Daily Archive: January 18, 2019

உல்லாலா!

  ரயிலில் நான் ஏறி அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டதுமே பக்கத்தில் இருப்பவர் அறிமுகம் செய்வார். “சார் சாப்பாடு வாங்கலையா?”. அவர் கையில் பிளாஸ்டிக் பையில் சாப்பாடு பொட்டலம் இருக்கும். அதை பதமாக எடுத்து அப்பால் வைப்பார். “இல்லசார், நான் ,  இட்லி கொண்டுவருவான்,  வாங்குவேன்”. ரயிலில் பழம் சாப்பிடுவதில்லை. ஏன் பழம் சாப்பிடுகிறேன் என விளக்கவேண்டியிருக்கும்.அதற்கு வெண்முரசு ஒரு அத்தியாயம் எழுதலாம்   அவர் ஆரம்பிப்பார்.  “நான்லாம் வீட்டிலே இருந்து கொண்டுவந்துடறது சார். நமக்கு சுகர் இருக்கு. அதனால …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117199

கேசவமணி சுந்தரகாண்டம்

அன்புள்ள ஜெயமோகன், நீண்ட நாட்களுக்குப் பிறகு திரும்ப வந்திருக்கிறேன். கடந்த காலத்தில் நல்லவை கெட்டவை இரண்டும் நடந்திருக்கின்றன.எனவே மீண்டுவர கால அவகாசம் தேவைப்பட்டது. என்னுடைய “சுந்தர காண்டம்” என்ற சிறுநூல் நற்றிணை பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்திருக்கிறது. https://kesavamanitp.blogspot.com/2019/01/blog-post_10.html அன்புடன், கேசவமணி

Permanent link to this article: https://www.jeyamohan.in/117209

‘நீள’கண்டப் பறவையைத் தேடி

அன்புள்ள ஜெ., நலமா? ‘மார்கழித்திங்கள் பனி நிறைந்த நன்னாளாம் நீராடப் போகாதீர்’ பாட்டு கோயில்களிலோ ரேடியோ டீவியிலோ ஒலிக்கும் போது தான் சென்னையில் மார்கழி என்பதே ஞாபகத்திற்கு வரும். இந்த முறை அப்படியல்ல. பல நாட்கள் போர்வையின் துணை தேவைப்பட்டது. அப்படியாகப்பட்ட ஒரு விடிகாலை நேரத்தில் 05/01/2019 அன்று சனிக்கிழமை காலை கிண்டி ரயில் நிலைய வாசலிலிருந்து பேருந்தில் புறப்பட்டோம் புலிக்காட் ஏரி நோக்கி. நோக்கம் இந்த சீசனில் மட்டுமே காணக்கிடைக்கிற ‘பிளெமிங்கோ’ (பூநாரை) பறவைகளை தரிசிப்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117176

விஷ்ணுபுரம் விழா- கடிதம் – 17

விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு விஷ்ணுபுரம் அமைப்பின் கருத்தியல் என்ன? விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் விஷ்ணுபுரம்விழா: கடிதங்கள்-16 அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். நலம் அறிய ஆவல். அது ஒரு கனா அல்லது லட்சியம் என்று சொல்லலாம். ஜூன் 2016-ல்சோற்றுக்கணக்கு கதை படிக்கப்போய், உங்கள் எழுத்துக்களில் ஈடுபாடு ஏற்பட்டு, ஒவ்வொருநாளும் உங்கள் எழுத்துக்களை தேடி படித்து, பழைய விஷ்ணுபுரம் விருது விழாக்களின் காணொளிகளை ,உங்கள் உரைகளை, யூடுயூபில் கேட்டு, உங்களை நேரில் சந்திக்கவும், விஷ்ணுபுரம் விருது விழாவில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117186

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-25

துச்சாதனன் கர்ணனுடன் நடந்தபோது மிகவும் உடல்களைத்திருந்தான். அவன் துயின்று இரண்டு இரவுகள் கடந்துவிட்டிருந்தன. அந்த இரு நாட்களும் பல ஆண்டுகளாக நீண்டு, நிகழ்வுகளால் செறிந்து, நினைத்தெடுக்கவே முடியாத அளவுக்கு பெருகியிருந்தன. களைப்பு அவன் கால்களை சேற்றிலென சிக்க வைத்தது. உடலின் அத்தனை தசைகளும் நனைந்த ஆடைகள் என எலும்புகள் மேல் தொங்கிக்கிடந்தன. உள்ளமும் ஒரு நனைந்த மென்பட்டாடை என படிந்திருந்தது. நாக்கு உலர்ந்த மென்தளிர் என வாய்க்குள் ஒட்டியிருந்தது. ஒரு சொல்லை எடுப்பதென்றால்கூட முழுதுடலாலும் உந்தி ஊறச்செய்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117080