சுந்தர ராமசாமியிடமிருந்து தொற்றிக்கொண்ட கெட்ட வழக்கங்களில் ஒன்று நடக்கச்செல்லும்போது நின்று நின்று சுவரொட்டிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே போவது. நம்மை மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள். அதனாலென்ன? சுவரொட்டிகளைப்போல உள்ளூர் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆவணங்கள் வேறில்லை. அந்தந்த ஊரில் என்னென்ன சாதிகள், என்னென்ன சாதிச்சண்டைகள், சாதிக்கு எவர் தலைவர், எந்த நடிகர் செல்வாக்கானவர், எந்த அம்மன் துடியானது என எத்தனை செய்திகள்!. நாகர்கோயில் கடந்தால் தெரியும் சுவரொட்டிகளில் பெரும்பான்மை உள்ளூர் புதுப்பணக்காரப் பிரமுகர்கள் தங்களுக்குத் தாங்களே அடித்து ஒட்டிக்கொள்பவை. காதுகுத்து, …
Daily Archive: January 20, 2019
Permanent link to this article: https://www.jeyamohan.in/117236
மொழியாக்கம், அ.முத்துலிங்கம், ரிஷான் ஷெரீஃப்
அன்பின் நண்பருக்கு, வணக்கம். இன்று நீங்கள் வெளியிட்டிருந்த உங்களது ‘மொழியை பெயர்த்தல்’ எனும் பதிவினை வாசித்தேன். மிக அருமையான பதிவு. பலரும் வெளிப்படையாகக் கூறத் தயங்கும் விடயங்களை சிறப்பாக வெளிக் கொண்டு வந்திருக்கிறது கட்டுரை. உண்மையில் பிற மொழியில் வெளிவந்துள்ள நூல், வாசிக்கும் போது தனக்குப் பிடித்திருந்தால், அது தமிழில் வெளிவந்து தமிழ் வாசகர்களுக்குப் பரவலாகப் போய்ச் சேர்ந்தால் சிறப்பாக இருக்கும் என எண்ணி மொழிபெயர்ப்பாளர் அதனை மொழிபெயர்த்தால் மாத்திரமே மூல ஆசிரியர் தனது நூலின் மூலம் வெளிக் கொண்டு …
Permanent link to this article: https://www.jeyamohan.in/117246
பனைமரச்சாலையில் ஒரு போதகர்
பனைமரச்சாலை – காட்சன் சாமுவேல்- வாங்க காட்சன் கடிதம் ஜனவரி 9, 2019 அண்ணன், சுமார் ஒன்றரையாண்டுகளுக்குப் பின் பனைமரச்சாலை நூலாக நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. உங்களின் அணிந்துரை வாசகர்களை தன்பால் ஈர்த்துகொள்ளும் வண்ணம் அமைந்திருக்கிறது சிறப்பு. நான் எழுதவேண்டும் என தொடர்ந்து சலிப்பில்லாமல் ஊக்கப்படுத்திய நபர் நீங்கள் ஒருவரே. சில வேளைகளில் ஏன் இப்படி கூறுகிறார்கள் என்று கூட எண்ணியிருக்கிறேன். ஆனால் இப்போது ஒரு நிறைவு இருக்கிறது. நான் என்னையே தொகுத்துக்கொள்ளுகிறேன். எனது பாதையினை நானே …
Permanent link to this article: https://www.jeyamohan.in/117293
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-27
குந்தி நிழல் என ஓசையின்றி அணுகிவந்தாள். கர்ணன் தலைவணங்கி “இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசிக்கு நல்வரவு. இப்பொழுதில் இவ்வெளியேனின் தனிக்குடிலுக்கு தாங்கள் வந்தது முறையல்ல எனினும் என் குடிக்கும் எனக்கும் நற்பெயர் என்று உணர்கிறேன். தங்கள் வரவின் அருள் எனக்கு அமையட்டும்” என்றான். குந்தி தன் வலக்கையைத் தூக்கி அவனை வாழ்த்தி “நலம் சூழ்க!” என்றாள். தணிந்த குரலில் “நான் உன்னை பார்க்கவேண்டுமென்று வந்தேன்” என்று சொன்னாள். அந்தப் பொருளிலாச் சொல் அவள் உளம் குழம்பியிருப்பதை காட்டியது. கர்ணன் “அது …
Permanent link to this article: https://www.jeyamohan.in/117215