Daily Archive: December 7, 2018

திருவனந்தபுரம் திரைவிழா

  திருவனந்தபுரம் திரைவிழா எப்போதும் எனக்கு மிக அணுக்கமானது. கோவா திரைவிழாவுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். தொடக்க காலத்தில் அங்கிருந்த தீவிரம் மெல்ல மறைந்து மும்பை திரைப்பிரபலங்களை நோக்கி அது திரும்பத் தொடங்கியபோது நிறுத்திக்கொண்டேன். திருவனந்தபுரம் திரைவிழாதான் இந்தியத் திரைவிழாக்களில் பார்வையாளர்களின் தீவிரம் நிறைந்தது. அதை வெவ்வேறு திரையாளுமைகள் பதிவுசெய்திருக்கிறார்கள்   திருவனந்தபுரம் திரைவிழா கேரள அரசின் தீவிரமான பங்கேற்புடன் நிகழ்வது வழக்கம். திரையரங்குகள், வணிக அமைப்புக்களின் உதவியும் குறைவில்லாதிருக்கும். இம்முறை வெள்ளநிவாரணத்திற்கான பெருஞ்செலவு காரணமாக திரைவிழா நடத்தப்படவேண்டாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116007

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-2 தேவிபாரதி

    தமிழ் புனைவுலகில் அழுத்தமான பதிவை உருவாக்கிய படைப்பாளிகளில் ஒருவர் தேவிபாரதி. பள்ளியில் கணக்கராக பணியாற்றியவர். ஆரம்பகாலத்தில் சினிமாத்துறையிலும் பணியாற்றியிருக்கிறார் காமம், வஞ்சம், நம்பிக்கையிழப்பு போன்ற அடிப்படை உணர்ச்சிகள் மூர்க்கமாக வெளிப்படும் அடித்தள மக்களின் வாழ்க்கைப்புலம்தான் தேவிபாரதியின் களம். அவருடைய புனைவுலகின் முதல் தனித்தன்மை அது. அவருடைய மானுடக்கொள்கை எதிர்மறையானது. மனிதனின் ஆன்மிகமான அகவல்லமையையோ இயல்பான நன்மைநாட்டத்தையோ நம்பாதது. அவனுடைய இருண்ட ஆழங்களை நோக்கிச் செல்லும் பார்வை கொண்டது.   அவருடைய மூன்றாவது தனித்தன்மை மொழிநடை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115846

எஸ்.ரமேசன் நாயருக்கு சாகித்ய அக்காதமி விருது

இந்த ஆண்டு மலையாளத்திற்கான கேந்திர சாகித்ய அக்காதமி விருதைப் பெறுபவர் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவராகிய மலையாளக் கவிஞர் எஸ்.ரமேசன் நாயர். 1948 மே 3 ஆம் தேதி தக்கலைக்கு அருகே குமாரபுரத்தில் பிறந்தவர். மலையாளத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கேரள பாஷா இன்ஸ்டிடியூடில் உதவி ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் ஆகாசவாணியில் நிகழ்ச்சித்தயாரிப்பாளரானார். எஸ்.ரமேசன் நாயர் கற்பனாவாதக் கவிஞர். மலையாளத்தில் அத்தகையக் கவிதைகளுக்கு ஒரு நீண்ட மரபும் பெரிய வாசகர்ச்சூழலும் உண்டு,. சம்ஸ்கிருதம் நிறைந்த, காளிதாச மரபின் அழகியல்கொண்ட கவிதைகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115997

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அக்காதமி -கடிதங்கள்

எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி விருது அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   சமகால எழுத்தாளர்களில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள். அவரின் சிறுகதை, நாவல், கட்டுரை, மேடை பேச்சு என்று எதையும் தேடி தேடி வாசித்தும், கேட்டும் வருபவன் நான். அவருக்கு ‘சஞ்சாரம்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.  எழுத்துப்பணி தவிர்த்து, புத்தகம் வாசிப்பின் பயனை  பள்ளி, கல்லூரி, புத்தக கண்காட்சி என்று மேடைதோறும் ஒரு இயக்கம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115953

செல்பேசிக் கதிரியக்கம் ,பறவைகளின் இறப்பு- ஒரு செய்தி

  2.0 – சில பதில்கள்   இணையத்தில் இச்செய்தியை வாசித்தேன். நெதர்லாண்ட் நாட்டில் டச்சு ரயில்நிலையத்தின் 5g செல்பேசி சேவைக்கான கோபுரம் நிறுவப்பட்டதை ஒட்டி நூற்றுக்கணக்கான பறவைகள் இறந்தன. Hundreds of birds dead during 5G experiment in The Hague, The Netherlands   இத்தகைய செய்திகள் முன்னரும் வந்துள்ளன. பறவைகளின் கூட்டம் கூட்டமான இறப்பை ஆய்வாளர்களோ செய்தியாளர்களோ வெளிப்படுத்துவார்கள். உடனடியாக அது ‘நிரூபிக்கப்படவில்லை’ என்ற செய்தி பரப்பப்படும். அதற்குப்பின் எவர் என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116024