Daily Archive: January 1, 2019

சிறுகதை ‘யானை’

    பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்பதற்கு அனந்தன் சொன்ன காரணம் வித்தியாசமாக இருந்தது. அவள் “என்ன?” என்றாள். அவன் தலையை கவிழ்த்து முனகலாக “எங்க ஸ்கூலிலே ஆனை இருக்கு” என்றான். “என்னது?” என்றாள். “ம்ம்ம்ம் ஆனை” அவள் அவனை ஒற்றைக்கையைப்பற்றி படுக்கையிலிருந்து தூக்கி எடுத்து “கெளம்பு” என்றாள். கால் தரையில் உரசியபடி இழுபட்டு வர “ஆனை முட்டிடும்… ம்ம்ம்ம் ஆனை முட்டிடும்” என்று அவன் அழத்தொடங்கினான். “வாயமூடு, மென்னிய நெரிச்சிருவேன்” என்று சாதனா சொன்னாள் வழக்கமாக வேறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116342

கலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி

  அந்தியூர் அருகேயுள்ள கழுதைப்பாளி  மலையடிவார கிராமத்தில் நண்பர்கள் 12 பேர்களுடன் திரு. அன்புராஜை சந்தித்தோம். இவரை பற்றி   25-11-2018 அன்று தீ கதிரில் வந்திருந்த ஒரு  செய்தித்தொகுப்பை   அனைவரும் படித்திருத்தோம். வீரப்பனுடன் இணைந்து  9 வனவர்கள் கடத்தப்பட்ட வழக்கில் 1997 முதல் 2016 வரை 19 ஆண்டுகள்  9 மாதங்கள்   தொடர்ந்து  9 பகுதிகளாக தமிழக மற்றும் கர்நாடக சிறைச்சாலைகளில் தண்டணை அனுபவித்துவிட்டு  விடுதலையானவர். 7ம்  வகுப்பு படித்திருந்த 42 வயதுடைய அன்புராஜ் சிறையிலேயே ஒரு  பட்டயப்படிப்பும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116346

தன்னறம் நூல்வெளி

    செயல்படுவோர் அளிக்கும் மீட்பு அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு, தற்காலச்சூழல் மெல்லமெல்ல தர்க்கச்சூழலாகவே, எல்லா பக்கங்களிலிருந்தும் அணுகப்படுவதை நாமனைவருமே பார்கிறோம். ஒருவித வெறுப்புணர்வு உச்சம் மனித மனங்களிலிருந்து எவ்விதத் தடையுமின்றி வெளிப்படுகிறது. எதிர்மைசார்ந்த பயணப்போக்கின் மீது ஒரு சாயல் ஏற்பட்டுள்ளதை நம்மால் மறுக்க முடியவில்லை. ஒன்றினை அடைதல் என்ற குறுஎல்லையை இலக்காக வைத்திருப்பதனால், நாமடைந்த இழப்புகளை கணக்கில்கொள்ளத் தவறிவிடுகிறோம். அவ்வகையில், இவ்வாழ்க்கையின் மீதும் அதன் உள்ளார்ந்த சத்தியத்தின் மீதும் எங்களுக்குப் பேரார்வமும் பெரும்பிடிப்பும் உண்டாக… உங்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116627

நீலத்தாமரை

    சில மலையாளப் பாடல்கள் மலையாளிகளுக்கு ஆழ்ந்த உணர்வுகளை உருவாக்குவன. அவற்றை பிறர் கேட்டால் ‘டியூனே’ இல்லியே’ என்பார்கள். ஆனால் மலையாளிகளுக்கு அவை  ‘மெலடிகள்’  இது வெறும் கடந்தகால ஏக்கமா என்று எனக்கே சந்தேகமுண்டு. ஆனால் அப்படி அல்ல என்று நிரூபிக்கும் சில தருணங்கள் உண்டு. இந்தப்பாடல் கேரளத்தின் தொலைக்காட்சிகளில் இளைய தலைமுறையினரால் அடிக்கடிப் பாடப்படுவது, இளைஞர்களால் விரும்பப்படுவது.   சமீபத்தில் ஒரு வாசகரைச் சந்தித்தேன். மதுரைக்காரர். திருவனந்தபுரம் அருகே தொழில்நிமித்தம் வந்து தங்கி பத்தாண்டுகளாகின்றது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115815

பிரதமன் கடிதங்கள் 7

  பிரதமன்[சிறுகதை] அன்புள்ள ஜெ     உங்கள் சமீபத்திய சிறுகதைகளில் என்னை மிகவும் கவர்ந்தது பிரதமன். எனக்கு மிகவும் பிடித்த சுவைகளில் ஓன்று பிரதமன். என் அம்மா வைக்கும் பிரதமனை விட என் அக்காவின் மாமியார்  வைப்பது எனக்குப் பிடிக்கும். அதற்க்குக் காரணம் அவர் சரியாக சேர்க்கும் அந்த தேங்காய்ப்பால் தான் போல.  இதை படித்தவுடன் பிரதமனின் வாசம் மெல்ல எழுந்து வந்தது.   இயல்பாகவே மனம் இந்த கதையை அயினிப்புளிக்கறி கதையுடன் ஒப்பிடுவதை தவிர்க்கமுடியவில்லை. ஆனால் இந்த கதை அதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115532

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-8

சிவதர் கதவை ஓசையின்றி திறந்து உள்ளே வந்து தலைவணங்கினார். கர்ணன் அத்தனை பொழுதும் தான் அசைவில்லாமல் அமர்ந்திருந்ததை அப்போதுதான் உணர்ந்தான். நெடும்பொழுது அசைவற்றிருந்ததனால் உடற்தசைகளில் எடை கூடி மெல்லிய உளைச்சல் ஏற்பட்டது. விழிகளைத் தூக்கி முகத்தால் என்ன என்று வினவினான். “அஸ்தினபுரியின் அரசதூதர்கள்” என்று சிவதர் சொன்னார். கர்ணன் தலையசைத்தான். “அவர்களின் அரசகுடியிலிருந்து சுபாகுவும் உடன் பூரிசிரவஸும் வந்திருக்கிறார்கள்” என்று சிவதர் சொன்னார். பின்னர் இரு எட்டு எடுத்துவைத்து அருகணைந்து “அவர்கள் வந்தது நன்று. அரசகுடியிலிருந்து ஒருவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116656