Daily Archive: January 13, 2019

மனிதனாக இருப்பது என்றால் என்ன? அல்லது கொலை செய்யாமல் இருப்பது எப்படி?   -விஷால் ராஜா

 [தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவல்  ஒரு விமர்சனம்] மனிதன்   காலவரிசைப்படி பார்த்தால் குற்றமும் தண்டனையும் (1866) நாவல் நிலவறைக் குறிப்புகளுக்கும் (1864) அசடனுக்கும் (1869) நடுவே தாஸ்தாயெவ்ஸ்கியால் எழுதப்படுகிறது. (இடைப்பட்ட வருடங்களில் அவர் எழுதிய இன்னொரு நாவல் சூதாடி.). நிலவறை மனிதன், ரஸ்கல்நிகோவ், மிஷ்கின் ஆகிய மூவருக்கும் நடுவே உள்ள தொடர்பையும் வேறுபாட்டையும் கவனிப்பது குற்றமும் தண்டனையும் நாவலை அதன் மையச் சரடை ஒட்டி நெருக்கமாகப் புரிந்துகொள்ள உதவும் என நினைக்கிறேன். போலவே, தன் நாவல்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116924

ஆண்களின் சமையல்

11-1-2019 அன்று நண்பர் ராஜகோபாலனின் வீட்டுக்கு மதியச்சாப்பாட்டுக்காக சென்றிருந்தோம். அவருடைய மனைவி அலுவலகம் சென்றிருந்தார். மகன் பள்ளிக்கு. ஆகவே அவர் எங்களுக்காக சமைத்தார். உதவிக்கு குருஜி சௌந்தர். நாங்கள் சென்றபோது சமையல் ஏறத்தாழ முடிந்திருந்தது. ராஜகோபாலன் நன்றாக சமைப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். குழுமங்களில் அவர் அவ்வப்போது சமையற்குறிப்புகளை எடுத்துவீசுவதுண்டு. “என்னோட முள்ளுக்கத்தரிக்கா கொத்சு நீங்க சாப்பிட்டதில்லியே” என ஆர்வமாக நண்பர்களிடம் அவர் விசாரிக்கும்போதோ “வீட்டுக்கு வாங்க, பிரண்டைத்துவையல் செஞ்சு தாரேன்” என அழைக்கும்போதோ  பலர் மிரண்டு “இல்லீங்… …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117039

சீ.முத்துசாமியின் மலைக்காடு- ஹரன் பிரசன்னா

இரண்டு காடுகளின் நடுவே- மலைக்காடு ஜெயமோகன் முன்னுரை மலைக்காடு – சீ முத்துசாமியின் நாவல், கிழக்கு பதிப்பகம், விலை ரூ 350 விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படும் வரை சீ.முத்துசாமி என்ற பெயரே எனக்குத் தெரியாது என்ற ஒப்புதலில் இருந்து தொடங்கிவிடுகிறேன். சீ.முத்துசாமியின் நாவல் ஒன்றைக் கிழக்கு வெளியிடும் என்ற முடிவுக்கு வந்தபோது மலைக்காடு படித்தேன். அது கிழக்கு மூலம் வெளியாகி இருக்கிறது. ஜெயமோகனின் மிக முக்கியமான முன்னுரையுடன். சீ.முத்துசாமியின் எழுத்து எதோ ஒரு வகையில் எனக்கு மேலாண்மை பொன்னுச்சாமியின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117036

சந்தன வீரப்பன், அன்புராஜ் – கடிதம்

கலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி அன்புள்ள ஜெ, அன்புராஜ் அவர்களின் பேட்டி மிக நெகிழ்ச்சியான அனுபவம். சந்தனக்கொள்ளையன் வீரப்பனுடன் இருந்திருக்கிறார். காட்டில் கொள்ளையனாக வாழ்ந்திருக்கிறார். எல்லா வகையான அனுபவங்களையும் அடைந்திருக்கிறார். அவற்றிலிருந்தெல்லாம் மீண்டு வந்து ஒரு சமூகசேவையாளனாகவும் கலைஞனாகவும் வாழ்கிறார். எழுபதுகளில் இப்படி சம்பல் பகுதியில் கொள்ளையர்களாக வாழ்ந்த சிலர் வினோபாவே- ஜெயப்பிரகாஷ் நாராயணன் முயற்சியால் மனம்திருந்தி சிறைக்குச் சென்று மறுவாழ்க்கை வாழ்ந்தார்கள். அவர்கள் அனைவருமே சிறையிலிருந்து வெளிவந்தபின் முற்றிலும் வேறுவகையான வாழ்க்கையையே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116952

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-20

நோக்குமேடையில் கைகளை நெஞ்சோடு சேர்த்து, வலச்செவியை முன்கொண்டுவந்து, உடற்தசைகள் இழுபட்டு நிற்க தன்முன் அமர்ந்திருந்த திருதராஷ்டிரரிடம் சஞ்சயன் சொன்னான். “அரசே, நமது படைகளின் திட்டம் இங்கிருந்து நோக்குகையில் தெளிவாகவே தெரிகிறது. கௌரவப் படை முதல்வராகிய கர்ணன் தன் இரு போர்த்துணைவர்களுடன், தனக்குப் பின்னால் நீந்தும் படகின் பின்னால் விரியும் அலை எனத் தொடரும் கௌரவர்களின் தேர்ந்த விற்படையுடன் எதிரே பாண்டவர் படையின் முகப்பில் நாரையின் கூர் அலகு என எழுந்த அர்ஜுனரை நோக்கி செல்கிறார். நாரையின் தலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117045