Daily Archive: January 10, 2019

பதிப்புரிமையும் ராஜாவும்

அன்புள்ள ஜெ, இளையராஜாவின் பாடல்களுக்கான உரிமைக்காப்பை அவர் கோருவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதையொட்டி அவர்மேல் கொட்டப்பட்ட வசைகளை பார்க்கிறீர்களா? இப்போது அந்த உரிமையில் பெரும்பகுதியை அவர் இசைக்கலைஞர்களுக்கே அளிக்கும்போதுகூட அது ஒரு சூழ்ச்சி என்றே எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மிகவும் மனம்வருந்தச்செய்த நிகழ்வு இது டி.ராஜ்குமார் அன்புள்ள ராஜ்குமார், இந்தப்பிரச்சினை சில காலம் முன்பு கேரளத்தில் ஜேசுதாஸ் அவர்கள் அவர் பாடிய பாடல்களுக்கான உரிமையைக் கோரியபோது தொடங்கியது. அவரை அங்கும் வசைபாடித்தள்ளினார்கள். அதற்கு பல நியாயங்கள் சொல்லப்பட்டன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115803

இமையத்தைக் காணுதல் – சுபஸ்ரீ

அன்புநிறை ஜெ, மீண்டும் இமையம் சென்று வந்தேன் – இம்முறை நண்பர் கணேஷும் உடன்வந்தார். சென்றமுறை இமாசலப் பிரதேசம். இம்முறை உத்தராகண்ட். பெங்களூரிலிருந்து விமானப் பயணமாக தெஹராதூன் சென்று, ரிஷிகேஷ் அடைந்தோம். முதல் முறையாக கங்கையின் தரிசனம். அந்தி வேளையில் வான் நிகழ்த்தும் மகாதீப ஆராதனைக்கு முன் சிற்சில தீபங்கள் கங்கையில் மிதந்து சென்றன. மிகப் பெரிய குடும்பத்தின் மூத்த அன்னையென கங்கை. அவளது கரையில், அவளது மடியில், அவளை சாட்சியாக்கி, கடந்து, கரைந்து, கரைத்து, ஆசி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114939

பாட்டும் தொகையும் – கடிதங்கள்

விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு அன்புள்ள ஜெ பாட்டும்தொகையும் ஆவணப்படம் பார்த்தேன். அற்புதமான ஒரு ஆவணப்படம். இயற்கையாக எடுக்கப்பட்டிருந்தது. பின்னணிக்குரல் இல்லாமலிருந்தது ஒரு சிறப்பு. பின்னணிக்குரல், தொகுப்புரையாளன் குரல் ஒருவகையில் ஆவணப்படம் எடுப்பவரின் இடர்பாட்டையே காட்டுகிறது. அது வெளியே இருந்து ஒலிக்கிறது. உள்ளிருந்து போதிய குரல்கள் கிடைக்கவில்லை என்பதற்கான சான்று அது. ஒரு இடத்தைப்பற்றிச் சொல்லும்போதோ தத்துவம்பற்றிச் சொல்லும்போதோதான் பின்னணிக்குரல் ஒலிக்கவேண்டும். பேராசிரியரின் கவனமில்லாத உடல்மொழி, அலைபாயும் நடை, அவருடைய முகத்தில் மாறிமாறி வரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116789

அன்புராஜ் – கடிதங்கள் – 2

[அன்புராஜ் பறவைகளின் குரலில் பறவைகளுடன் உரையாடுகிறார்] கலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி அன்புள்ள ஜெயமோகன் அன்புராஜ் அவர்களின் பேட்டியை வாசித்தேன். ஒரு பெரிய நாவலை வாசித்ததுபோன்ற நிறைவு ஏற்பட்டது. எப்பேர்ப்பட்ட வாழ்க்கை. சாகசங்கள், போராட்டங்கள், மீட்பு. ஒருவர் இதன் வழியாக எவ்வளவோ துன்பங்களை அனுபவிக்கலாம். ஆனால் அவர் மீண்டு வந்துவிடுகிறார். தன்னை கண்டடைகிறர். ஒரு தவம்தான். சொல்லப்போனால் இந்தவகையான துன்பங்களே இல்லாமல் ஒருவாழ்க்கை இருந்தால் அதில் சொகுசு இருக்கும். ஆனால் கண்டடைதல் இருக்காது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116946

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-17

துரியோதனனும் துச்சாதனனும் தொடர கர்ணன் பீஷ்மரின் படுகளத்தை நோக்கி சென்றபோது விழிதுலங்கும் அளவுக்கு காலைஒளி எழுந்துவிட்டிருந்தது. “நமக்கு இனி பொழுதில்லை” என்று துச்சாதனன் மூச்சுவாங்க கர்ணனின் பின் நடந்தபடி சொன்னான். “ஆம், நாம் விரைவில் திரும்பிவிடுவோம்” என்று கர்ணன் சொன்னான். “பிதாமகர் பேச விழையலாம்” என்று துச்சாதனன் சொன்னான். “இல்லை, இத்தருணத்தில் அவர் பேச்சொழிவார் என்றே நினைக்கிறேன்” என்றான் கர்ணன். துரியோதனன் “விரைவாக” என்றான். அந்த இரவு மிக நீளமாக மறுமுனை தெரியாமல் விரிந்திருப்பதை துச்சாதனன் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116901