Daily Archive: January 5, 2019

ஒருதெய்வ வழிபாடு

 அன்புள்ள ஜெ ஒரு சின்ன சந்தேகம். இது உங்களுக்கு வேடிக்கையாகக்கூடப் படலாம். ஆனால் எனக்கு இது ஒருவகையில் வாழ்க்கைப்பிரச்சினை. என் வயது 31. அரசு ஊழியன். என் அப்பா வீரசைவ விரதம் கொண்டவர். நானும் எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் அப்பாவிடமிருந்து வீரசைவ தீக்கை எடுத்துக்கொண்டேன். நான் சைவக்கோயில் தவிர எங்கும் செல்வதில்லை. வேறு எந்த தெய்வத்தையும் வணங்குவதில்லை. சமீபத்தில் நண்பர்களுடன் பயணம் செய்தபோது நான் பெருமாள்கோயிலுக்குப்போகாமல் காரிலேயே உட்கார்ந்தேன். என் சீனியர் நண்பர் ஒருவர் என்னை கடுமையாகக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115774

விஷ்ணுபுரம் விருதுவிழா உரைகள்- கடிதங்கள்-15

  விஷ்ணுபுரம் விருதுவிழா:தேவிபாரதி உரை விஷ்ணுபுரம் விழா: அனிதா அக்னிஹோத்ரி உரை விஷ்ணுபுரம் விழா: மதுபால் உரை விஷ்ணுபுரம் விருது விழா : சுனீல் கிருஷ்ணன் உரை விஷ்ணுபுரம் விருதுவிழா:ராஜ் கௌதமன் உரை விஷ்ணுபுரம் விழா உரை – ஜெயமோகன் விஷ்ணுபுரம் விழா ஸ்டாலின் ராஜாங்கம்   அன்புள்ள ஜெ விஷ்ணுபுரம் விருதுவிழாவின் அனைத்து உரைகளுமே சிறப்பாக இருந்தன. ஒவ்வொரு உரையும் ஒவ்வொரு வண்ணம். நீங்களும் ஸ்டாலின் ராஜாங்கமும் ஆய்வாளரின் பாணியில் பேசினீர்கள். தேவிபாரதியும் சுனீல்கிருஷ்ணனும் எழுத்தாளர்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116689

அன்புராஜ் பேட்டி – கடிதங்கள்

கலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி அன்புள்ள ஜெ அன்புராஜ் அவர்களின் பேட்டி என்னுடைய இந்த புத்தாண்டை மிகுந்த நம்பிக்கையுடன் தொடங்கச்செய்தது. வாழ்க்கையைப்பற்றிய ஆழமான ஒரு பிடிமானத்தை உருவாக்கியது. மிகச்சிறிய வாழ்க்கை என்னுடையது. மிகச்சிறிய எதிர்பார்ப்புகள். அதைவிடச் சின்ன ஏமாற்றங்கள். ஆனால் எனக்கு எப்போதுமே ஒரு சோர்வும் கசப்பும்தான்.எதுவுமே செய்வதற்கில்லை. வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லை. இந்தமாதிரியான சோர்வு. இந்தச்சோர்வு ஏன் என்று அன்புராஜ் பேட்டியை வாசித்தபோது நினைத்துக்கொண்டேன். சோர்வுக்கான காரனம் நான் என்னைப்பற்றியே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116734

புத்தரின் வருகை

அன்புள்ள ஜெ புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டு அன்று நாகையிலுள்ள சாமந்தான்பேட்டை என்ற மீனவ கிராமத்தில் படகுவீடுபோல் செய்யப்பட்ட ஒரு சிறு அமைப்பில் ஒரு சிறு கோவிலே கரை ஒதுங்கியதாகச் சொல்லப் பட்ட து. நேரம் வாய்க்காததால் இன்று தான் சென்று பார்த்தேன். நான்கைந்து நாட்களாக இப்பகுதையில் இதைப் பார்ப்பதற்கு நல்ல கூட்டம்.உள்ளே இருக்கும். சிலை புத்தர்சிலைபோலவே உள்ளது. எந்த பாதிப்பும் இல்லாமல் சில நெளிவுகளைத் தவிர பெரிய பாதிப்பு இல்லை. அடியில் மிதக்கும்படி மரங்கள் டின் கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116810

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-12

இருண்ட ஆழங்களில் நிழலுருவாக நெளியும் பல்லாயிரம்கோடி நாகங்களை நான் காண்கிறேன். மண்ணுக்கு மேலும் விண்ணின் அடுக்குகளிலும் செழித்து கிளைவிட்டு நிறைந்துள்ள அனைத்துக்கும் அவையே வேர்கள். அவற்றின் நெளிவுகளே பின்னி மாளிகைகளாகின்றன. சாலைகளும் தெருக்களும் கோட்டைகளும் ஆகின்றன. கொடிகளாகத் துவள்கின்றன. தேர்களும் புரவிகளும் ஊர்பவர்களும் ஆகின்றன. அந்நிழல் உலகின் மையமென அமைந்த வாசுகியின் அரண்மனையின் அவைக்கூடத்தில் அமர்ந்திருக்கிறேன். அந்த அவையில் தட்சன், கார்க்கோடகன், சங்கன், குளிகன், பத்மன், மகாபத்மன் என்னும் மாநாகங்கள் அமர்ந்திருக்கின்றனர். திருதராஷ்டிரன், கௌரவ்யன், ஐராவதன் என்னும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116805