Daily Archive: January 9, 2019

கண்டத்தட்டுகள் உரசிக்கொள்ளுதல்  

[சிவா கிருஷ்ணமூர்த்தியின் வெளிச்சமும் வெயிலும் சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை] புலம்பெயர்ந்த எழுத்துக்களின் கதைக்கருக்களில் கடந்தகால ஏக்கம், தனிமைத்துயர் ஆகியவற்றை கண்டால் உடனடியாக தவிர்த்துவிடலாம். அரிதாக நல்ல கதைகளும் இருக்கக்கூடும்தான். ஆனால் அவரை ஒரு நல்ல எழுத்தாளர் என்று சொல்லிவிடமுடியாது. கதைசொல்லி ஒரு பண்பாட்டின் துளி. அவருள் அகம் என  அமைந்து ஒரு பண்பாடு இன்னொரு பண்பாட்டை புறம் என சந்திக்கிறது. இரு பண்பாடுகள் உரையாடிக்கொள்கின்றன. இரு பண்பாடுகளும் ஒன்றையொன்று மதிப்பிட்டுக்கொள்கின்றன அது எவ்வளவு பெரிய வாய்ப்பு! …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116317

கைத்தறி நெசவும் விஷ்ணுபுரமும்

தன்மீட்சி நம்பிக்கையின் ஒளி கைநெசவும் தனிவழியும் செயல்படுவோர் அளிக்கும் மீட்பு நம்பிக்கை, ஸ்டாலின் கடிதம் அன்புள்ள ஜெயமோகன் அய்யாவுக்கு, வணக்கம். பொங்கலுக்கான வேலைகள் ஒருங்கிணைப்பதில் சற்று நேரம் எடுத்துக்கொண்டதால் அனுபவத்தை பகிர்ந்துகொள்வதில் தாமதம் நேர்ந்துவிட்டது. வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வும் அவரவர் அகத்தில் கொண்டிருக்கும் அடிப்படையான நம்பிக்கையின் தன்மையை வைத்தே அமைகிறது என்ற வரிகளை இத்தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன். விஷ்ணுபுர இலக்கிய நிகழ்வில் கலந்துகொண்ட மூன்று நாட்களும் , அதற்கு பிறகு கிடைத்த பெரும் நம்பிக்கையான மனநிலையும் என் வாழ்வினை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116697

விஷ்ணுபுரம்விழா: கடிதங்கள்-16

விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு விஷ்ணுபுரம் அமைப்பின் கருத்தியல் என்ன? விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்   வணக்கம். மிக தாமதமாக எழுதுகிறேன். நீங்கள் இரு நாட்கள் முழுவதும் நடத்திய விழாப் பதிவுகளையும், காணொளிகளையும், ஆவணப்படத்தையும் பார்த்து முடிக்க எனக்கு இத்தனை நாட்கள் ஆகி விட்டன. மிகச் சிறப்பாக நடந்திருப்பது புரிகிறது. ஒவ்வொரு மணித்துளியும் பயனுள்ளதாக இருந்திருக்கிறது மகிழ்ச்சி.  ராஜ் கெளதமனின் உரை அவரது ஆய்வுக்கட்டுரைகளோடு சமன் வைத்துப் பார்க்க முடியாத எளிமையைக் கொண்டிருக்கிறது. ஆவணப்படம், அவரை முப்பரிமாணத்தில் காட்டியிருக்கிறது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116910

யானை – கடிதங்கள்

யானை – புதிய சிறுகதை அன்புள்ள ஜெ, யானை உங்கள் கதைகளில் முற்றிலும் வேறொரு தளத்தில் இயங்கும் கதை. இதில் யானை தொன்மமாகவோ குறியீடாகவோ இல்லை. நேரடியான ஒரு பயமாகவே வருகிறது. அனந்தன் பள்ளிக்கூடத்தில் காணும் யானை எது என அந்தக்கதைக்குள்ளேயே க்ளூ உள்ளது. அதன் விலாவில் அவன் எழுத்துக்களை எழுதி வைத்திருக்கிறான். அப்படியென்றால் அது கரும்பலகைதான். கரும்பலகைதான் கரும்பலகைதான் யானையாக மாறி அவனை தும்பிக்கை நீட்டி பிடிக்கிறது. அவன் கடைசி பெஞ்சு மாணவன். அப்படி இருந்தாலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116920

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-16

அவை முடிந்ததை நிமித்திகர் அறிவித்ததும் நிறைவை உரைக்கும் சங்கொலி முழங்க துரியோதனன் எழுந்து கைகூப்பிய பின் வலம் திரும்பி வெளியேறினான். அரசன் எழுந்தருள்வதைக் கூறி இடைநாழியில் கொம்பொலி எழுந்தது. கர்ணன் பீடத்திலிருந்து எழுந்து துரோணரை வணங்கினான். துரோணர் அவனை பாராதவர்போல இறுகிய முகத்துடன் கைகளை மார்பில் கட்டிக்கொண்டு நிலம் நோக்கி அமர்ந்திருந்தார். அவையினர் எழுந்து ஒருவரோடொருவர் உதிரிச்சொற்களில் உரையாடியபடியும் ஆடைகளைத் திருத்தியபடியும் வெளியே நடந்தனர். பகதத்தர் கர்ணனின் அருகே வந்து வணங்கி “பொறுத்தருள்க, அங்கரே! நான் குடிமேன்மை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116845