Daily Archive: December 6, 2018

அஞ்சலி: நெல் ஜெயராமன்

  இலக்குள்ள வாழ்க்கை அரிதாகவே அமைகிறது. அது நம் தெரிவுதான் என்றாலும் நம்மால் பெரும்பாலும் அதைத்தெரிவுசெய்ய முடிவதில்லை. நாம் நமது ஆசைகளாலும் நமது பலவீனங்களாலும் கட்டுண்டிருக்கிறோம். இலட்சியவாதிகள் நமக்கு பெரும் மனக்கிளர்ச்சியை அளிப்பது இதனால்தான். கோழி பருந்தை ஏறிட்டு பார்ப்பதுபோன்றது அது. பண்ணைக்கோழிகளுக்கு பார்ப்பதும் அமைவதில்லை   நம் காலகட்டத்தில் இலட்சியவாதிகளில் ஒருவரான நெல் ஜெயராமன் மறைந்தார். இயற்கைவேளாண்மை நிபுணர். மரபுசார்ந்த நெல்வகைகளை பேணி சேமிப்பதில் வாழ்க்கையை பொருள்கொண்டதாக்கியவர். இலட்சியவாதிகள் வாழ்க்கையை செய்தியாக ஆக்கிக்கொண்டவர்கள். நெல் ஜெயராமன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115966

2.0 – சில பதில்கள்

  மறுபடியும் சினிமா பற்றிய கேள்விகள். கிட்டத்தட்ட மின்னஞ்சல்கள் அனைத்துமே இக்கேள்விகளால் நிறைந்துவிட்டன. தனித்தனியாக பதில்போடுவது இயலாதது. ஆகவே ஒட்டுமொத்தமாக ஒரு விளக்கம். இத்துடன் முடித்துக்கொள்வோம்.   பல கேள்விகள் 2.0 வின் வசூல் பற்றிய ஐயங்கள். ரசிகர்கள் இதைப்பற்றி ஏன் கவலைப்படுகிறார்கள் என எனக்குப் புரியவில்லை. சினிமா செயல்படும் விதமே வேறு. இதழ்களோ, சமூகவலைத்தளங்களோ முற்றிலும் சம்பந்தமில்லாத திசையில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவை வெறும் செய்திக்கேளிக்கைகள் மட்டுமே. 2.0 படம் நவம்பர் 29 அன்று காலை வெளியாகியது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115778

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-1 ஸ்டாலின் ராஜாங்கம்

    தமிழக தலித் பண்பாட்டாய்வாளர்களில் இளையதலைமுறையினரில் முதன்மையானவர் என்று ஸ்டாலின் ராஜாங்கத்தைச் சொல்லலாம். அடிப்படையில் கல்வியாளர். ஆகவே அரசியல்களத்திலுள்ள  ஒற்றைப்படைத்தன்மை, மிகையுணர்ச்சிகரம் ஆகியவை அவரிடம் இருப்பதில்லை.   கல்வித்துறையின் முறைமையை சார்ந்து ஆய்வுமுடிவுகளை முன்வைப்பவர் ஆதலால் ஸ்டாலின் ராஜாங்கம் முழுமையான பண்பாட்டுச் சித்திரத்தை உருவாக்க எப்போதும் முயல்கிறார்   தமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பின்னர் உருவான தலித் அரசியல் மற்றும் அதன் வழியாக தலித் பண்பாட்டில் உருவான மாற்றம் ஆகியவையே ஸ்டாலின் ராஜாங்கத்தின் மையமான ஆய்வுக்களம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115841

வெளிச்சப்பாடு- கடிதம்

  ஆடைகளில்லாத தெய்வம்   அன்புள்ள ஜெ நிர்மால்யம் தொடர்பான உங்கள் கட்டுரையை வாசித்தேன் .   அ)நம் ஊரிலும் கேரளாவிலும் நிர்மால்ய தரிசனம் என்பது அதிகாலையில் மூல மூர்த்திக்கு அலங்காரங்கள் களையபட்ட தரிசனம் என்றே கணக்கு . ஆடை இல்லாத தரிசனம் என்று இல்லை . சிவன் கோவிலிலும் நிர்மால்ய தரிசனம் உண்டே .வட மொழியிலும் சமர்பிக்க பட்ட பொருட்களை நீக்குதல் என்று தான் பொருள் .அவ்வாறு நீக்க பட்டவற்றை முதலில் பெற்றுக் கொள்ளும் உரிமை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115725

ரயிலில்- கடிதங்கள் -9

ரயிலில்… [சிறுகதை] அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு   தங்களது ‘ரயிலில் ‘  சிறுகதை படித்தேன் .  தங்களின் நிறைய  சிறுகதைகள், ரப்பர் , கன்யாகுமரி , பின்தொடரும் நிழலின் குரல் , காடு, இப்படி சொல்லிக்கொண்டே போவேன்.  ஆனால் இந்த ரயிலில் சிறுகதை அப்படியே வேறு ஒரு வடிவில் என்  பள்ளி பருவ வாழ்க்கையில் என் குடும்பத்திற்கு நேர்ந்தது .  என் குடும்பத்தை பற்றிய ஒரு சிறு சித்திரத்தை கூறா விட்டால், எனக்கு எப்படி இந்த கதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115460