Daily Archive: December 28, 2018

பாட்டும் தொகையும் -ராஜ் கௌதமன் ஆவணப்படம்

    ராஜ் கௌதமனுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டதை ஒட்டி கே.பி.வினோத் அவர்களால் எடுக்கப்பட்ட ஆவணப்படம். பாட்டும் தொகையும்.   2018 டிசம்பர் 23 அன்று விருதுவழங்கும் மேடையில் முதல் திரையிடல் நிகழ்ந்தது.   இசை பி சி சிவன் படத்தொகுப்பு குமரேசன் RGB வரைகலை ஆஷிப்ஹான் வண்ணக்கலவை பிரகாஷ் ஒளிப்பதிவு -இயக்கம்  கே பி வினோத்     விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/116340

விஷ்ணுபுரம் விருதுவிழா இதுவரை

  விஷ்ணுபுரம் விருதுவிழா 2017 பதிவுகள் விஷ்ணுபுரம் விருதுவிழா 2016 பதிவுகள் விஷ்ணுபுரம் விருதுவிழா 2013 பதிவு விஷ்ணுபுரம் பதிவுகள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/116474

விஷ்ணுபுரம் விருதுவிழா:தேவிபாரதி உரை

விஷ்ணுபுரம் காணொளிகள் 2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பேரா ராஜ் கௌதமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. விருதுவழங்கும் விழா 23-12-2018 அன்று கோவையில் நிகழ்ந்தது. அதில் எழுத்தாளர் தேவிபாரதி அவர்கள் ஆற்றிய உரை ஒடுக்கப்பட்டோர் இலக்கியம்-நம்பிக்கைகளின் நிகழ்காலமும் அவநம்பிக்கைகளின் எதிர்காலமும். ராஜ் கௌதமன் போன்ற ஓர் இலக்கிய ஆளுமையின் பங்களிப்புகள் குறித்து உருப்படியாக எதையாவது சொல்லிவிட முடியும் என என்னால் கற்பனை செய்துகொள்ள முடியவில்லை. கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக அதைப் பற்றிக் கொஞ்சம் யோசிக்க முயன்றேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116471

விஷ்ணுபுரம் விருதுவிழா கடிதங்கள்-7

விஷ்ணுபுரம் காணொளிகள் அன்புநிறை ஜெ,     மிக நெகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கிறது. இரண்டு நாட்களை பல முறை மனதில் மீள நிகழ்த்திக் கொண்டே இருக்கிறேன். விருது நிகழ்வில் பேராசிரியர் ராஜ் கௌதமன் அவர்களின் உரை நிறைவுறும் தருவாயில் கிளம்பினேன். பத்து மணியளவில் விமான நிலையம் சென்றடைந்து விமானம் அரைமணிநேரம் தாமதம் என்றறிந்தபோது இன்னும் சில நிமிடங்கள் அங்கிருந்திருக்கலாமே என்றிருந்தது. முதல்நாள் காலை ஆறரை மணியளவில் ராஜஸ்தானி சங்கத்தின் வாயிலில் வந்திறங்கியபோதே நமது குடும்பத்தினரின் சிரிப்பும் பேச்சும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116476

விஷ்ணுபுரம் விருதுவிழா:கடிதங்கள் 6

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் 2018 விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவிலிருந்து இன்றுதான் வீடு திரும்பினேன். சனிக்கிழமையிலிருந்து திங்கட்கிழமை வரையிலும் பெரும் இலக்கியக்கொண்டாட்டமாக இருந்தது. முந்தைய வருடத்தை விட ஒவ்வொரு வருடமும் பங்கேற்பாளர்களும் வாசகர்களும், அதில் நிறைய பெண்களும் புதியவர்களும் சிறப்பு விருந்தினர்களும் அதிகரித்தவாறே இருக்கின்றார்கள். இந்த இரண்டு நாட்களும் பல முக்கிய இலக்கிய மற்றும் திரை ஆளுமைகளுடனேயே இருந்து அவர்களின் உரைகளைக்கேட்டு விளக்கங்களைப்பெற்று ஆரோக்கியமாக விவாதித்து சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ள வாசகர்கள் அனைவருக்கும் நல்ல வாய்ப்பு அமைந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116459

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-4

நீலப்பட்டுத் துணியால் மூடிக் கட்டப்பட்டிருந்த காந்தாரியின் விழிகளை தன் இமையா ஒற்றைவிழியால் நிலைகொண்டு நோக்கியபடி ஏகாக்ஷர் சொன்னார். “அரசி, இப்போது பின்னிரவு. மலையடிவாரத்தில் தன் குடில்முற்றத்தில் நிலத்தில் விரிக்கப்பட்ட ஈச்சையிலை முடைந்த படுக்கையில் திருதராஷ்டிரர் புரண்டு புரண்டு படுத்தபடி முனகிக்கொண்டிருக்கிறார். அவர் அருகே காலடியில் நான் அமர்ந்திருக்கிறேன். அவருடைய துன்பத்தின் ஒலி மட்டும் அந்த இருளில் நிறைந்திருக்கிறது.” திருதராஷ்டிரரின் விம்மல் இருமலாகியது. நெஞ்சைப் பற்றியபடி மூச்செறிந்து பின் செறிகுரலில் சொன்னார். அவர் உடலில் பாய்ந்த அம்புகள் ஒன்றொழியாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116230