தினசரி தொகுப்புகள்: January 6, 2019

யானை – புதிய சிறுகதை

பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்பதற்கு அனந்தன் சொன்ன காரணம் வித்தியாசமாக இருந்தது. அவள்  “என்ன?” என்றாள். அவன் தலையைக் கவிழ்த்து முனகலாக “எங்க ஸ்கூலிலே ஆனை இருக்கு” என்றான். “என்னது?” என்றாள். “ம்ம்ம்ம் ஆனை” ஜெயமோகன்...

தன்மீட்சி 

வாழ்க்கையின் பெரும்பாலான தருணங்களில் நாம் எதிலாவது மீண்டு மீண்டு அடுத்ததை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். மீட்சியின் தொடரே வாழ்க்கை. ஒவ்வொருநாளும் காலையில் போர்வையை காலால் விலக்கி தூங்கி எழுவது ஒருவகை பிறப்பு என நான் நினைப்பதுண்டு....

ஈரட்டி – கடிதங்கள்

சிரிப்புடன் புத்தாண்டு அன்புள்ள ஜெ ஈரட்டியின் சிரிப்புக்கொண்டாட்டத்தை படங்களிலிருந்து பார்த்தேன். மகிழ்ச்சியில் நானும் கலந்துகொண்டதுபோல் உணர்ந்தேன். இப்படி கூடிக் கொண்டாட்டமாக இருப்பது கல்லூரி நாட்களுடன் முடிவுக்கு வருகிறது. அதன்பின்னரும் கூடுகைகள் உண்டு. பெரும்பாலும் தொழில்நிமித்தம். ஆகவே...

மு.தளையசிங்கம் – ஒரு நினைவுக்குறிப்பு

எனது வாழ்நாளில் நான் முதல்முதலில் இனம்கண்டு கொண்ட Activist மு.தளையசிங்கம். நான் ஒரு Activist ஆக வாழ்கின்றேனா இல்லையா என்பதை இன்னமும் என்னால் தீர்மானிக்க முடியாதிருந்த போதிலும் அவ்வாறு வாழத்தான் வேண்டும் என்ற...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-13

வடகாட்டில் நாகர்களின் சிற்றூரான ஐராவதீகம் பிறர் அணுகமுடியாததாகவே இருந்தது. அவ்வண்ணம் ஓர் ஊர் இருப்பதை கதைகள் மீண்டும் மீண்டும் கூறின. மாபெரும் புற்றுகளே வீடுகளென அமைந்த நகரம். மூன்று முகம் கொண்டு எழுந்து...