Daily Archive: December 5, 2018

எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி விருது

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அவருடைய சஞ்சாரம் என்னும் நாவலுக்காக இவ்வாண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.   கோயில்பட்டியில் எண்பதுகளில் தேவதச்சனின் நகைக்கடைச் சபையில் இருந்து கிளம்பிய எழுத்தாளர்களின் சிறுகுழு ஒன்று உண்டு. அன்றிருந்த இலக்கியத்தின் எல்லைகளை விரிவாக்கியவர்கள். மொழிபிலும் அமைப்பிலும் புதியவற்றை நிகழ்த்தியவர்கள். கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் ஆகிய மூவரும் அதில் முதன்மையானவர்கள்.   எஸ்.ராமகிருஷ்ணன் தமிழ்ச்சிறுகதையில் கூரிய யதார்த்தக் கதைகள் வழியாக நுழைந்தார்.பின்னர் மாயயதார்த்தப் புனைவுகளை எழுதினார். மீண்டும் யதார்த்தபாணிக் கதைகளுக்குள் சென்றார். அவருடைய புகழ்மிக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115892/

மஹாவீர் கர்ணா

  பரியேறும்பெருமாள் படத்தின் விமர்சனநிகழ்வுக்காகச் சென்னை வந்திருந்தேன். 30 ஆம் தேதியே சென்னைக்கு நானும் அருண்மொழியும் அஜிதனும் வந்தோம். நண்பர்கள் வினோத் அகரமுதல்வன் வந்து அழைத்துச்சென்றார்கள்   30 அன்று பிஹைண்ட் வுட்ஸ் அமைப்பின் பேட்டி, 2.0 பற்றி. சர்க்கார் படம் வெளிவந்தபோதே பேட்டி கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது பேசப்பிடிக்கவில்லை. இப்போது வேறுவழியில்லை. பொதுவாக சினிமா பற்றிய பேச்சுக்களைத் தவிர்க்கவே முயல்கிறேன்.   30 மாலை பத்து நண்பர்களுடன் சத்யம் திரையரங்கில் 2.0 பார்க்கச் சென்றேன். உற்சாகமான நாள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115797/

தமிழகப் பொருளியல்- ராம்குமார்

  குஜராத் – தமிழ்நாடு – வளர்ச்சியும் முன்னேற்றமும் – ஓர் ஒப்பீடு. கலையரசனின் கட்டுரை- பாலா இந்திரா காந்தி – சூழியல் அரசியலின் முன்னோடி! -பாலா   1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-3, பாலா 1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-2, பாலா 1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா   இந்தியாவில் தமிழகத்தின் இடமும் வளர்ச்சியும் முக்கியமான சமூக மாற்றங்களில் ஒன்று. இந்தியாவின் வேறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115735/

நிழல்யுத்தம் -கடிதங்கள்

.  நிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி   அன்புள்ள ஜெயமோகன் சார்,   வங்காள எழுத்தாளரின் “நிழல் யுத்தம்” சிறுகதை தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவ ஆவணம் போலவே இருக்கிறது. ஏன் அவரின் அனைத்து கதைகளும் திரில்லரை போல மனதை பதற வைக்கிறது? உண்மைக்கு மிகவும் அருகில் இருப்பதினாலா ? இல்லை நம்மை சுற்றி இந்த மாதிரியான விஷயங்கள் நடப்பது மட்டுமா? இல்லை இதுமட்டும்தான் நடக்கிறது என ஊடகங்களால் நம்ப வைக்க பட்டிருக்கிறோமா?   பழங்குடிகளுக்கும் நவீன மனிதர்களுக்குமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115647/

பழைய யானைக்கடை -கடலூர் சீனு

  கவிஞர் இசை, காலச்சுவடு வெளியீடான , .தனது ”சாம்பிள் சர்வே ”ஆய்வு நூலுக்கு சூட்டி இருக்கும் தலைப்பு , பழைய யானைக் கடை . பழைய இரும்பு கடை ,பழைய வீட்டு உபயோக பொருட்கள் கடை ,பழைய புத்தக கடை போல பழைய யானைக் கடை . யானை இருந்தாலும் ஆயிரம் பொன் ,இறந்தாலும் ஆயிரம் பொன் . அதை பழைய யானை கடையில் வாங்கினால் ஐநூறு பொன் என இருக்குமோ . பேரம் பேசாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114913/