Daily Archive: December 24, 2018

விஷ்ணுபுரம் விருது விழா 2018 புகைப்பட தொகுப்பு

IMG_9209

  விஷ்ணுபுரம் விருது விழா 2018 புகைப்பட தொகுப்பு   புகைப்படங்கள் அய்யலு ஆர் குமரன்     கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்.. Vishnupuram 2018 by Ayyalu R kumaran  

Permanent link to this article: https://www.jeyamohan.in/116403

ஜெயகாந்தன் பற்றி பெருந்தேவி

  நாவலுக்கான தன் முன்னுரையில் ஜெயகாந்தன் அக்கினிப் பிரவேசம் சிறுகதையிலிருந்து வேறுபட்ட “இன்னொரு மாதிரியான ஆட்டம்” என்று குறிப்பிட்டிருக்கிறார் என்று பார்த்தோம். இந்த ஆட்டத்தின் ஒரு சிறப்பம்சம் புதினத்தில் கதாபாத்திரங்களுக்குப் பெயரிடுவதில் உள்ளது, அல்லது சிறுகதையில் பெயர்கள் இல்லாமல் இருப்பதில் உள்ளது. தமிழ் அக இலக்கிய மரபில், களவொழுக்கம், கற்பொழுக்கம் ஆகியவற்றைப் பேசும் பாடல்களில் தலைவன், தலைவிக்குப் பெயர்கள் இல்லை. இந்த மரபை ஒரு வகையில் ஒட்டியும் ஒரு வகையில் விலகியும், சிறுகதையில், வல்லுறவில் ஈடுபடும் அவனுக்கோ, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116232

குகை- கடிதங்கள்

குகை [சிறுகதை]-1 குகை [சிறுகதை] -2 ‘குகை’ [சிறுகதை]-3 ‘குகை’ -சிறுகதை -4   அன்புள்ள ஜெ,   நான் எட்டு ஆண்டுகளாக டிராங்குலைசர்களை பயன்படுத்தியவன். அப்போது பல பிரச்சினைகள். சின்ன அளவில் ஸ்கிஸோப்ர்னியா. அதன்பின் இப்போது சரியாகிவிட்டது. அல்லது கட்டுக்குள் இருக்கிறது.   உண்மையாகவே இந்த மாத்திரைகளில் ஒரு குகை எஃபக்ட் உண்டு. குகைக்குள் சென்றுகொண்டே இருப்போம். குகை கிளைபிரிந்துகொண்டே இருக்கும். அந்தக்குகை ஏன் வருகிறது என்று கேட்டிருக்கிறேன். அப்போது சொன்னார்கள் மனிதன் கருவறையிலிருந்து குகைப்பாதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116205

சுபிட்சமுருகன், வாசிப்பு

விஷ்ணுபுரம் விருந்தினர் -5, சரவணன் சந்திரன் இருண்ட இரவில் ஒரு மின்னல் வீச்சு- போத மனம் விலகி விடும் நிலையில் அடிப்படையாக எஞ்சி இருக்கும் இயல்பில் ஏற்படும் அனுபவங்களை ஆன்மாவின் இருண்ட இரவு(dark night of the soul) என்பார்கள். பற்றிக் கொள்ள பிடிமானம் ஏதுமின்றி அதள பாதாளத்தில் முடிவற்று வீழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நிலை. எச்சரிக்கும் அச்சம் கொள்ளும் நியாயத்தை உணரும் உணர் மனம் விடுபட்டுவிட்ட நிலையில் கதை சொல்லியின் அனுபவங்கள் ஒரு வித அதிர்ச்சியையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116061