Daily Archive: January 25, 2019

வல்லினம் – ஒரு போட்டி

  மலேசியாவின் வல்லினம் இணைய இதழ் ஒரு விமர்சனக் கட்டுரைப்போட்டியை அறிவித்துள்ளது. இது மலேசியக் குடிமக்களுக்கு மட்டும் உரிய போட்டி. 2018இல் வல்லினம் பதிப்பித்த 10 நூல்களில் 6 நூல்களை இந்த விமர்சனக் கட்டுரைப்போட்டிக்கு  வல்லினம் ஆசிரியர் குழு தேர்ந்தெடுத்துள்ளது.அவற்றைப் பற்றிய கட்டுரைகளை போட்டிக்கு அனுப்பலாம் போட்டியில் வென்றவர்களுக்கு ஏப்ரல் அல்லது மேமாதம் ஊட்டியில்  விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நடத்தும் குருநித்யா காவிய அரங்கில் கலந்துகொள்வதற்கான விமானக்கட்டணம் பரிசாக வழங்கப்படுகிறது விமர்சனக் கட்டுரை போட்டி – வல்லினம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/117365

கல்பற்றா நாராயணன் – மூன்று கவிதைகள்

கல்பற்றாவைப்பற்றி ஒரு கட்டுரை கல்பற்றா நாராயணன் கவிதைகள் 2 கல்பற்றா நாராயணன் கவிதைகள் கல்பற்றா கவிதைக்கூடல் -படங்கள் நெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது? மலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து சுமித்ரா துவைதம் [ 1 ] தூங்கிக்கொள் முலைகளை நான் பார்த்துக்கொள்கிறேன். இருந்திருந்து சலித்திருக்கும் அவை மாற்றி அமரச்செய்கிறேன் கைபிடித்து வெளியே கொண்டுசெல்கிறேன் வாசலுக்கு அழைத்துச்சென்று கம்பியில் தலைமுட்டி தூங்கும் பயணிகள் கொண்ட கடைசிப்பேருந்தை காட்டுகிறேன் பொறாமைக்குடுக்கைகளான இந்த சகபாடிகளை எனக்குப்பிடிக்கும் ஒன்று முழுதினிமை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117371

டெசுக்காவின் புத்தர்

மங்காப் புகழ் புத்தர் அன்புள்ள ஜெ, நானும் தற்போது டெசூகாவின் புத்தா காமிக்ஸை தான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஐந்தாவது புத்தகமான “Deer Park”ஐ வாசித்து முடித்து அடுத்த பகுதியை வாசித்துவருகிறேன். புத்தனின் வாழ்க்கையைப் பற்றி, இந்து மரபைப் பற்றி,  நானறிந்து வைத்திருந்த பல பொதுவான செய்திகளோடு இக்கதை மாறுபடுவது போல இருக்கிறதே. மேலும் கதை கேளிக்கையான அனுபவத்தை தான் முதன்மையாக கொண்டது போல இருக்கிறது. பல பக்கங்களை வெறுமனே கடந்து சென்றேனேயன்றி, ஓவியங்களை மிகவும் ரசித்தேனேயன்றி அவற்றிலிருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117340

பத்மவியூகம் – கடிதங்கள்

பத்மவியூகம் – சிறுகதை அன்பு ஜெயமோகன் சமீபத்தில் தங்களின் “பத்ம வியூகம் “ குறுநாவல் வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. நீண்ட நாட்களுக்கு முன்பு வாங்கிய “ஜெயமோகன் குறுநாவல்கள் “ புத்தகம் பாதி படிக்கப்பட்டு மீதத்தை என்றாவது படிப்பதற்காக காரில் வைக்கப்பட்டிருந்தது. ஒரு குளிர்கால நள்ளிரவு மருத்துவ மனையின் பார்க்கிங் லாட்டில் காருக்குள் இருந்து வாசித்த அனுபவம்.குழந்தைக்கு திடீரென வந்த காய்ச்சலைப் பார்த்த தாய் பயந்து அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவமனைக்கு விரைந்த நள்ளிரவு அது. மனைவியும் குழந்தையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117312

அவ்வாறே வந்தவர்

இனிய ஜெயம் சிலவாரங்கள் முன்பு ,அதாவது திசைதேர் வெள்ளம் முடிந்த மறுநாள் ,  ஒரு சிறுபயணம் என  திருச்சி சென்றிருந்தேன் . சாரல் மழையில் மலைக்கோட்டை  உச்சிப்பிள்ளையார் கோவில் வாசல் ,எதிரே சின்னக்கடை வீதி இறுதி வரை நடந்தேன் .தைலா சில்க் கடந்தால் ,தேவதி புக் ஸ்டால் . லெண்டிங் லைப்ரரி . புதிய நூல்கள் பத்து சதமான தள்ளுபடி விலையிலும் ,வாடகைக்கு சுற்றிவரும் நூல் ,விலைக்கு எனில்  நாற்பது சதமான தள்ளுபடி விலையிலும் கிடைக்கும் . …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117264

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-32

சஞ்சயன் சொன்னான். முதலொளிக்காக காத்து நின்றிருக்கும் இரு படைப்பிரிவுகளையும் நான் காண்கிறேன். அவர்கள் அன்றைய போரை புதிய ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். கௌரவர்கள் அனைவரும் பாண்டவப் படையின் முகப்பில் அர்ஜுனனின் குரங்குக்கொடி எழுகிறதா என்பதையே நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். அர்ஜுனன் எழுந்தமைக்கான எந்தச் சான்றும் ஒலியென எழவில்லை என்பதனால் அவர்களின் ஊக்கம் கணம்தோறும் கூடிக்கொண்டிருக்கிறது. மறுபக்கம் பாண்டவர்கள் மெல்லிய துடிப்புடன் நின்றிருந்தனர். ஏதோ ஒன்று நிகழுமென அவர்கள் எவ்வண்ணமோ அறிந்திருந்தனர். அவ்வண்ணம் முடிவதற்குரியதல்ல அது என்பதையே அவர்கள் இரவெல்லாம் பேசிக்கொண்டிருந்தனர். அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117193