Daily Archive: January 4, 2019

சிரிப்புடன் புத்தாண்டு

ஈரட்டிச் சிரிப்பு… ஈரட்டி சந்திப்பு இம்முறை புத்தாண்டை ஈரட்டியில் எங்கள் மலைவிடுதியில் நண்பர்களுடன் கொண்டாடலாம் என்று திட்டமிட்டேன். நண்பர்கள் வெவ்வேறு ஊர்களிலிருந்து ஈரோடுக்கு  வந்தனர். சிலர் இறுதிநேரச் சிக்கல்களால் வரமுடியாமலாகிவிட்டது. விஷ்ணுபுரம் நிகழ்ச்சி முடிந்து ஐந்தாறுநாட்களே ஆகிவிட்டிருந்தமையால் பலருக்கு விடுப்பு கிடைப்பதில் சிக்கல் இருந்தது. ஈரட்டிக்குச் செல்லலாம் என முடிவுசெய்தமைக்குக் காரணம் சென்றமுறை நண்பர்களுடன் அருவிப்பயணம் சென்றபோது அங்கே ஒருநாள் இரவு மட்டுமே தங்கி கிளம்பியதனால் உணர்ந்த நிறைவின்மைதான். நவம்பர் முதல் ஜனவரி முடியத்தான் ஈரட்டி மிதமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116724/

பிரதமன் – கடிதங்கள் – 8

பிரதமன்[சிறுகதை] அன்புள்ள ஜெ, பிரதமன் வாசித்தேன். ஆசானின் வேலையாட்கள் தொழிலில் நுட்பமானவர்கள். கைத்திறன் மிக்கவர்கள். தேங்காயை தட்டி உடைப்பது ஒரு கணக்கு. காய்ந்த விறகுகளையும் பச்சை விறகுகளையும் கலந்து அடுக்குவது இன்னொன்று. சுண்ணாம்பு கலந்த வெள்ளத்தின் குணம் என பல நூறு கணக்குகள். வித்தைகள் இயங்குகின்றன. ஆனால் கணக்குகள் வித்தைகளை மீறி கதையில் ஒன்று நிகழ்கிறது. [ஆசான் அந்தப்பெண் உறவு கூட கணக்குடன் மட்டும் முடிந்துவிட்ட ஓர் உறவு எனலாம்.] சிம்பெனியை இயக்கும் மேஸ்ட்ரோ போல ஆசான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115839/

மனசிலாயோ?

‘ திருவனந்தபுரம் உலகப்பட விழாவில் வைத்து நவீனின் இந்தக்குறிப்புக்களை வாசித்துக்கொண்டிருந்தேன். ஒரு கலைப்படத்திற்குண்டான களமும் கருவும் என்று பட்டது. மணமுறிவு பெற்ற கதைத்தலைவன். அவனுக்கு கழுத்துவலி. அது உள்ளத்தின் வலியாகவும் இருக்கலாம். அவன் எழுத்தாளனும்கூட. ஒரு அன்னியநாட்டில் அறியா நிலத்தில் சிகிழ்ச்சைக்காக வருகிறான். அங்கே விடுதியில் தங்கியிருக்கிறான். பலரை சந்திக்கிறான். பயணம் செய்கிறான். உடலும் உள்ளமும் மெல்ல மீள்கின்றன. அது ஒருவகை தன்மீட்பாகவும் அமைகிறது. திருவனந்தபுரம் ஆயுர்வேத சிகிழ்ச்சைக்குச் செல்வதற்கு முன் நவீன் என்னைப்பார்க்க வந்திருந்தார். புதிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116111/

பௌத்தம் கற்க…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, பெளத்தம் குறித்து சிறிய அளவிலேயே அறிந்திருந்தேன். அது பற்றி மிக விரிவாக கற்க வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன். அதற்கான காலம் சமீபத்தில் கனிந்து வந்தது. கால அவகாசம் இருந்தால் ரயில் பயணமே பிடித்தமானது. சென்னையிலிருந்து 36 மணிநேர பயணம் முகல்சராய்க்கு.. மிக அடிப்படையான சில வசதிகளை மட்டுமே கொண்ட பெயர் மட்டும் மாற்றப்பட்ட(பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் ஜங்ஷன்) கைவிடப்பட்ட பேய் வீடு போல் தோற்றமளிக்கும் ரயில் நிலையம். அங்கிருந்து இரண்டரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114630/

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-11

நெடுங்காலம் கழித்து கர்ணன் அந்த வில்லைப்பற்றி நினைவுகூர்ந்தான். அப்போது அவன் தன்னிலையில் இருக்கவில்லை. அஸ்தினபுரியில் வேள்விச்சாலையிலிருந்து வெளியேற்றப்பட்டு தன் மாளிகைக்குத் திரும்பிய கணம் முதல் வெறிகொண்டு மது அருந்திக்கொண்டிருந்தான். வயிறு மதுவை தாளாமல் அதிர்ந்து உடல் எழுந்து வாயுமிழ்ந்தான். உடனே “கொண்டு வருக! எரியும் பீதர்நாட்டு மது வருக!” என்று கூவினான். ஏவலர் தயங்கியபோது “கொண்டு வா மூடா! உன் சங்கை அரிந்திடுவேன். கொண்டு வா!” என உடைவாளை உருவியபடி எழுந்தான். எழமுடியாமல் பீடத்திலேயே விழுந்தான். ஏவலர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116758/