Daily Archive: December 23, 2018

விஷ்ணுபுரம் விருதுவிழா இன்று

இன்று, 23-12-2018 மாலை ஐந்தரை மணிக்கு கோவை ராஜஸ்தானி சங் [ஆர்.எஸ்.புரம்] கலையரங்கில்  பேராசிரியர் ராஜ் கௌதமன் அவர்களுக்கு 2018  ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருந்து வழங்கும் விழா நடைபெறுகிறது. பேராசிரியர் ராஜ் கௌதமன் தன் துணைவியுடன் கோவைக்கு வருகை தந்துள்ளார்   நேற்று முதலே எழுத்தாளர் சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன. எழுத்தாளர்களை வாசகர்கள் நேரடியாகச் சந்தித்து வினாக்களை தொடுத்து பதில்களைப் பெறும் வகையிலான உரையாடல் அரங்கு இது. விருது வழங்கிச் சிறப்பிக்கும்பொருட்டு வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி கல்கத்தாவிலிருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116243

விஷ்ணுபுரம் விருது அறிவிப்பு

  [2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பேராசிரியர் ராஜ் கௌதமன் அவர்களுக்கு வழங்கப்படுவதை ஒட்டி வாசித்தளிக்கப்படும் பரிசு அறிவிப்பு]   பண்பாடு என்பது நாம் வழக்கமாக நினைத்திருப்பதுபோல ஒரு நதியாக இயல்பாக ஒழுகிவருவது அல்ல. அது ஒவ்வொரு காலகட்டத்திலும் அப்போதிருக்கும் அறிவியக்கத்தால் அதற்கு முந்தைய வரலாற்றிலிருந்து பண்பாட்டுக்கூறுகளை தொகுத்துக்கொண்டு, மதிப்பிட்டு, தேவையானவற்றை தேர்வுசெய்து, அவற்றைக்கொண்டு கட்டமைக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு அளிக்கப்படுவது. தமிழ்ப்பண்பாடு இவ்வாறு தொடர்ச்சியாக தொகுப்பும் மறுவரையறையும் செய்யப்படுவதன் சித்திரத்தை பேராசிரியர் ராஜ் கௌதமன் எழுதிக்காட்டுகிறார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116240

விஷ்ணுபுரம் விழா:விருந்தினர்

    பேரா ராஜ் கௌதமன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது  வழங்கும் விழாவில் இன்று நிகழும் எழுத்தாளர் சந்திப்பில் அனிதா அக்னிஹோத்ரி கலந்துகொள்கிறார். வங்கத்தின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். அவருடைய கதைகள் தமிழாக்கம்செய்யப்பட்டு இந்தத் தளத்தில் வெளியாகியிருக்கின்றன   அனிதா அக்னிஹோத்ரி அறிமுகம்   அனிதா அக்னிஹோத்ரி கதைகள் நிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி ‘நினைவுகள்’ சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி ‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116179