்றைப்பற்றி விவாதிக்கலாம். இதில் எழும் முதன்மையான நம்பிக்கை சில ஆண்டுகளுக்கு முன்பு தயக்கத்துடன் இப்படி வாசகர் சந்திப்புக்கு வந்த பலர் இன்று எழுத்தாளர்கள் என்பது. பார்ப்போம். ஜெ ஈரோடு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117251

ஆயிரங்கால்களில் ஊர்வது

அன்புள்ள அப்பா, என் பெயர் பொன்மணி, சொந்த ஊர் மதுரை, தற்போது குக்கூ காட்டுப்பள்ளியில் இருக்கிறேன். என் அண்ணன் பெயர் அருண்குமார், பாசமலர் அண்ணன் தங்கை போல நல்ல பாசம் எங்களுக்கு. பால்ய வயதில் அருண் தான் எனக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தியது. ஓரளவு கதை, நாவல் என வாசித்தலில் இருந்தபோது அருண் தந்த “யானை டாக்டர்” எனக்குள் பெரும் மாற்றம் ஏற்படுத்தியது. சொற்கள், தத்துவம், வர்ணனைகளின் கோர்வை பிடிபட்டது. பிறகு உங்கள் எழுத்துக்களை தேடி வாசிக்க துவங்கினேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117255

பத்ம விருது – கடிதங்கள்

தேசத்தின் இரு தலைவணங்குதல்கள். கே.கே.முகம்மது அவர்களுக்கு பத்ம விருது அன்புள்ள சார்! இஸ்ரோ முன்னாள் அறிவியலாளர் திரு நம்பி நாராயணன் அவர்களுக்கு பத்ம பூஷன் அறிவிதுள்ளார்கள். இரண்டு மாதத்திற்கு முன்பு அவரை எங்கள் பத்திரிகைக்காக பேட்டி எடுத்தேன். பேட்டி முடிக்கும் தருவாயில் உங்களை தெரியுமா என்று கேட்டேன்… அவருடையதும் நாகர்க்கோயில் என்பதினால். மிகவும் சிலாகித்து பேசினார் உங்களை பற்றி. ‘இங்க மலையாளம் கலந்த தமிழ் ஒன்னு இருக்கு. அத ரொம்ப பிரமாதமா எழுதுவார் அவர். ‘ஒழிமுறி’ அப்படீன்னு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117656

எஸ்.ரா. – கடிதங்கள்

எஸ்.ராமகிருஷ்ணனின் இரவும் பகலும்   அன்புள்ள ஜெயமோகன் சார், இன்று எழுத்தாளர் ராஜ் கவுதமன் அவர்களை பற்றிய ஆவணப்படத்தை பார்த்தபொழுது அதில் அவர் தனது ஊரை பார்த்துவிட்டு”எல்லாம் மண்ணுக்குள்ள போய்டிச்சு, அந்த ஊரே இல்ல”என கூறுகிறார்.ஆனால் மழை பெய்து ஊர் நன்றாக இருப்பதுபோல் தான் தோன்றுகிறது.நானும் அந்த ஊர்களில் இருபது வருடத்திற்கு முன் அலைந்திருக்கிறேன். ஆனால் குளம் அழிந்து கிடப்பதை பார்த்து “நாசமாபோச்சு” என கூறும்போதுதான் உண்மை என புரிந்தது. ஒரு எழுத்தாளனாக அவருக்கு கோபம் வந்திருக்கும். ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117452

விஷ்ணுபுரம் விழா – கடிதம் 19

விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு விஷ்ணுபுரம் அமைப்பின் கருத்தியல் என்ன? விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் விஷ்ணுபுரம்விழா: கடிதங்கள்-16 அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, எங்க யாராலும் மறக்கவே முடியாத வருசமா இந்த வருஷம் அமைஞ்சு போச்சு,குறிப்பா விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா அதுல கிடைச்ச சந்தோசம்  உங்களோட புத்தகங்களான  தன்மீட்சி,உரையாடும்  காந்தி இதை இரண்டையும் உங்க கையில சேர்த்தது  பெரும் நிறைவு .வெள்ளிக்கிழமை  மாலை  தொடங்கியது பரபரப்பு , நிறைய தயக்கங்களோட உள்ள நுழைஞ்சோம். எல்லோருக்கும் எங்களை உங்கள்  இணையத்துல வந்து இருந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117429

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-35

ஏகாக்ஷர் சொன்னார் “படைக்களத்தில் தன் பட்டத்து யானையான சுப்ரதீகத்தின் மேல் ஏறி பகதத்தர் தோன்றினார். அரசி, அவர் கொண்டிருந்த அம்புகள் அனைத்தும் அவரைவிட இருமடங்கு நீளமானவை. அவற்றின் கூர்முனைகள் கையளவுக்கே பெரியவை. அவை உறுமியபடி சுழன்றுசென்று கவசங்களை உடைத்து உடலுக்குள் பாய்ந்ததுமே சற்று சுழன்று நிலைகொள்பவை. ஆகவே அவ்வுயிரைக் கொல்லாமல் அவற்றை பிடுங்கி எடுப்பது இயலாது. அம்புகள் நீண்டவை ஆதலால் அவை தைத்து வீரன் களம்பட்டதுமே அவன்மேல் பிற வீரர்களும் தேர்ச்சகடங்களும் புரவிகளும் ஓடி அந்த அம்பை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117505