Daily Archive: January 21, 2019

பேருருப் பார்த்தல்

அன்புள்ள ஜெ சென்னை புத்தகக் கண்காட்சி பற்றி  படித்துக்கொண்டிருந்தபோது ஹரன்பிரசன்னா எழுதிய இந்த குறிப்பு கண்ணில் பட்டது. ஏறத்தாழ இதையே நானும் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆகவே இதை அனுப்புகிறேன் ஒருவர் ஏன் புத்தகக் கண்காட்சிக்கு வரவேண்டும் என்ற காரணங்களை எப்படித் தொகுத்தாலும் என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஆனால் மக்கள் நிஜமாகவே குவிகிறார்கள். பொழுதுபோக்குக்காக வருகிறார்களா? நிச்சயம் இல்லை. இதைவிடத் தரமான பொழுது போக்குகள் ஆயிரம் இருக்கின்றன. 10% தள்ளுபடி கிடைப்பதாலா? ஒருவர் புத்தகக் கண்காட்சியில் 1000 ரூபாய் புத்தகம் வாங்கினால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117289

விஷ்ணுபுரம் விழா – இரு பதிவுகள்

    விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு விஷ்ணுபுரம் அமைப்பின் கருத்தியல் என்ன? விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் விஷ்ணுபுரம்விழா: கடிதங்கள்-16 ஆளுயர மாலையும் விருதும் வழங்கப்பட தள்ளாடியதைப்போல் பாவனை செய்து கொண்டு அதைப் பெற்றுக்கொண்டார். அந்த பிரமாண்ட மேடையை ஒட்டுமொத்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைத் சேர்ந்வர்களும் நிரப்பி குழு புகைப்படம் எடுத்தபின் ஜெமோவிடம் விடைபெற்றுக் கொண்டு அறைக்குத் திரும்பி பெட்டியை எடுத்துக்கொண்டு வழியில் தென்பட்டவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு அரங்கத்தின் வாசலை அடைந்தபோது கோவை ஞானி அரங்கத்தின் வாயிலில் தனது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117211

குக்கூ – தன்னறம் – ஒரு கடிதம்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, நெஞ்சத்து வணக்கங்கள்! வாழ்வின் போக்கில் நாங்கள் ஒவ்வொரு இக்கட்டுச்சூழலிலும் ஒரு மானசீக ஆசானைக் கண்டடைகிறோம். இந்திய மரபளித்த ஒரு பெரும் மனிதனாக காந்தி இருந்தபோதும், பொதுத்தளங்களில் அவரை முன்னெடுத்துச் செல்லும் கருத்துகளை குறைவாகவே அறிந்திருந்தோம். அந்த தயக்கச்சூழலில்தான் காந்திகுறித்தும் அவர்தம் வரலாற்றுப்பிரக்ஞை, உள்ளுணர்வு, ஆன்மீக அகநோக்கு பற்றியெல்லாம் உங்களுடைய கட்டுரைகளின் வழி ஒரு தெளிவுறுதலை அடைந்தோம். நவீனமனம் இயங்கும் இச்சமகாலத்தின் காந்தியத்தின் உருமாற்றமும் தோற்றமும் எவ்வகையிலெல்லாம் வார்க்கப்படவேண்டுமென்ற நுண்மையை நீங்கள் சுட்டிக்காட்டிய நவீன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117242

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-28

குந்தி சற்றே அமைதியிழந்து “இந்த அறைக்குள் வேறு எவரேனும் இருக்கிறார்களா?” என்றாள். கர்ணன் “நீங்களே பார்க்கிறீர்கள், இங்கே நம்மைத் தவிர மானுடர் எவருமில்லை” என்றான். “எவரோ கேட்கிறார்கள். எவரோ என்னை நோக்குகிறார்கள். என் உட்புலன் பதற்றம் கொள்கிறது” என்று குந்தி சொன்னாள். கர்ணன் “இங்கிருந்து ஒரு சொல்லும் பிற மானுடர் செவிகளுக்குச் செல்லாது” என்றான். குந்தி “நான் என்ன சொல்லவேண்டுமோ அதை சொல்லிவிட்டேன், மைந்தா” என்றாள். “நன்று அரசி, உங்கள் விழிநீரை எனக்கு காட்டிவிட்டீர்கள். என் விழிநீரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117270