Daily Archive: January 8, 2019

அகச்சான்றின் காட்சிவடிவங்கள்

ரிஷான் ஷெரீப் எழுதிய சினிமாக்கட்டுரைகள் – நேர்காணல்களின் தொகுதியான ‘ஆழங்களினூடு…’ என்னும் நூலுக்கான முன்னுரை. வம்சி பதிப்பகம் திருவண்ணாமலை வெளியீடு பார்வதிபுரத்தைச் சேர்ந்த பழைய தோழி ஒருத்தி லண்டனில் பணிபுரிகிறார். கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அங்கே கல்லூரி ஆசிரியை. இங்கே இருந்தபோது இலக்கிய ஆர்வம்கொண்டிருந்தார். தமிழிலிருந்து சில கதைகளை மலையாளத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். நல்ல குண்டான அழகி. நீண்ட இடைவேளைக்குப்பின் மீண்டும் பார்த்தபோது அதே உற்சாகத்துடன் அவர் வாழ்க்கையிலிருந்து மறைந்துவிட்ட இலக்கியத்தைப் பற்றிப் பேசினார். அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116315/

காடு – மீண்டுமொரு வாசிப்பு

காடு அமேசானில் வாங்க காடு வாங்க அன்பு ஜெ, நலம்தானே? மன்னிக்கவும், கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட மலர் ஏற்றுமதிகள் பணிச்சுமையினால் இந்த வருடமும் விஷ்ணுபுரம் விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை. விழா சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள். சமீபத்தில் காடு இரண்டாம் முறை வாசிக்க ஆரம்பித்து நேற்று முடித்தேன். முதல் முறை போலவே இம்முறையும், அந்த இசைமழை ஆரத்தழுவி என்னை மூழ்கடித்தது. இந்த முறை சற்று அதிகமாகவே. முதல் வாசிப்பு நிகழ்ந்தது ஓசூரில். அநேகமாய் 2004 அல்லது 2005-ல் இருக்கலாம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116277/

புத்தகக் கண்காட்சிப் பரிந்துரை

  அன்புநிறை ஜெ, வணக்கம், இந்த ஆண்டு புத்தக காட்சியில் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகங்கள் மற்றும் இந்த ஆண்டு வெளிவந்த முக்கியமான புத்தகங்களை பரிந்துரைத்தால் மிக உதவிகரமாக இருக்கும். தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் தீவிர வாசகராக, விமர்சகராக, எழுத்தாளராக இயங்கிவரும் தங்களின் பரிந்துரை மிக முக்கியமானதாகப்படுகிறது. இந்த ஆண்டு வெளிவந்த புத்தகங்களில் கவனம் பெற்றவை, வாசகன் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகங்கள் எவை என தாங்கள் தெரியப்படுத்த வேண்டும். தொடர்ந்து எனக்கு வரலாறு, பண்பாடு, தத்துவம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116904/

பிரபஞ்சன் : கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார், ஒரு மனிதனுக்காக எனது வாழ்நாளில் ஒருவரை நினைவுகூர்ந்து எழுதும் முதல் அஞ்சலி. எனது துறையில் ஒரு பெரிய ஆளுமையிடம் எனது அகங்காரத்தினாலும், அறியாமையினாலும், சல்லிதனத்தினாலும் அவரின் ஏசி அறையில் திட்டுவாங்கி துரத்தபட்டு வெளியேறுகிறேன். மனது முழுதும் வீராப்பும் கடுப்புமாக வியர்க்க வியர்க்க முதல் மாடியில் இருந்து படிகளில் இறங்கி வரும்போது திடீர் என வெள்ளை வேட்டியும் ஜிப்பாவுமாக ஒரு தேவதூதனை போல் ஒருவர் என்னை பார்த்து சிரிக்கிறார். இடது கையில் வேட்டியின் ஓரத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116598/

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-15

துச்சாதனன் கர்ணனின் அருகே செல்கையில் நடை தளர்ந்தான். கைகள் கூப்பியிருக்க விழிநீர் வழிய நின்ற அவனை தொலைவிலேயே கண்டு தேரிலிருந்து இறங்கி இரு கைகளையும் விரித்தபடி கர்ணன் எதிர்கொண்டான். துச்சாதனன் அருகணைந்து அவன் கால்களை நோக்கி குனிய கர்ணன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். துச்சாதனனின் தலை கர்ணனின் மார்பளவுக்கே இருந்தது. ஒரு சொல்லும் இல்லாமல் அவன் கர்ணனின் மார்பில் தலைவைத்து விம்மி அழுதான். கர்ணன் அப்பால் நின்ற சமனையும் சகனையும் அருகே அழைத்து தன் கைவளையத்திற்குள் எடுத்துக்கொண்டான். துச்சாதனன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116836/