Daily Archive: December 29, 2018

ஒருநாள்

  இன்று 29-12-208 அன்று சைதன்யாவின் பிறந்தநாள். எத்தனையாவது என்பது ரகசியம். 22 என்றால் மறுக்கப்போவதுமில்லை. பிரதமன் வைக்கலாம் என அருண்மொழி சொன்னாள். ஆகவே காலையில் நடை சென்று மீண்டதுமே நான்கு தேங்காய்களை உரித்து உடைத்து துருவி தந்தேன். கை ஓய்ந்துவிட்டது. எத்தனை தேங்காய்களை துருவிய கை என சொல்லிக்கொண்டேன். இதையெல்லாம் சொல்லுமிடத்திற்கு ஒருவழியாக வந்துசேர்ந்துவிட்டோம் என்பது கொஞ்சம் பெருமிதமாகவே இருந்தது.   வெண்முரசு சில அத்தியாயங்கள் இரண்டுநாட்களில் எழுதவேண்டும். நாளை மாலை கோவை எக்ஸ்பிரஸில் ஈரோடு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116653

விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு

விஷ்ணுபுரம் விருதுகளை முன்பெல்லாம் நவம்பர் வாக்கில்தான் முடிவெடுப்போம். சென்ற ஆண்டு சீ.முத்துசாமிக்கான விருதை ஆகஸ்டிலேயே அறிவித்தோம், மலேசியாவின் சுவாமி பிரம்மானந்தர் அவர்களின் ஆசிரமத்தில் நிகழ்ந்த இலக்கிய விழாவில். அது ஒரு நல்ல விளைவை உருவாக்கியது. கிட்டத்தட்ட நான்குமாதக்காலம் முத்துசாமி பேசப்பட்டார். அவருடைய படைப்புக்கள் வாசிக்கப்பட்டன.   ஆகவே இவ்வாண்டு மேலும் முன்னரே ராஜ் கௌதமனுக்கான விருதை அறிவித்தோம். அவர் எழுதியவை ஆய்வுநூல்கள். அவற்றை வாசகர்கள் வாசித்துவிட்டு விழாவுக்கு வருவதற்கு அது உதவியாக இருந்தது. அரை ஆண்டுக்காலத்தை ஓர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116502

பாட்டும் தொகையும் ஆவணப்படம் -கடிதங்கள்

  விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்   அன்புள்ள ஆசிரியருக்கு, ஆவணப்படம் மிக அருமையாக இருந்தது. எப்போதும்போல தாங்கள் ஒன்று இரண்டு என்று அடுக்கி விழாவின் நாயகரைப்ப்ற்றி கூறியது தொகுத்துகொள்ள உதவி செய்தது. ஆவணப்படத்தின் ஒட்டம் மிக லாவகமாக அவரின் மொத்த வாழ்க்கையயும் வரைந்து காட்டியுள்ளது. மிக முக்கியமாக அவரின் அனைத்து முகங்களையும் பதிவு செய்தவிதம் உண்மையில் அருமையாக இருந்தது. பார்த்து முடித்தவுடன் அவரை எங்கோ இருக்கும் ஒரு வனதேவன் என்ற நிலையில் இருந்து சலிப்பும், மகிழ்ச்சியும் இயல்பாக உள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116630

விஷ்ணுபுரம் விழா:கடிதங்கள்-9

அன்புள்ள ஜெ,     கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் 2018-ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விழா வெகு உற்சாகத்துடன் நடந்து முடிவுற்றுள்ளது. இலக்கிய அமர்வுகள் தந்த தாக்கத்திலிருந்து இன்னும் நான் விடுபடவில்லை. சில எழுத்தாளர்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டதைக் காண மகிழ்ச்சியாக இருந்தது. இரு தினங்களும் ஒருவித கட்டுக்கோப்பான, அடர்த்தி மிக்க அமர்வுகள். எழுத்தாளர்களின் உலகம் என்னவாக இருக்கிறது என்பதை வாசகர்கள் உணர்ந்து கொள்ளும் விதமான உருப்படியான அமர்வுகள். இலக்கிய அமைப்புகளும், எழுத்தாளர்களும் தன் முனைப்பில் உதிரி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116522

விஷ்ணுபுரம் விழா:கடிதங்கள் 8

அன்புள்ள ஜெ, இந்த ஆண்டு விருது விழா எனக்கு இனிய அனுபவமாக இருந்தது. கடந்த ஆண்டு இருந்த தயக்கமும் , கூச்சமும் நீங்கி அனைவரிடமும் உரையாட முடிந்தது. இலக்கியம் மட்டும் ஆன இந்த இரண்டு நாட்களுக்காக இந்த வருடம் முழுக்க காத்து இருந்தேன். 22 காலை முதல் அமர்வு தொடங்கி அனைத்து அமர்வுகளிலும் பங்கு பெற முடிந்தது. பங்கு பெற்ற அனைத்து எழுத்தாளர்களின் ஆளுமைகளையும் இந்த அமர்வு மூலம் அறிய முடிந்தது. எனக்கு தனிப்பட்டு படித்த அமர்வு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116440

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-5

கங்கையின் கரையில் இடும்பவனத்தில் அமைந்த இடும்பபுரியின் அருகே காட்டுக்குள் எழுந்த சிறுகுன்றின்மேல் தொல்லிடும்பர்களின் இடுகாட்டில் கிளையிலா அடிமரம்போல் ஓங்கி நின்றிருந்த பெரிய நடுகற்களின் நிழல்களை நெளிந்தாடச் செய்யும் பந்தங்கள் எரிந்த ஒளிப்பரப்பிற்குள் எழுவர் அமர்ந்திருந்தனர். காவலர் மூவர் வேல்களுடன் அப்பால் நின்றனர். அவர்களில் நால்வர் முதியவர்கள். மூவர் முதிரா இளையோர். அவர்களில் ஒருவன் இடும்பவனத்தின் இளவரசனாகிய மேகவர்ணன். பேருடலனான அவன் அமர்ந்திருக்கையிலேயே நின்றிருந்த வேலவர்களின் தோளுயரம் இருந்தான். அருகே மூதாதையாகிய இறுதி இடும்பரின் பெருங்கல்லுக்கு முன்னால் விரிக்கப்பட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116269