Daily Archive: December 21, 2018

அஞ்சலி:பிரபஞ்சன்

  மூத்த தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன் இன்று [21-12-2018] மறைந்தார். பாண்டிச்சேரியின் கதையாசிரியர். முறையான தமிழ்க்கல்வி கொண்ட பிரபஞ்சன் எழுத்தாளராகவே வாழவேண்டும் என்ற  விழைவால் ஆசிரியர் பணியை மறுத்தவர். எழுதிவாழவேண்டும் என்னும் நிலை அவரை இதழாளர்தான் ஆக்கியது. இதழாளர் அல்லாமலிருந்தால் அவர் மேலும் எழுதியிருக்கக்கூடும்   யதார்த்தவாத முற்போக்கு பாணியின் முக்கியமான சிறுகதையாசிரியர்களில் ஒருவர் பிரபஞ்சன். ஆனால் இன்று ஆசிரியராக அவரை நிலைநிறுத்தும் முக்கியமான இலக்கியப்பங்களிப்பு பாண்டிச்சேரி வரலாற்றை மறுஆக்கம் செய்து அவர் எழுதிய ‘மானுடம் வெல்லும்’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116380

விஷ்ணுபுரம் விழா- நினைவுகளின் வழியே…

  விஷ்ணுபுரம் விருதுகள் -கடந்தவை   விஷ்ணுபுரம் விருதுவிழா 2010ல் எளிமையாகத் தொடங்கியது. என் கையிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் விழாவுக்கு. நண்பர்கள் கையிலிருந்து மேலுமொரு ஐம்பதாயிரம். மேலும் இருபதாயிரம் செலவாயிற்று. மணிரத்னம் வந்து தங்கி சென்ற செலவு அவரே செய்துகொண்டது. அவர் வந்தமையாலேயே விழா பெரிதாகத் தெரிந்தது. பெரிதாகத் தெரியவேண்டும் என்பது எங்கள் நோக்கம். விருது என்பதே ஒர் எழுத்தாளனை வாசக உலகம் திரும்பிப்பார்க்கச் செய்யும்பொருட்டுதானே? முதல் விருது ஆ. மாதவன் அவர்களுக்கு. தமிழின் தலைசிறந்த படைப்பாளிகளில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116261

அனிதா அக்னிஹோத்ரி -கடிதங்கள்

  எரிகல் ஏரி – அனிதா அக்னிஹோத்ரி அன்புள்ள ஜெ   அனிதா அக்னிஹோத்ரியின் கதைகள் தொடர்ச்சியாக இந்தத் தளத்தில் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் சிறந்தது எரிகல் ஏரிதான். அற்புதமான மொழியாக்கம். சுசித்ரா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்   அன்னையில் எரிந்த தீயைத் தேடிச்செல்லும் அவள் மகள்களின் கதை. அவர்களால் அதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஏன் அங்கே வந்துகொண்டே இருந்தாள்? அங்கே எதைக்கண்டாள்?   அந்த ஏரியில் விண்ணிலிருந்து ஒரு கல் எரிந்துகொண்டே விழுந்தது. அங்கே ஆழத்தில் அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116325

விஷ்ணுபுரம்விழா விருந்தினர்கள் -கடிதங்கள்

  அன்புள்ள ஜெ   விஷ்ணுபுரம் விருதுவிழா ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்துகொண்டே செல்கிறது. முதலில் முந்தையநாள் சந்திப்புகள் எளிமையாக சாதாரணமாக நடந்தன. சென்ற ஆண்டுக்கு முன் அவை முறைப்படுத்தப்பட்டன.சென்ற ஆண்டுமுதல் அவை கருத்தரங்கு போலவே நடந்தன.இவ்வாண்டு இன்னும் பெரிய அளவில் முன்னரே தயாரிக்கப்பட்டு சந்திப்புகள் நிகழ்கின்றன.   அழைக்கப்பட்டுள்ள பத்து எழுத்தாளர்களைப்பற்றிய அறிமுகக்குறிப்புகள் சுருக்கமானவை என்றாலும் ஆழமானவை. அவர்களின் பின்புலம் தனித்தன்மை பங்களிப்பு ஆகிய மூன்றும் செறிவாகச் சொல்லப்பட்டுள்ளன. அவர்களை வாசகர்கள் தொடர்ந்து வாசிப்பதற்கும் உதவியானவை. அவர்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116168

விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்

2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் ராஜ் கௌதமனைப்பற்றி கே.பி,வினோத் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் பாட்டும் தொகையும் என்னும் ஆவணப்படம் கோவை ராஜஸ்தானின் சங் அரங்கில் 23-12-2018 அன்று விருதுவிழா தொடங்குவதற்கு முன்பு திரையிடப்படும்   மாலை 530க்கு திரையிடல் தொடங்கும்   விஷ்ணுபுரம் விருதுபெறும் ஆளுமைகளைப்பற்றி ஓர் ஆவணப்படம் வெளியிடவேண்டும் என்னும் எண்ணம் கே.பி.வினோத் முன்வைத்தது. அப்போதுதான் என் மகன் ஒரு காமிரா வாங்கியிருந்தான் என்பதே  முதன்மையான காரணம். எங்களுக்கு எப்போதுமே நிதிக்கட்டுப்பாடு உண்டு. ஆகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116255

மதுபால் – கடிதம்

  அனிதா அக்னிஹோத்ரி,மதுபால் கதைகள் -கடிதம்   மதுபால் கதைகள் – கடிதங்கள் இனிய ஜெயம்   மதுபால் கதைகள் குறித்து ஸ்ரீநிவாஸ் எனும் வாசகர் எழுதி இருந்த கடிதத்தைமதுபால் கதைகள் – கடிதங்கள்வாசித்தேன். அவரை நகுலன் உடன் இணைத்து புரிந்து கொள்ள முயன்றது சிறப்பே ஆனால்  மதுபால் கதைசொல்லும் விதத்தில் ,வந்து விழும் படிமங்களின் துல்லியத்தில் மட்டுமே நகுலனின் சாயல் உண்டு . மற்றபடி முற்றிலும் நகுலன் சென்று தொடாத ஆழம் மற்றும் தனித்துவமான காட்சிக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116370