Daily Archive: January 23, 2019

உரையாடும் காந்தி – இளையோர் சந்திப்பு – கோவை

  இளையவர்களின் மனச்சக்தியையும் செயலூக்கத்தையும் நம்பியே கடைசிவரை காந்தியின் ஆத்மா துடித்துக்கொண்டிருந்தது. இன்று, இந்தியதேசத்தின் மொத்த சனத்தொகையில் 65 சதவீதம் மனிதர்கள் 35 வயதுக்குட்பட்ட இளையோர்கள். சிந்தனையளவில் நமக்கு இளந்துடிப்பு இரத்தம் நரம்புகளுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. பூமிக்கிரகத்தின் பழமையான தேசங்களிலும் ஒன்றாகவும், இளையசக்திகளின் திரளாகவும் இந்தியதீபகற்பம் ஒரே சமயத்திலிருக்கிறது. காந்திய எதிர்ப்பு என்பதும் அஹிம்சை மீதான அவதூறு என்பதும் இன்றைய இளைஞர்களிடத்து ஒரு கிளர்வை உருவாக்கி விமர்சிக்கத் தூண்டுகிறது. காந்தியம் சரியா தவறா என்பதற்கான துவக்கயுரையாடல்கள் ஏதும் துவங்கப்படாமலேயே, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117516

தீ

இன்று என் கதைகளுக்கு ஆதாரமாக ஒரு பெரிய கதைப்புலம் ஒன்று உள்ளது. யட்சிக்கதைகள், யானைக்கதைகள், வீரர்கதைகள், அம்மதெய்வங்களின் கதைகள் என ஒரு மிகவிரிவான புலம் அது. அதைப்பற்றி ஒரு கலைக்களஞ்சியமே என்னால் உருவாக்க முடியும். அந்தக்கதைகளை நான் என் சிறு வயதுமுதலே கேட்க ஆரம்பித்தேன். எழுத ஆரம்பித்த நாட்களில் அந்தக்கதைகள் மீது ஒரு விசேஷக்கவனம் உருவாகி அவற்றை சேகரிக்கவும் கற்கவும் நிறையவே அலைந்திருக்கிறேன். அவை பெரும்பாலும் பாடல்களின் வடிவில் இருக்கின்றன. அவற்றை தெற்கன் பாட்டுகள் என்கிறார்கள். தென்திருவிதாங்கூர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/808

புத்தகக் கண்காட்சி 2018

இனிய ஜெயம் தம்பியின் பயணம். வழியனுப்ப சென்னை வந்தேன் .அப்படியே புத்தக சந்தை ஒரு உற்று . வியாழன் .ஆகவே சந்தை சற்றே சுரத்து கம்மியாக காட்சி தந்தது .  உள்ளே நுழைந்ததும் முதலில் கண்ணில் பட்டவர்  எஸ்ரா தான் . வாழ்த்து சொன்னேன் . அவருக்கு அழகு சேர்க்கும் மேஜையோர  தொப்பைபுத்தர் சிரிப்புடன் அணைத்துக் கொண்டார் . பல்வேறு முனைகில் இருந்து வரும் பாராட்டுக்கள் இன்றும் அவருக்கு தொடர்ந்து கொண்டு இருந்தது . எனக்கு மகிழ்ச்சி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117299

நடேசனின் “எக்ஸைல்”- முருகபூபதி

” ஈழப்போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்குகொண்டவர்கள் எல்லோரும்  தோல்வியைத்தான் தழுவினார்கள். ஒருவருமே வெல்லாத அந்தப்போராட்டத்தில் பலர் காலம் கடந்து தங்களை சுதாரித்துக்கொண்டார்கள். வேறும் பலர் கிடைத்த நன்மைகளோடு வாரிச்சுருட்டினார்கள்” இந்த வரிகளை நடேசனில் எக்ஸைல் நூலில் படித்தபோது, கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப்பின்னர் பலராலும் எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள்தான் நினைவுக்கு வந்தன. நோயல் நடேசனின் எக்ஸைல் நூலைப் பற்றி முருகபூபதியின் விமர்சனம். சார்பு நிலையெடுக்காத  குரல்

Permanent link to this article: https://www.jeyamohan.in/117424

ஒரு புதிய வாசகர்

அன்புள்ள ஜெ, இது நான் அச்சிலே தங்களுக்கு எழுதும் முதல் கடிதம். எவ்வளவோ கடிதங்கள் கொந்தளிப்பு மன நிலையில் தங்களுக்கு எழுத வேண்டும் என்று நினைத்து   மனதிலே எழுதி மனதிலே அழிந்து விடும் .கடந்த ஒரு வாரமாக நீங்கள் மட்டும் தான் என்னுடன் இருக்கிறீர்கள். காடு , வெள்ளை யானை ,இரவு ,கார் கடல் என உங்களது சொற்களே என் மீது மீண்டும் மீண்டும் அலையென அடித்து கொண்டிருக்கிறது . நேற்றிரவு வெள்ளை யானை படித்து முடித்ததும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117296

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-30

அஸ்வத்தாமன் காவல்மாடத்தின் மேல் நின்று கருடச்சூழ்கை உருப்பெறுவதை நோக்கிக்கொண்டிருந்தான். ஒரு சூழ்கை அவன் உள்ளத்தில் எப்போதும் மிக எளிய ஓர் எண்ணமாகவே எழுவது வழக்கம். முதல்நாள் போர் முடிந்ததுமே அன்றைய நிகழ்வுகள் என்ன, அதை நிகர்செய்யவோ நீட்டிச்செல்லவோ மறுநாள் ஆற்றப்படவேண்டிய பணி என்ன என்னும் வினாக்கள் அவன் உள்ளத்தில் எழுந்து முட்டிமோதும். ஒவ்வொருநாளும் போர் முடிந்த மறுகணமே அவன் உள்ளத்தில் எழுவது அவ்வெண்ணம்தான். அவன் நேராக காவல்மாடங்களை நோக்கியே செல்வான். தன் புண்களுக்கு மருந்திட்டுக்கொள்வதுகூட அங்கே அமர்ந்துதான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117336