Daily Archive: December 14, 2018

திருவனந்தபுரத்தில்…

  நேற்றுமாலை [12-12-2018]  திருவனந்தபுரம் திரைவிழாவிலிருந்து திரும்பினேன். நள்ளிரவில் வீடுவந்தேன். ஆறுநாட்கள் அங்கிருந்தேன். நாகர்கோயிலில் ஒரு திருமணத்திற்காக வரவேண்டியிருந்தது. ஆகவே ஒருநாள் முன்னரே திரும்பினேன்.அருண்மொழியும் சைதன்யாவும் இன்று [13-12-2018]தான் திரும்புகிறார்கள்.   ஆறுநாட்கள்மொத்தம் 26 படங்கள் பார்த்தேன்.   1 Foxtrot 2 One Step Behind the Seraphim 3 Everybody Knows 4 Manta Ray 5 Ash Is Purest White 6 Shoplifters 7 The Reports on Sarah and Saleem 8 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116088

ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-3

 ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-2 3 ஆய்வாளனின் வழித்தடம்    சிந்தனையாளராக ராஜ் கௌதமனின் தொடக்கம் தலித்தியம் அல்ல. அதற்கு முன்னரே இடதுசாரி நோக்கு கொண்ட ஒர் இலக்கிய விமர்சகராக அவர் இங்கு அடையாளப்பட்டிருந்தார். எண்பதுகளின் தொடக்கத்திலேயே மார்க்ஸியநோக்கு கொண்ட விமர்சகராக அவரைச் சுந்தர ராமசாமி தொடர்ச்சியாக கவனப்படுத்தி வந்தார். நான் கவனித்தது 1988ல் சுந்தர ராமசாமியின் காலச்சுவடின் முதல் இதழில் அவர் எழுதிய  ‘தண்டியலங்காரமும் அணுபௌதிகமும்’ என்ற கட்டுரை அந்தக்கட்டுரை. அன்று அதைப்பற்றி ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115676

விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -8, சி.சரவணக் கார்த்திகேயன்

    தமிழ் இலக்கியத்திற்குள் வெவ்வேறு வகையில் வாசகர்களும் எழுத்தாளர்களும் வந்துகொண்டிருக்கிறார்கள். கணிசமானவர்கள் வணிக- கேளிக்கை எழுத்து வழியாக வருவார்கள். பலர் அரசியலியக்கங்களின் கலாச்சார அமைப்புகள் வழியாக வருவார்கள். குறிப்பாக முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலையிலக்கியப் பெருமன்றம் போன்ற அமைப்புக்கள். முன்னோடி எழுத்தாளர்களின் நேரடி அறிமுகம் வழியாக வருபவர்கள் உண்டு   இளமையில் அனைவருமே எங்கும் கிடைக்கும் வணிக எழுத்துக்குத்தான் பழகுகிறார்கள். இலக்கியவாசகன் மிகக்குறைந்த காலத்திலேயே அவற்றை அழகியல்ரீதியாகவும் கருத்தியல்ரீதியாகவும் கடந்துவிடுவான். முதல் இலக்கியப் படைப்பை படித்ததுமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115889

ராஜ் கௌதமன்- முன்னோட்டம்

  கே.பி வினோத் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் பாட்டும் தொகையும் – ராஜ் கௌதமன் என்னும் ஆவணப்படத்தின் முன்னோட்டம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/116071