Monthly Archive: January 2019

உல்லாலா!

  ரயிலில் நான் ஏறி அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டதுமே பக்கத்தில் இருப்பவர் அறிமுகம் செய்வார். “சார் சாப்பாடு வாங்கலையா?”. அவர் கையில் பிளாஸ்டிக் பையில் சாப்பாடு பொட்டலம் இருக்கும். அதை பதமாக எடுத்து அப்பால் வைப்பார். “இல்லசார், நான் இட்லி கொண்டுவருவான். வாங்குவேன்”. ரயிலில் பழம் சாப்பிடுவதில்லை. ஏன் பழம் சாப்பிடுகிறேன் என விளக்கவேண்டியிருக்கும்.அதற்கு வெண்முரசு ஒரு அத்தியாயம் எழுதலாம்   அவர் ஆரம்பிப்பார்.  “நான்லாம் வீட்டிலே இருந்து கொண்டுவந்துடறது சார். நமக்கு சுகர் இருக்கு. அதனால ராத்திரிக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117199

கேசவமணி சுந்தரகாண்டம்

அன்புள்ள ஜெயமோகன், நீண்ட நாட்களுக்குப் பிறகு திரும்ப வந்திருக்கிறேன். கடந்த காலத்தில் நல்லவை கெட்டவை இரண்டும் நடந்திருக்கின்றன.எனவே மீண்டுவர கால அவகாசம் தேவைப்பட்டது. என்னுடைய “சுந்தர காண்டம்” என்ற சிறுநூல் நற்றிணை பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்திருக்கிறது. https://kesavamanitp.blogspot.com/2019/01/blog-post_10.html அன்புடன், கேசவமணி

Permanent link to this article: https://www.jeyamohan.in/117209

‘நீள’கண்டப் பறவையைத் தேடி

அன்புள்ள ஜெ., நலமா? ‘மார்கழித்திங்கள் பனி நிறைந்த நன்னாளாம் நீராடப் போகாதீர்’ பாட்டு கோயில்களிலோ ரேடியோ டீவியிலோ ஒலிக்கும் போது தான் சென்னையில் மார்கழி என்பதே ஞாபகத்திற்கு வரும். இந்த முறை அப்படியல்ல. பல நாட்கள் போர்வையின் துணை தேவைப்பட்டது. அப்படியாகப்பட்ட ஒரு விடிகாலை நேரத்தில் 05/01/2019 அன்று சனிக்கிழமை காலை கிண்டி ரயில் நிலைய வாசலிலிருந்து பேருந்தில் புறப்பட்டோம் புலிக்காட் ஏரி நோக்கி. நோக்கம் இந்த சீசனில் மட்டுமே காணக்கிடைக்கிற ‘பிளெமிங்கோ’ (பூநாரை) பறவைகளை தரிசிப்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117176

விஷ்ணுபுரம் விழா- கடிதம் – 17

விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு விஷ்ணுபுரம் அமைப்பின் கருத்தியல் என்ன? விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் விஷ்ணுபுரம்விழா: கடிதங்கள்-16 அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். நலம் அறிய ஆவல். அது ஒரு கனா அல்லது லட்சியம் என்று சொல்லலாம். ஜூன் 2016-ல்சோற்றுக்கணக்கு கதை படிக்கப்போய், உங்கள் எழுத்துக்களில் ஈடுபாடு ஏற்பட்டு, ஒவ்வொருநாளும் உங்கள் எழுத்துக்களை தேடி படித்து, பழைய விஷ்ணுபுரம் விருது விழாக்களின் காணொளிகளை ,உங்கள் உரைகளை, யூடுயூபில் கேட்டு, உங்களை நேரில் சந்திக்கவும், விஷ்ணுபுரம் விருது விழாவில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117186

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-25

துச்சாதனன் கர்ணனுடன் நடந்தபோது மிகவும் உடல்களைத்திருந்தான். அவன் துயின்று இரண்டு இரவுகள் கடந்துவிட்டிருந்தன. அந்த இரு நாட்களும் பல ஆண்டுகளாக நீண்டு, நிகழ்வுகளால் செறிந்து, நினைத்தெடுக்கவே முடியாத அளவுக்கு பெருகியிருந்தன. களைப்பு அவன் கால்களை சேற்றிலென சிக்க வைத்தது. உடலின் அத்தனை தசைகளும் நனைந்த ஆடைகள் என எலும்புகள் மேல் தொங்கிக்கிடந்தன. உள்ளமும் ஒரு நனைந்த மென்பட்டாடை என படிந்திருந்தது. நாக்கு உலர்ந்த மென்தளிர் என வாய்க்குள் ஒட்டியிருந்தது. ஒரு சொல்லை எடுப்பதென்றால்கூட முழுதுடலாலும் உந்தி ஊறச்செய்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117080

மொழியை பெயர்த்தல்

கான்ஸ்டென்ஸ் கார்னெட் ‘தமிழில்’ பேயோன் க.ரத்னம் மொழியாக்கம் செய்து தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ’டப்ளின் நகரத்தார்’ என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்தபோது, அல்லது வாசிக்க முயன்றுகொண்டிருந்தபோது, அல்லது முயற்சியை கைவிட்டுவிட்டிருந்தபோது, பேயோனின் இந்தக் கட்டுரையை வாசித்தேன். துயரத்துடன் ‘ஆமா! ஆமா!’ என்று சொல்லிக்கொண்டேன். [தமிழில்… பேயோன் ] ஜேம்ஸ் ஜாய்ஸின் டப்ளினர்ஸ் என்னும் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுதியின் தமிழாக்கம் இந்நூல். இதை மொழியாக்கம் செய்த க.ரத்னம் ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர். கல்லும் மண்ணும் என்னும் நாவலையும் கதைகளையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117158

எஸ்.ரா. – கடிதங்கள்

எஸ்.ராமகிருஷ்ணனின் இரவும் பகலும்   அன்புள்ள ஜெ, எஸ்.ராமகிருஷ்ணனைப் பற்றிய உங்கள் தடம் இதழ் கட்டுரை அருமையானது. என் ஆதர்ச எழுத்தாளர் அவர். அவரைப்பற்றி முன்பும் நீங்கள் நான்கு கட்டுரைகள் எழுதியிருந்தீர்கள். தமிழில் சமகால எழுத்தாளர் ஒருவரைப்பற்றி இப்படி விரிவான ஆய்வாக இன்னொரு எழுத்தாளர் எழுதியதில்லை. இந்தக் கட்டுரைகளை மட்டுமே திரட்டினால் ஒரு சிறிய நூல் வடிவில் வெளியிட்டுவிடமுடியும் தடம் இதழில் வெளிவந்துள்ள இந்தக் கட்டுரை எஸ்.ராமகிருஷ்ணனை விரிவாகப் புரிந்துகொள்ள உதவும் ஒரு முன்வரைவாக உள்ளது. இந்தக்கட்டுரையை முன்னுரையாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117171

வரைகலை நாவல்கள் – கடிதம்

மங்காப் புகழ் புத்தர் இனிய ஜெயம் மங்காப் புகழ் புத்தர் பதிவில் //வரைகலை நாவல்கள் [graphic novel] மேல் எனக்கு பெரிய ஆர்வமிருந்ததில்லை. நான் வாசித்தவரை அவை ஆழமானவையாகவும் தெரியவில்லை. ஒருவகையில் அவை வாசிப்புக்கு இடர் அளிப்பவை. நம் வாசிப்பின்போது மொழியிலிருந்தே கால இடச்சூழலை உருவாக்கிக் கொள்கிறோம். காட்சிக் கோணங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறோம். நான் வாசிக்கையில் ஒவ்வொரு வாசிப்புக்கும் புனைவுகள் அளிக்கும் காட்சிகள் மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறேன்.   வரைகலை நாவல்கள் அவற்றை நம் சார்பில் அவையே முற்றாக வகுத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117167

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-24

துச்சாதனன் வெளியே படையானை ஒன்றின் பிளிறலைக் கேட்டதுமே துரியோதனனின் வருகையை உணர்ந்தான். அதன் பின்னரே அரச வருகையை அறிவிக்கும் கொம்பொலி எழுந்தது. அவையிலிருந்தவர்கள் தங்கள் ஆடைகளையும் அணிகளையும் சீரமைத்துக்கொண்டனர். பீடத்தில் சற்றே உடல் சாய்த்து விழிசரிய துயில் கொண்டவன்போல் அமர்ந்திருந்த கர்ணனிடம் மட்டும் எந்த அசைவும் ஏற்படவில்லை. துச்சாதனன் அறைவாயிலுக்குச் சென்று நின்றான். அப்பால் தேரிலிருந்து இறங்கிய துரியோதனன் அவை நோக்கி வந்த நடையிலேயே அவன் உளம் உவகையில் துள்ளிக்கொண்டிருப்பது தெரிந்தது. ஆனால் துச்சாதனனை அது மகிழவைக்கவில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117116

ஒரு தொல்நகரின் கதை

தமிழில் ஆண்டுதோறும் வரும் வரலாற்று நூல்கள் இரண்டுவகை. ஒன்று, வரலாறு என்றபேரில் நினைத்ததை எல்லாம் எந்தத் தர்க்க ஒழுங்குமில்லாமல் எழுதிக்குவிக்கும் எழுத்துக்கள். அவை மூன்று வகை.  திராவிட, தமிழ்த்தேசியப் பெருமிதங்களை அடிப்படையாகக் கொண்டு கொரியமொழி தமிழ்மொழியே, எகிப்தும் தமிழ்நாடே என்றவகையில் எழுதப்படுபவை ஒருபக்கம். இன்னொருபக்கம் இணையான அசட்டுத்தனத்துடன் அனைத்தையுமே சம்ஸ்கிருத, பிராமணியப் பெருமிதவரலாற்றுடன் திரித்து இணைத்துக்கொள்ளும் வரலாறுகள். முந்தைய வரலாற்றுக்கு நவீனவரலாற்றாய்வு என்னும்பாவனை உண்டு. இரண்டாவது வரலாற்றுக்கு தொன்மச்சார்பும் அதிலிருந்து கிளைத்த தொகுப்புமுறையும் உண்டு. மூன்றாவதாக இன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117123

Older posts «