Daily Archive: December 11, 2018

‘குகை’ -சிறுகதை -4

[ 7 ] அந்தக்குகையில் அவ்வப்போது நான் வெள்ளையர்களைப்பார்த்து வந்தேன். பெரும்பாலும் அனைவருமே பழைய பிரிட்டிஷ் கால உடைகளை அணிந்திருந்தார்கள் .அனைவருமே அங்கே நெடுங்காலமாக உலவும் வழக்கம் கொண்டவர்கள் என்பது அங்கே சேற்றில் நடப்பதற்குரிய முழங்கால் வரை வரும் ரப்பர் சப்பாத்துகளை கையுறைகலையும் அணிந்திருந்தமையில் இருந்து தெரிந்தது. பெண்கள் கால்களில் நீண்ட சப்பாத்துகளை அணிந்து வெண்பட்டால் ஆன கையுறைகளை அணிந்திருந்தனர். அவர்கள் இந்த குகைவழிக்குள் இறங்கும் இடங்களில் இவை வைக்கப்பட்டிருக்கலாம்.   பொதுவாக அங்கு நான் பார்த்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115763

விஷ்ணுபுரம் விருந்தினர் -5, சரவணன் சந்திரன்

    முகநூல் உருவானபின்னர் தமிழிலக்கியத்தில் ஒரு புதிய அலை எழுந்தது. அனுபவங்களை குறைந்த சொற்களில், விவரணைகள் இல்லாமல், நேரடியாகச் சொல்லும் நடையும் உள்மடிப்புகளோ குறியீட்டுத்தளமோ ஏதுமில்லாமல் கதையின் மேல்தளம் வழியாகவே தொடர்புறுத்தும் கட்டமைப்பும் கொண்ட படைப்புக்கள் இவை.   முந்தைய தலைமுறை எழுத்தாளர்களான சு.வேணுகோபால் முதல் எஸ்.செந்தில்குமார் வரையிலானவர்களின் படைப்புக்களில் இருந்த நுண்ணிய புறவுலகச் செய்திகளின் விரிவு இவர்களிடம் இருக்கவில்லை. அடிப்படை உணர்ச்சிகளை விவரிக்கையில் அந்தத் தகவல்களை குறியீடுகளாக ஆக்கவும் முயலவில்லை. முகநூலில் எழுதும் குறிப்புகளால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115868

வள்ளலார்,ராஜ்கௌதமன் -போகன் சங்கர்

  ஒரு தனிமனிதரின் பாடல்கள் ஏனித்தனை பாரதூரமான விளைவுகளை உருவாக்கின என்பதை குறிப்பிடத்தக்க தலித் வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான ராஜ் கவுதமன் தனது நூலான ‘கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப்போக ‘என்ற நூலில் விவரிக்கிறார்.அவர் ஏறக்குறைய வள்ளலாரை சாதி சமயத்துக்கு எதிராக எழுந்த முதல் குரல் என்று வகைப்படுத்துகிறார். ஆகவே இந்த கூச்சல் வெறுமனே ஒரு தனிமனிதரின் ஆன்மீகப் பிரமைகள் குறித்தான  கூக்குரல்கள் அல்ல என்று சொல்கிறார். அது ஒரு நீண்ட ஒரு வரலாற்றுக்கண்ணியை  உடைப்பது  தொடர்பானது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116058

இமையத்தின் செல்லாத பணம்- உஷாதீபன்

  ஒரு நாவலைப் படித்து மனசு பொறுக்காமல் நான் அழுதது இதுவே முதல் தடவை. எனது வாசிப்பு அனுபவத்தின் இத்தனை ஆண்டுகளில் இதுவே முதல் நிகழ்வு.  ஆழ்ந்து அனுபவித்து உள்ளேயே அமிழ்ந்து போன அவலம். அந்தந்தக் கதாபாத்திரங்களின் தத்ரூபமான சித்தரிப்பினைக் கண்டு வியப்பது, நாவல் நிகழ்கின்ற கால கட்டத்தின் சமூக நடைமுறைகள், பேச்சு வழக்குகள், இயற்கை நிகழ்வுகள், சித்தரிக்கப்பட்டிருக்கின்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கை முறைகள், கதை நிகழ்கின்ற சூழல் இப்படிப் பலவும் ஒரு தேர்ந்த வாசகனை அவனது தீவிர …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115534