Daily Archive: December 15, 2018

ஓடும் ரயிலில் பாய்ந்தேறுவது எப்படி?- [சிறுகதை] மதுபால்

      விஷ்ணுபுரம்விழா- சிறப்பு விருந்தினர்- மதுபால் விஷ்ணுபுரம் விருதுவிழா 2018 ல் சிறப்புவிருந்தினராக கலந்துகொள்ளும் மதுபால் எழுதிய மலையாளக் கதை தமிழாக்கம்  அழகியமணவாளன்         ஆட்டோ ரிக்‌ஷாக்களும் கார்களும் ஆட்களும் நிறைந்த ஒரு ரயில்நிலையத்தின் காலைவேளை. பரபரப்பாக ஆட்கள் ஓடி வருகிறார்கள். சூரிய ஒளி பட்டு ரயில்நிலையம் ஜொலிக்கிறது. பயணிகள் பொறுமையின்றி காத்திருக்கும் நடைமேடைக்கு தண்டவாளம் வழியாக வடக்கு நோக்கிச் செல்லும் ஒரு ரயில் பாய்ந்துவருவதன் ஹெலிகாப்டர் ஷாட். டீசல்ப்புகையை கக்கியபடி ரயில் நடைமேடைக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116079

ஞானபீடம் -அமிதவ் கோஷ்

  நான் வாசித்தவரை இந்திய ஆங்கில எழுத்தாளர்களில் அமிதவ் கோஷ் மட்டுமே இலக்கியப்படைப்பாளியாக முக்கியமானவர் என்பது என் எண்ணம். இதை பல ஆண்டுகளாக இந்திய ஆங்கில எழுத்துக்களைப் பற்றி பேசும்போதெல்லாம் சொல்லி வந்திருக்கிறேன்.  அரிதாக நல்ல எழுத்துக்களை பார்ப்பதுமுண்டு, ஜனிஸ் பரியத் போல. ஆனால் இந்திய ஆங்கில எழுத்துக்களை தேடித்தேடி வாசிப்பவன் அல்ல என்பதையும் சொல்லியாகவேண்டும். ஏனென்றால் வாசித்தவை தரும் ஏமாற்றம் மேலும் வாசிக்கத் தூண்டுவதில்லை. அவற்றை வாசிப்பதைவிட அச்சூழலில் நின்று எழுதும் இந்தியமொழிப் படைப்பாளிகளை வாசிப்பது, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116116

ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-4

ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-3 4. ஒடுக்குமுறையின் பரிணாமம்   தமிழ் வரலாற்றின் சித்திரத்தை எடுத்துப்பார்த்தால் ஒன்றுக்கொன்று இணையாத பல கூறுகளாகவே அதை நாம் பெறுகிறோம். தொல்வரலாறு ஒன்று நமக்குள்ளது. ஆதிச்ச நல்லூரிலிருந்து இன்று கீழடி வரைக்கும் வந்து சேர்வது அது. தொல்லியல் சான்றுகளால் மட்டுமே ஆனது. மொழிச்சான்றுகள் அதனுடன் இணையும்படி நமக்குக்கிடைக்கவில்லை. இன்னொரு பக்கம் சங்க இலக்கியம் என்று சொல்லும் மொழிச்சான்றினூடாக நாம் உருவாக்கிக்கொள்ளும் காலகட்டம் ஒன்றுள்ளது. மிகக்குறைவாகவே சங்ககாலம் சார்ந்த தொல்லியல் சான்றுகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115913

விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -9, நரன்

தமிழில் ஜென் கருத்துக்களுக்கு ஓர் இலக்கியச் செல்வாக்கு உண்டு. ஆன்மிகமாக, மீபொருண்மைநோக்கி இயற்கையைப் பார்ப்பதும் வாழ்க்கையை விளக்கிக்கொள்வதும் இலக்கியத்தில் எந்நிலையிலும் தவறவிடமுடியாத ஒருகூறு. ஆனால் சென்ற அரைநூற்றாண்டாக தமிழ்ச்சிந்தனை வெளியில் நிகழ்ந்த மதநீக்கம் அல்லது மரபுமறுப்பு நோக்கு கவிஞர்களை இந்திய மரபின் தொன்மையான ஆன்மிக உணர்வுகளையும், மீபொருண்மை நோக்கையும், தொன்மக்களஞ்சியத்தையும் அறியாதவர்களாக ஆக்கியிருக்கிறது.   அதைவிட கவிதை வாசகர்கள் பெரும்பாலும் அவற்றில் எந்த அறிதலும் அற்றவர்கள். அறிதல் என்பது தெரிந்துகொள்ளுதல் அல்ல. உணர்வுரீதியான ஈடுபாடு. சிசிபஸின் தொன்மம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115903