Daily Archive: January 3, 2019

பாரதியும் கனவுகளும்

 வணக்கம் ஜெ பாரதி விஜயம் எனும் நூலை படித்துக்கொண்டிருக்கிறேன். பாரதியாருடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகளை தொகுத்து ஒரே நூலாக வழங்கிருக்கிறார் பதிப்பாசிரியர் கடற்கரய். பாரதியை பற்றி அறிவதற்கு இது சிறந்து நூல், ஒரு பொக்கிஷம். இதற்கு முன் யதுகிரி எழுதிய பாரதி நினைவுகள் மட்டுமே படித்திருந்த எனக்கு இந்நூல் அவரைப்பற்றி மேலும் பல தகவல்களை தந்தது. பாரதி பெரும்பாலும் மற்றவர்களை பாண்டியா என்றே அழைப்பாராம். தமிழர்கள் அனைவரும் பாண்டியன் வழி வந்த மன்னர்கள் என்பாராம். சென்னையில் ஒருசமயம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115212

எழுத்தாளனாகவே வாழ்வது என்பது…

அஞ்சலி:பிரபஞ்சன் இனிய ஜெயம் ஞாயிறு அன்று இரவே, நண்பர்களுடன் இல்லாமல் ,  நான் கிளம்ப முடிவு செய்த காரணம் ,திங்கள் அன்று  காலை பிரபஞ்சனின் இறுதிப் பயணம் என நான் இறுதியாக கண்டிருந்த செய்தியே .பொதுவாக நான் யாருடைய மறைவுக்கும் செல்பவன் இல்லை .உயிர் கொண்டு ,மொழி கொண்டு அவர் என்னுடன் உறவாடிய இறுதிக் கணம் மட்டுமே ,என் நினைவின் இறுதிச் சுவடாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே காரணம் . மாறாக பிரபஞ்சனின் இறுதிப் பயணத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116569

திருவட்டார், கோயில்கள் – கடிதங்கள்

ஜெ அவர்களுக்கு வணக்கம்.. கடந்த இரு நாட்கள் உங்கள் ஊர்ப்பக்கம் பயணம்.. குமரி மாவட்டத்தின் பச்சையம் கண்களுக்குள் ஊடுருவி நிற்கிறது. இன்னும் சில நாட்களுக்கு மனதில் படபடக்கும். மழை மிரட்டினாலும், திருவட்டாறு சென்றிருந்தேன். உங்கள் வார்த்தைகளில் அது சித்திரமாய் இருந்தாலும், அத்தனை உயரமான கோவில் வேறு இருக்காது என்றே தோன்றுகிறது. நீளமான பிரகாரம் முடிவற்று விரிகிறது. சுத்தமான பராமரிப்பில் இருந்தது மேலும் அழகூட்டியது. மன்மதன் சிறுகதையில் வந்த கோவில் கிருஷ்ணாபுரம் என்று என் சிற்றறிவுக்கு புலப்பட்டாலும், அதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115465

கவிதையின் பாதைகள் -கடிதங்கள்

  கரவுப்பாதைகள்   அன்புள்ள ஜெ   கரவுப்பாதைகள் கட்டுரை, அல்லது கவிதைத்தொகுப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது. மீண்டும் மீண்டும் அக்கவிதைகளை வாசிக்கச் செய்தது. உண்மையில் இந்த நாளையே பரவசமானதாக ஆக்கிவிட்டது.   என்ன வேறுபாடு என்று நினைத்துப்பார்த்தேன். நீங்களே சொல்வதுபோல இன்றைய சூழலில் கவிதைகளை எவராவது அடிக்கோடிட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது இல்லாவிட்டால் நாம் கவிதைகளைக் கவனிக்கமாட்டோம்   அதைவிட கவிதையின் premise நமக்கு உடனடியாக பிடிகிடைப்பதில்லை. தொடர்ச்சியாக கவிதை வாசிப்பில் இருந்துகொண்டிருந்தாலும்கூட ஒரு வரியிலிருந்து அதற்கு ஒரு பின்னணிச்சூழலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128474

குகை கடிதங்கள் -2

குகை [சிறுகதை]-1 குகை [சிறுகதை] -2 ‘குகை’ [சிறுகதை]-3 ‘குகை’ -சிறுகதை -4 அன்புள்ள ஜெ, குகை ஒருமாதிரி கொந்தளிப்பையும் பயத்தையும் உருவாக்கிய கதை. இந்தவகையான உருவகக் கதைகள் நிறையவே வாசித்திருக்கிறேன். குகை மனிதனின் அடிப்படையான கனவுகளில் ஒன்று. ஆகவே கொஞ்சம் மனம்பிறழ்ந்தாலே நாம் அதற்குள்தான் செல்கிறோம். ஆனால் இந்தக்கதையின் பயமுறுத்தும் அம்சம் இதிலுள்ள மிகச்சரியான லாஜிக்தான். அந்த லாஜிக்தான் பயங்கரமானது. அவன் கலைக்களஞ்சியங்களை நிறைய வாசிக்கிறவன் என ஒரு க்ளூ இருக்கிறது. ஆனால் அந்த தகவல்களைக்கொண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116207

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-10

காளிகர் நடுங்கிக்கொண்டிருந்தார். கர்ணன் அவர் தோளைப்பற்றி “பெருந்தச்சரே, நான் அங்கநாட்டரசனாகிய கர்ணன்” என்றான். அவர் அவன் நெஞ்சை வருடி “பொற்கவசம்… மணிக்குண்டலங்கள். நான் அவற்றை பார்த்தேன்” என்றார். அவருக்குப் பின்னால் மூச்சிரைக்க ஓடிவந்த மாணவர்கள் “நிலையழிந்துவிட்டார், அரசே…” என்றார்கள். கர்ணன் “தாழ்வில்லை… அவர் சற்றே ஓய்வெடுக்கட்டும்” என்றான். “நீங்கள் தெய்வமைந்தன். கதிரவன் எனக்கு இன்று அதை காட்டித்தந்தான். அரசே, சொல்க! அடியவன் ஆற்றவேண்டிய பணி என்ன?” என்றார் காளிகர். கர்ணன் சொல்லெடுப்பதற்குள் மறித்த காளிகர் “நீங்கள் எவரென்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116693