Daily Archive: December 25, 2018

இரு தனிமைகள்

அத்தனை தீமையின் நடுவிலும் தெய்வமைந்தன் என்றிருப்பதன் தனிமையா அத்தனை தீமையும் என்னதே என்று சொல்லவைத்தது உன்னை? அனைத்தையும் சுமந்திருக்கையில் உணர்ந்திருப்பாய் மானுடனின் மெய் என்னவென்று.   என் ஆசிரியனே மானுடனில் ஒருவனாக நின்றே என்னை ஏன் கைவிட்டீர் என்று கேட்டாய்போலும்.   மலையுச்சித் தனிமையில் பெருகிய சொற்கள் இன்னொரு மலையுச்சித் தனிமையில் ஒற்றை மன்றாட்டு என்றாயின ஒன்று சொல்லுறுதி ஒன்று வேண்டுதல் ஒன்று அங்கிருந்து இங்கு வந்தது இன்னொன்று இங்கிருந்து அங்கு சென்றது இரண்டும் ஒன்றையொன்று நிரப்புகின்றன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116153

விஷ்ணுபுரம் விழா பதிவுகள்-1

அன்புள்ள ஜெ இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருது விழா நிகழ்வுகளில் இரு நாட்களும் முழுமையாக (முதன்முறையாக)கலந்து கொண்டேன்(மதுபால் அமர்வு தவிர). கொண்டாட்ட மனநிலையும் கற்றல் சூழலும் நிறைந்திருந்த்து. கொண்டாட்டத்திற்குக் காரணம் விழா நாயகன் ராஜ் கவுதமன் அவர்களும் மற்றும் தேவி பாரதி, சாம்ராஜ் இவர்களின் அமர்வுகளே. பிற அமர்வுகள் ஒரு வகுப்பறை மனநிலையில் இலக்கியத்தை போதித்தன. (அதுவும் தேவை) சரவணன் கார்த்திகேயன் அமர்வு வரலாற்று இடைவெளி நிரப்பல், வரலாற்று மீட்டுருவாக்கம், தர்க்கத்தை முழுமையாக்கல், வாசகர்களுடன் விளையாடுதல், கதையாக்கத்தின் பொறியியல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116410

பிரதமன் -கடிதங்கள்-6

பிரதமன்[சிறுகதை] அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு,     நலம் மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.   ‘பிரதமன்’ கதையை வாசித்தவுடன், உங்களின்  குறுநாவல் தொகுப்பின் முதல் கதையான ‘கிளி்க்காலம்’ கதையை வாசிக்கத் தோன்றியது.  இந்த மறுவாசிப்பில்  இரு கதைகளும் ஒன்றின் தளத்தினை, கருவினை மற்றொன்னு, ஊடுபாய்ந்து ஈடிட்டு நிரப்பிய உணர்வினைத் தந்தது.   திருமண விழாவின் பின்புலத்தில் இரண்டு கதைகளும் நிகழ்கின்றன.  கிளிக்காலத்தில் காமத்தின் வாயிலில் குறுகுறுப்புடன் நிற்கும் மறவோன் பருவத்திலிருக்கும் மூன்று சிறுவர்களிடையே  நிகழும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115523

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-1

sword

 தோற்றுவாய் வேசரநாட்டில் கருநீல நீரோடும் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் நாகர்குலத்து மூதன்னையான நித்யை அந்தியில் குடில் முன்பு மண் அகலை ஏற்றிவைத்து, தன் குலத்து மகள் விஷஹாரியின் வயிற்றில் பிறந்த சிறுமகள் மானசாதேவியை மடியில் வைத்துக்கொண்டு கதைசொல்ல அமர்ந்தாள். இளமகள் நித்யையின் கைகளைப்பற்றி தன் வயிற்றின்மேல் வைத்துக்கொண்டு “உம்” என்றாள். நித்யை ‘ம்ம்ம்’ ‘ம்ம்ம்’ என முனகிக்கொண்டு முன்னும்பின்னும் ஆடிக்கொண்டிருந்தாள். அந்த முனகலோசை அலையடித்துச் சுழன்றது. அதனூடாக முதுமகள் வேறெங்கோ சென்றுகொண்டிருந்தாள். நித்யை அந்த முரலலோசையை தூண்டிலாக்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116121