Daily Archive: January 27, 2019

அலஹாபாத் கும்பமேளாவை நோக்கி…

இன்று அதிகாலை விமானத்தில் கோவையிலிருந்து கிளம்பி டெல்லி சென்று அங்கிருந்து ஆக்ரா வழியாக அலகாபாத்துக்கு மகாகும்பமேளா பார்க்கச் செல்கிறோம். திடீரென்று போட்ட திட்டம். நான் 23 அன்றே நாகர்கோயிலில் இருந்து கிளம்பி கேரளத்தில் பட்டாம்பிக்குச் சென்று அங்கே ஜனவரி 24 அன்று பட்டாம்பி கலைக்கல்லூரியில் ஒரு கவிதை கருத்தரங்கில் பேசினேன். அங்கிருந்து கோவை. கோவையிலிருந்து என்னுடன் ஈரோடு கிருஷ்ணன், ஈஸ்வரமூர்த்தி, திருப்பூர் ராஜமாணிக்கம், நெல்லை சக்தி கிருஷ்ணன் ஆகியோர் வருகிறார்கள். சென்னையிலிருந்து விமானத்தில் வழக்கறிஞர் செந்தில், வினோத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117497

ஒரு பயணத்திற்கு என்னதான் தேவை?

“டிசம்பர் 19, ராஜஸ்தான் பயணத்தின் ஒரு பகுதியாக பிகானரில் இருந்து ஜெய்ப்பூர் சென்று கொண்டுயிருக்கையில் back bag அணிந்து இருந்த  ஒரு இளைஞன் எங்கள் வண்டியை கண்டு lift கேட்கும் சைகையை காட்டினார். வண்டி சிறிது தூரம் சென்று பின் திரும்பி வந்து அவரை ஏற்றி கொண்டோம். அவர் பெயர் ஷிரிஷ், 21 வயது, சொந்த ஊர்  இண்டோர்  (Indore)  மத்தியபிரதேசம், நடுத்தர வர்க்க குடும்பம், தந்தை சிறு கடை நடத்தி வருகிறார். இளங்கலை ஜர்னலிசம் முடித்துவிட்டு ஒரு வருடம் Decathlonல் வேலை செய்துவிட்டு தற்போது பயணத்தில் இருப்பதாக தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். அவரது பயண திட்டம், காஷ்மீரில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117603

அறிவியல்புனைகதைகள் – கடிதங்கள்

அறிவியல் புனைகதைகள் பற்றி… அன்புள்ள ஜெ, அறிவியல் புனைகதைகள் பேட்டியை வாசித்தேன். நிறைய கதைக்கருக்களை சொன்னீர்கள். எனக்கும் ஓரிரு கருக்கள் தோன்றுகின்றன. ஒன்று ஒழுங்குக்கும் Chaos க்கும் உள்ள உறவை ஆராயும் வகையில் ஒரு கதை. தனமனித சமுக ஆன்மீக தளங்கள் வரைக்கும் விரியும் கரு என்று தோன்றுகிறது. உதாரணமாக நம் மேல்மனம் என்பதே கட்டற்ற ஆழ்மனத்தின் மீது ஒழுங்க்கை உருவாக்கும் முயற்சிதானே இன்னொன்று சமீபத்தில் ராஜஸ்தானின் சாம்பார் உப்பு ஏரியைக் கண்டேன். பொருளற்ற விரிவைக் கொண்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117481

உல்லாலா – கடிதங்கள்

  உல்லாலா!   அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, உல்லாலா பாடல் கேட்டவுடன் என் மனதில் தோன்றிய முதல் முகம் உங்களுடையது தான், ஒரே முகமும் கூட. “வட்டம் போட்டுக்கிட்டு சின்ன உலகத்தில் நீ வாழாத” வரிகளில் நீங்கள் ஒளி வட்டங்கள் அரசியல் வட்டங்கள் இன்னும் பல வட்டங்கள் அனைத்திலும் இருந்து விடுபட்டு வந்துள்ளதை திரை காட்சியாக மனதில் ஓட்டி கொண்டேன் . “உள்ளாற எப்போதும் உல்லாலா” காட்சி படுத்த முடியாமல் உங்கள் சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117432

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-34

மூன்று மாதகாலம் பிரக்ஜ்யோதிஷம் துயரம் கொண்டாடியது. அனைத்துக் கொண்டாட்டங்களும் கைவிடப்பட்டன. ஒற்றைமுரசு மட்டுமே அரண்மனையிலும் கோட்டையிலும் ஒலித்தது. நாட்டைச் சுற்றியிருந்த சிற்றூர்களிலும் காடுகளிலும் விரிவாகத் தேடிவிட்டு ஒற்றர்கள் ஒவ்வொருநாளும் வந்துகொண்டிருந்தனர். இளவரசன் மறைந்துவிட்டான் என்பது மீண்டும் மீண்டும் உறுதியாகியது. சிறுநம்பிக்கையைப் பேண ஒவ்வொரு எதிர்ச்செய்திக்குப் பின்னரும் உள்ளம் முயன்றது. அந்த நம்பிக்கையையே இலக்காகக் கொண்டு வந்து அறைந்தன அடுத்த செய்திகள். காவகர் நிமித்திகர்களை அழைத்து இளவரசன் உயிருடன் இருக்கிறானா என்று உசாவினார். “அமைச்சரே, அவர் உயிருடன் இருக்கிறார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117495