Daily Archive: December 10, 2018

‘குகை’ [சிறுகதை]-3

  குகை- சிறுகதை- பகுதி -1 குகை சிறுகதை-  பகுதி 2   [ 5 ] நகரத்தின் ஒவ்வொரு கட்டிடத்திற்கும் வெவ்வேறு தனித்தன்மைகள் இருந்தன நான் பெரும்பாலும் சென்று இளைப்பாறும் ஒர் இடத்திற்கு மேலே பேருந்துநிலையம் இருக்கிறது என்பதை வரைபடத்திலிருந்து கண்டுபிடித்தேன்.பேருந்து நிலையம் பகலிலும் இரவிலும் வண்ணங்களாலும் வெளிச்சங்களாலும் கூச்சல்களாலும் கொப்பளித்துக்கொண்டிருக்கும். அதற்கு அடியில் நீள்சதுரமான பெரிய கூடமொன்று இருந்தது அது சுவர்கள் கல்லடுக்கிக் கட்டப்பட்டவையாகவும் கூரை வளைவுகளால் இணைக்கப்பட்ட குவையால் ஆனதாகவும் இருந்தது. உள்ளே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115752

விஷ்ணுபுரம் விருந்தினர் -4, எஸ் செந்தில்குமார்

  மெல்லுணர்வுகளை நுண்ணிய மொழியில்  சொல்லாமல் உணர்த்திச் செல்லும் வண்ணதாசன் தலைமுறைக்குப்பின்னர் தமிழில் வரலாற்றிலும் தொன்மங்களிலும் கதைகளின் அடுக்குகளிலும் அலையும் ஒரு தலைமுறை எழுத்தாளர்கள் உருவானார்கள். நான், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, யுவன் சந்திரசேகர், பா.வெங்கடேசன் போன்றவர்கள்.   அதற்குப்பிந்தைய தலைமுறையில் காமம் வஞ்சம் போன்ற அடிப்படை உணர்ச்சிகளை, அடித்தள வாழ்க்கைப் பின்னணியில் நேரடியாக எழுதும் ஒரு தலைமுறை உருவாகியது. அதன் முதன்மையான முன்னோடி சு.வேணுகோபால். தொடர்ந்து எழுதிய கே.என்.செந்தில், ஜே.பி..சாணக்யா போன்றவர்களின் வரிசையில் முக்கியமானவர் எஸ்.செந்தில்குமார்.   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115858

பின்தொடரும் நிழலின் குரல் – கடிதம்

பின்தொடரும் நிழலின் குரல் விமர்சனங்கள்   அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு   வணக்கம்   பின்தொடரும் நிழலின் குரல் – வாசித்து முடித்தப் பின் தங்களுக்கு எழுதுவது. ஒரு நூற்றாண்டு கால நிகழ்வுகள் சிதறியும் சேர்த்தும் பொருள் கொள்ள தக்கதாய் வெவ்வேறு வடிவ  சாத்தியங்களில், முடிவுரை எழுதப்படாத  ஒரு பெரும்  உரையாடலில் பங்கு கொண்டது போன்ற ஒரு பேரனுபவம்.   கௌரியிலிருந்தே நாவலை புரிந்து கொள்ளத் துவங்குகின்றேன். குழந்தைகள் நம்மை இந்த கணத்தில் நிறுத்தியபடியே இருக்கின்றனர். கடந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115730

புறப்பாடு வாசிப்பு

  புறப்பாடு வாங்க     அன்புள்ள ஜெயமோகன் அவா்களுக்கு, நலமா ? வெகு நாட்களாக வாசிக்க வேண்டும் என்று எண்ணியிருந்த ”புறப்பாடு” வாசித்து முடித்துவிட்டேன். அனேஜன் பாலகிருஷ்ணன் ”புறப்பாடு” குறித்து எழுதியிருந்தச் சிறு குறிப்பு, புத்தகத்தை உடனே வாசித்தாக வேண்டும் என்ற எண்ணத்திற்க்கு வலு சோ்த்தது. புறப்பாடு – அறம் புறப்பாடு – ஒரு தன்வரலாறு புத்தமாக வாசிக்கலாம், மையப்பாத்திரத்தின் தன்மை மற்றும் அப்பாத்திரம் எதிர்கொள்ளும் சம்பவங்களால் அதை ஒரு நாவலாகவும் வாசிக்கலாம், ஒரு தேர்ந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115562

ரயிலில் கடிதங்கள்-10

  ரயிலில்… [சிறுகதை]   அன்புள்ள ஜெ,   மிகுபுனைவுக்காகவே  உங்களின் கதைகளை  படிப்பவன்  நான்.   நேரடியான  கூறுமுறை  கொண்ட  ரயிலில்  கதை என்னில் ஒரு  சமன்குலைவை   உருவாக்கிவிட்டது. தனிமையில்  இருளின் ஆழத்திலிருந்து  எழுந்து நிலைகொள்ளாமையில்  ஆழ்த்துகிறது.   இது ஒரு தொன்மாக இருந்தால் முற்பிறவிக்கோ இல்லை மறுபிறவிக்கோ ஊழ் என நீட்டலாம். நாட்டாரியல் கதையாக இருந்தால் யட்சியாகவோ மாடனாகவோ பருவடிவமாக அநீதியை என்றென்றைக்குமாக நிலைநாட்டலாம். ஆனால் இந்த கதை முகத்திலறைவதுபோல நேரடியாக உள்ளது. ரிச்சர்ட் டாகின்ஸ் மேற்கோள் போல “neither cruel nor kind, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115835