Daily Archive: December 26, 2018

இமையத்திற்கு இயல் விருது – 2018

எழுத்தாளர் இமையம் இவ்வாண்டுக்கான இயல் விருதைப் பெற்றுள்ளார். கனடாவை மையமாகக் கொண்டு வழங்கப்படும் இயல்விருது தமிழ் இலக்கியவிருதுகளில் பெருமைமிக்கது. சுந்தர ராமசாமி தொடங்கி தமிழின் முதன்மையான படைப்பாளிகள் இவ்விருதை பெற்றிருக்கிறார்கள். எழுத்தாளர் இமையம் கோவேறு கழுதைகள் என்னும் நாவல் வழியாக தமிழில் அறிமுகமானவர். தமிழின் இயல்புவாத இலக்கியப்போக்கின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர். தமிழில் 1990 களில் தலித் அரசியலும் தலித் பண்பாட்டாய்வும் உருவாகி வந்தன. தொடர்ந்து தலித் இலக்கிய அலை எழுந்தது. அந்த அலை உருவாக்கிய இரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116412

விஷ்ணுபுரம் விருதுவிழா:ராஜ் கௌதமன் உரை

2018 ஆண்டுக்குரிய விஷ்ணுபுரம் விருது பேரா ராஜ் கௌதமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 23-12-2018 அன்று கோவை ராஜஸ்தானி சங்க் அரங்கில் நிகழ்ந்த விழாவில் பேரா ராஜ் கௌதமன் பேச்சும் நிகழ்ச்சி தொகுப்பும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/116448

விஷ்ணுபுரம் விழா உரை – ஜெயமோகன்

பேராசிரியர் ராஜ் கௌதமன் அவர்களுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கும்பொருட்டு 23-12-2108 அன்று நிகழ்ந்த விழாவில் ஆற்றிய உரை

Permanent link to this article: https://www.jeyamohan.in/116429

விஷ்ணுபுரம் விழா ஸ்டாலின் ராஜாங்கம்

2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் ராஜ் கௌதமன் அவர்களுக்கு வழங்கப்பட்டதை ஒட்டி கோவையில் 23-12-2108 அன்று நிகழ்ந்த விழாவில் ஸ்டாலின் ராஜாங்கம் ஆற்றிய உரை

Permanent link to this article: https://www.jeyamohan.in/116433

விஷ்ணுபுரம் விழா கடிதங்கள் -3

டியர் ஜெயமோகன், விழாவில் கிட்டிய அனுபவத்துக்கும், பரிசில்களுக்கும், விருந்தோம்பலுக்கும் நன்றி. நிகழ்வு குறித்து கடந்த மூன்று தினங்களில் அவ்வப்போது ஃபேஸ்புக்கில் நான் எழுதிய குறும்பதிவுகளைத் தொகுத்திருக்கிறேன்: சி சரவணக்கார்த்திகேயன் விஷ்ணுபுரம் விழா சில குறிப்புகள் அன்புள்ள ஜெ விஷ்ணுபுரம் விழா மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. நான் பத்தாண்டுகளாக வெவ்வேறு இலக்கிய விழாக்களில் கலந்துகொள்பவன். பெரும்பாலும் எதுவும் பேசியதில்லை. விழாவுக்கு வருபவர்களைக்கூட தூரத்தில் நின்று மனதால் சந்தித்திருக்கிறேன். நான் சந்தித்த ஒரே எழுத்தாளர் அசோகமித்திரன். அவரை காரில் வீட்டுக்குக் கொண்டுசென்றுவிட்டேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116418

விஷ்ணுபுரம் விழா கடிதங்கள் 2

அன்புள்ள ஜெ , விழா சிறப்பாக நிகழ்ந்தது .எனக்கு ராஜ் கவுதமனின் இயல்பான பேச்சு மிக பிடித்தது. விவாத நிகழ்வில் தேவிபாரதி மிக கவர்ந்தார் , அவர் தால்ஸ்தோய் ,காந்தி இருவரின் பாதிப்பினால் தன்னில் உருவான முதிர்ச்சியை பகிர்ந்த இடம் , தால்ஸ்தோய் காந்தி இருவருக்குமான வித்யாசம் மற்றும் தால்ஸ்தோய் வரலாற்றினை சொன்ன இடங்கள் பிரமாதமாக இருந்தன . பொதுவாக எழுத்தாளர்களை காந்தியும் தால்ஸ்தோயும் ‘வெஜிடேரியன்’களாக மாற்றிவிடுகிறார்கள் என இவர் பேசும் போது நினைத்தேன் :) ஸ்டாலின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116413

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-2

புஷ்கரவனத்தில் நாகர்குலத்து மூதன்னையான நித்யை சொன்னாள். “அழகிய விழிகள் கொண்டவளே, புவியைப் படைத்த பிரம்மன் விண்ணின் உயரத்திலிருந்து அதை நோக்கியபோது அது புல்நுனிப் பனித்துளி என நடுங்கிக்கொண்டிருப்பதை பார்த்தார். அது ஏன் என்று அறிந்துவர தன் மைந்தர்களான மரீசி, புலகர், புலஸ்தியர், அங்கிரஸ், அத்ரி ஆகிய ஐவரையும் மண்ணுக்கு அனுப்பினார். அவர்கள் மண்ணுலகில் அலைந்து திரிந்த பின்னர் திரும்பிவந்து வணங்கினர். ஒவ்வொருவரும் தாங்கள் கண்டதை சொன்னார்கள்.” மரீசி சொன்னார். “தந்தையே, மண்ணுலகில் கடல்கள் பெருங்காற்றுகளால் கொந்தளித்துக்கொண்டே இருக்கின்றன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116202